Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
உங்களுக்கு நீளமான பளபளப்பான கூந்தல் வேண்டுமா? அப்ப வீட்டில் 'இந்த' ஒரு ஹேர் மாஸ்க்கை யூஸ் பண்ணுங்க!
பெரும்பலான பெண்கள் அழகான பொலிவான நீளமான கூந்தலை பெறதான் விரும்புகிறார்கள். ஆனால், அதை பெறுவது என்பது மிகுந்த சவாலானது. ஏனெனில், இன்றைய நாளில் முடி உதிர்தல் என்பது அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனையாக உள்ளது.
முடி உதிர்தல், நரை முடி, பொடுகு, பொலிவிழந்த மற்றும் வலுவிழந்த முடி போன்ற பல்வேறு தலைமுடி பிரச்சனைகள் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இதற்கு சந்தையில் பல்வேறு தீர்வுகள் இருப்பதாக கூறப்பட்டாலும், அவை சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். அதனால், இயற்கையான பொருட்களை பயன்படுத்துவது உங்கள் தலைமுடி ஆரோக்கியத்திற்கு நல்லது.

வீட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கையான ஹேர் மாஸ்க்கை உருவாக்குவது உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிப்பதற்கும் சீரமைப்பதற்கும் ஒரு எளிய மற்றும் செலவு குறைந்த வழியாகும். நீங்கள் வீட்டில் செய்யக்கூடிய ஹேர் மாஸ்க்கிற்கான அடிப்படை பொருட்கள் மற்றும் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய் (2 டேபிள்ஸ்பூன்)
- தேன் (1 டேபிள் ஸ்பூன்)
- அவகேடோ (1/2 பழுத்த பழம்)
- முட்டை (1)
- அத்தியாவசிய எண்ணெய்கள் (சில சொட்டுகள்)
செய்முறை
ஒரு கிண்ணத்தில் நன்கு பழுத்த அவகேடா பழத்தை மசித்து எடுத்துக்கொள்ள வேண்டும். மிருதுவாகவும், கட்டிகள் இல்லாமல் இருக்கும் வரை நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும். மசித்த அவகேடோவுடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இந்த கலவையில் முட்டையை உடைத்து நன்கு கலக்க வேண்டும். அதில் உங்களுக்கு விருப்பமான அத்தியாவசிய எண்ணெய்களை சில துளிகளைச் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இப்போது உங்கள் ஹேர் மாஸ்க் தயாராக உள்ளது.
இந்த ஹேர் மாஸ்க்கை பயன்படுத்துவதற்கு முன், உங்கள் தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் ஈரப்படுத்தவும். இது ஹேர் மாஸ்க் தலைமுடியின் சமமாக பரவ உதவும். முடியின் வேர்களில் இருந்து தொடங்கி, எல்லா இடங்களிலும் பேக்கை பயன்படுத்த வேண்டும்.
ஷவர் கேப் அல்லது உங்கள் தலைமுடியை சூடான துண்டில் போர்த்தி கொள்ளவும். இந்த ஹேர் பேக்கை சுமார் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை அப்படியே வைத்திருந்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். லேசான ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்தி முடியை நன்றாக அலசிய பின், முடியின் மேற்புறத்தை மூடுவதற்கு குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி இறுதியாக அலச வேண்டும்.
ஹேர் மாஸ்க்கின் நன்மைகள்
உங்கள் தலைமுடி பராமரிப்பில் மிகவும் முக்கியமான ஓர் பொருள் தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, அவை முடியின் தண்டுக்குள் ஊடுருவி ஈரப்பதத்தையும் வலிமையையும் தருகின்றன. மேலும், இவை உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிப்பதோடு, பளபளப்பான கூந்தலையும் பெற உதவும்.
தேன் ஒரு இயற்கையான ஈரப்பதமூட்டி. அதாவது, இது உங்கள் தலைமுடியின் ஈரப்பதத்தை ஈர்க்கிறது மற்றும் தக்கவைக்கிறது. மேலும், இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. அவகேடா பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, அவை முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
வலுவான, ஆரோக்கியமான கூந்தலை பெற முட்டை உங்களுக்கு உதவும். இவை புரதத்தின் சிறந்த மூலமாகும். நல்ல வாசனை மற்றும் கூடுதல் நன்மைகளுக்காக அத்தியாவசிய எண்ணெய்கள் சில சொட்டுகள் இந்த ஹேர் மாஸ்க்கில் நீங்கள் சேர்க்கலாம்.
உதாரணமாக, லாவெண்டர் எண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும், ரோஸ்மேரி எண்ணெய் முடியை வலுப்படுத்துவதாக நம்பப்படுகிறது. இயற்கையான பொருட்களை கொண்டு வீட்டில் தயாரிக்கப்படும் இந்த ஹேர் மாஸ்க் உங்கள் தலைமுடிக்கு அதிசயங்களை செய்யும்.



Click it and Unblock the Notifications
