Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
முடி அதிகமா கொட்டி வழுக்கை ஆகுற மாதிரி இருக்கா? அப்ப தக்காளியை இப்படி யூஸ் பண்ணுங்க...
Hair Care Tips In Tamil: தற்போது நிறைய பேர் தலைமுடி கொட்டும் பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அதிகப்படியான மன அழுத்தம் ஒரு முக்கிய காரணமாக இருப்பதோடு, ஆரோக்கியமற்ற சில பழக்கங்கள், காலநிலை மற்றும் தலைமுடிக்கு போதுமான பராமரிப்பு கொடுக்காமல் இருப்பது போன்றவையும் முக்கிய காரணங்களாக உள்ளன.
இந்த தலைமுடி உதிரும் பிரச்சனைக்கு நிறைய பேர் கடைகளில் விற்கப்படும் தலைமுடி பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அவற்றில் உள்ள கெமிக்கல் சிலருக்கு தலைமுடி உதிர்வை இன்னும் அதிகமாக்கி, வழுக்கை ஏற்படும் அளவிற்கு கொண்டு சென்றுவிடுகின்றன. இந்நிலையில் இயற்கை வழிகளை நாடுவதே சிறந்தது.

தலைமுடி உதிர்வைக் கட்டுப்படுத்தவும், முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும், வழுக்கையாகும் நிலையில் உள்ள இடத்தில் முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் நம் வீட்டு சமையலறையில் அற்புதமான ஒரு பொருள் உள்ளது. அது தான் தக்காளி. ஏனெனில் தக்காளியில் அத்தியாவசிய வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற முடியின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் வேண்டிய சத்துக்கள் உள்ளன.
இந்த தக்காளியைக் கொண்டு ஒருசில ஹேர் பேக்குகளை போடுவதன் மூலம், அது தலைமுடி உதிர்வைக் குறைப்பதோடு, முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இப்போது சில தக்காளி ஹேர் பேக்குகளைக் காண்போம்.
1. தக்காளி ஜூஸ் மசாஜ்
* தலைமுடி உதிர்வைக் குறைத்து, ஸ்கால்ப்பில் முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்க 1-2 தக்காளியை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை வடிகட்டி சாறு எடுத்து, அதை நேரடியாக ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பின்பு அதை 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், நல்ல பலனைக் காணலாம்.
2. தக்காளி மற்றும் கற்றாழை ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஸ்கால்ப் மற்றும் முடியில் படும்படி தடவி, 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
3. தக்காளி ஜூஸ் மற்றும் தேங்காய் எண்ணெய்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்து, வெதுவெதுப்பாக சூடேற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் தக்காளி சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, ஷவர் கேப்பை தலையில் அணிந்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.
4. தக்காளி ஜூஸ் மற்றும் வெங்காய ஜூஸ் ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு கொண்டு தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தி வர, முடி உதிர்வது குறைவதோடு, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முடியின் வளர்ச்சியும் தூண்டப்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications