Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
பொடுகு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? இந்த வழிகளை ட்ரை பண்ணி பாருங்க...
Hair Care Tips In Tamil: குளிர்காலம் வந்தாலே நிறைய பேர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் பொடுகு. பொடுகு என்பது வறண்ட உச்சந்தலையின் விளைவாக ஏற்படுவதில்லை. உச்சந்தலையில் தோல் புதுப்பித்தலின் இயற்கையான செயல்முறை துரிதப்படுத்தப்படும்போது இது நிகழ்கிறது. இந்த பொடுகு ஒருவருக்கு பல்வேறு காரணங்களால் வரலாம். அதில் முதன்மையான ஒன்று மலாசீசியா குளோபோசா எனப்படும் ஒரு வகையான பூஞ்சை.
இந்த பூஞ்சை பொதுவாக பெரும்பாலானோரின் ஸ்கால்ப்பில் இருக்கும். இந்த பூஞ்சை மயிர்கால்களில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்களை உட்கொண்டு வாழ்கிறது. எப்போது உச்சந்தலையில் எண்ணெய் பசை அதிகமாக உள்ளதோ, அப்போது பொடுகு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது தவிர மிகுந்த மன அழுத்தம், குளிர்ச்சியான காலநிலை, அடிக்கடி தலைமுடியை அலசுவது போன்றவற்றாலும் பொடுகு அதிகரிக்கலாம்.

உங்களுக்கு பொடுகு அதிகமாக உள்ளதா? என்ன செய்தாலும் அந்த பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கவில்லையா? இதனால் மிகுந்த சிரமத்தை சந்திக்கிறீர்களா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளை முயற்சித்துப் பாருங்கள்.
1. டீ-ட்ரீ ஆயில்
* டீ-ட்ரீ ஆயிலில் சக்தி வாய்ந்த பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது பொடுகுத் தொல்லையை திறம்பட போக்க உதவி புரியும்.
* அதற்கு ஒரு பௌலில் 5-10 துளிகள் டீ-ட்ரீ ஆயிலை எடுத்து, அத்துடன் வழக்கமான ஷாம்புவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதைக் கொண்டு தலைமுடியை அலச வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்.
2. ஆப்பிள் சீடர் வினிகர்
* ஆப்பிள் சீடர் வினிகர் ஸ்கால்ப்பில் pH அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவி புரிந்து, பொடுகிற்கான பூஞ்சையின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
* அதற்கு தலைக்கு ஷாம்பு போட்டு அலசிய பின், ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் நீரை சம அளவில் எடுத்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி அலசி, சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
* இப்படி வாரம் ஒருமுறை பயன்படுத்தி வர, பொடுகில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
3. ஆஸ்பிரின்
* ஆஸ்பிரின் மாத்திரையில் உள்ள ஒரு முக்கியமான பொருள் தான் சாலிசிலிக் அமிலம். இது பெரும்பாலான பொடுகைப் போக்கும் ஷாம்புக்களில் இருக்கும் முக்கியமான மூலப்பொருளாகும்.
* இந்த ஆஸ்பிரின் மாத்திரைகளை 2 எடுத்து பொடித்து, அதை ஷாம்புவுடன் கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை தலைக்கு குளிக்கும் போது தலையில் ஊற்றி, 1-2 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.
4. பேக்கிங் சோடா
* பேக்கிங் சோடா ஸ்கால்ப்பில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் மற்றும் அதிகப்படியான பூஞ்சைகளைக் குறைக்க உதவுகிறது.
* அதற்கு தலைமுடியை நீரில் அலசி, பின் ஒரு கையளவு பேக்கிங் சோடாவை எடுத்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 1 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த வழி எண்ணெய் பசை ஸ்கால்ப்பை கொண்டவர்களுக்கு ஏற்ற சிறந்த வழியாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications