Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உங்க தலைமுடி பலவீனமா இருக்கா? அத வலிமையாக்க வாரம் 2 முறை இந்த ஹேர் பேக்குகளைப் போடுங்க...
Hair Care Tips In Tamil: உங்கள் தலைமுடி பலவீனமாக இருக்கிறதா? தலையில் கை வைத்தாலே முடி உதிரத் தொடங்குகிறதா? தலைமுடி உதிர்வதை பார்க்கும் போது மிகுந்த வேதனையாக உள்ளதா? கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த தலைமுடி பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்த விருப்பமில்லையா?
அப்படியானால் தலைமுடியை வலிமையாக்கவும், அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் பல மருத்துவ குணம் வாய்ந்த பொருட்கள் நம் வீட்டு சமையலறையில் அதிகம் உள்ளன. அந்த பொருட்களைக் கொண்டு தலைமுடிக்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், தலைமுடி உதிர்வதைத் தடுப்பதோடு, முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.

இது தவிர இப்படி இயற்கை பொருட்களைக் கொண்டு பராமரிப்புக்களைக் கொடுக்கும் போது, முடி தொடர்பான பலவிதமான பிரச்சனைகளைத் தடுக்கலாம். கீழே தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில இயற்கை பொருட்களும், அவற்றைப் பயன்படுத்தும் முறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. தயிர் ஹேர் பேக்
தயிரில் உள்ள புரோட்டீன் மற்றும் புரோபயோடிக் போன்றவை தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பிற்கு நல்ல ஊட்டச்சத்தை அளித்து, தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முடியின் அமைப்பை மேம்படுத்துகிறது. கூடுதலாக தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் ஸ்கால்ப்பை சுத்தம் செய்ய உதவி புரிகிறது, பொடுகைக் குறைக்கிறது மற்றும் ஸ்கால்ப் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இப்படிப்பட்ட தயிரை ஒரு கப் எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் படும் படி தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை பயன்படுத்த முடி ஆரோக்கியமாக இருக்கும்.
2. மாசூர் பருப்பு ஹேர் பேக்
மாசூர் பருப்பில் உள்ள புரோட்டீன், இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை மயிர்கால்களை வலிமையாக்குவதோடு, முடி உடைவதைத் தடுக்கிறது மற்றும் முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
இப்படிப்பட்ட மாசூர் பருப்பை 1/2 கப் எடுத்து நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் படும் படி தடவி, 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும்.
3. அரிசி நீர் ஹேர் பேக்
அரிசி நீரில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், அமினோ அமிலங்கள் போன்றவை உள்ளன. இவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும், மயிர்கால்களை வலுவாக்கும், முடியின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும். அதோடு சேதமடைந்த முடிகளை சரிசெய்து, முடியின் அமைப்பை மேம்படுத்தும். அதற்கு 1 கப் அரிசியை நீரில் ஒருமுறை கழுவிவிட்டு, அதில் 2 கப் நீரை ஊற்றி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் அந்த நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் தலைமுடிக்கு ஷாம்புவை போட்ட பின் அந்த அரிசி நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
4. மாங்காய் பவுடர் ஹேர் பேக்
மாங்காய் பவுடரில் வைட்டமின் சி அதிகம் உள்ளன. இது ஸ்கால்ப்பில் கொலாஜன் உற்பத்தியை தூண்டிவிட்டு, தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் இது ஸ்கால்ப்பில் pH அளவை பராமரிக்க உதவுகிறது மற்றும் தலையில் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கிறது.
அதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் மாங்காய் பவுடரை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் படும்படி தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
5. முட்டை ஹேர் பேக்
முட்டையில் புரோட்டீன், கொழுப்பு அமிலங்கள், பயோடின் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் உள்ளன. இவை மயிர்கால்களுக்கு ஊட்டமளித்து, முடியை வலுவாக்குகிறது, ஸ்கால்ப்பை வறட்சியடையாமல் தடுக்கிறது மற்றும் முடி உதிர்வை தடுக்கிறது.
அதற்கு ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் படும்படி தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.
6. முல்தானி மெட்டி ஹேர் பேக்
முல்தானி மெட்டி வெறும் சருமத்தின் அழகை மட்டும் மேம்படுத்த உதவுவதில்லை. தலைமுடிக்கும் நன்மை விளைவிக்கும். முக்கியமாக இது ஸ்கால்ப்பில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்குவதோடு, மயிர்கால்களில் உள்ள அடைப்பை நீக்கி முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
அதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை எடுத்து, அதில் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் படும்படி தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் தலைமுடியை அலச வேண்டும்.



Click it and Unblock the Notifications