Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வாரத்திற்கு ஒருவர் எத்தனை முறை தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்கணும் தெரியுமா?
Hair Care Tips In Tamil: தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல் காரணமாக தலையில் அழுக்குகள் அதிகம் சேர்கின்றன. அத்துடன் அதிகமாக வியர்ப்பதனால் அந்த அழுக்குகள் ஸ்கால்ப்பில் அப்படியே தங்கி, ஒரு கட்டத்தில் பொடுகு மற்றும் பிற தொற்றுக்கள் ஏற்பட வழிவகை செய்கின்றன. இதன் விளைவாக ஒரு கட்டத்தில் தலைமுடி கொத்து கொத்தாக கொட்டத் தொடங்கும்.
இதைத் தடுக்க வேண்டுமானால், ஒருவர் தங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். முக்கியமாக தலைமுடியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தலைமுடியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமானால் ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்க வேண்டும்.

ஆனால் வாரத்திற்கு ஒருவர் எத்தனை முறை தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்கலாம் என்ற கேள்வி பலரது மனதிலும் இருக்கும். இதற்கான பதில் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஏனெனில் அனைவருக்கும் ஒரே மாதிரியான தலைமுடி இருப்பதில்லை. தலைமுடியில் பல வகைகள் உள்ளன. தலைமுடியின் வகைக்கேற்ப ஷாம்பு போடும் எண்ணிக்கையும் வேறுபடும். இப்போது எந்த வகை தலைமுடியைக் கொண்டவர்கள் வாரத்திற்கு எத்தனை முறை ஷாம்பு போட்டு குளிக்கலாம் என்பதைக் காண்போம்.
எண்ணெய் பசை முடியைக் கொண்டவர்கள்...
நீங்கள் எண்ணெய் பசை முடியை கொண்டவரானால், நிச்சயம் உங்கள் தலைமுடி எப்போதும் பிசுபிசுவென்றும், கனமாகவும் இருக்கும். இப்படிப்பட்ட தலைமுடியைக் கொண்டவர்கள் தலைக்கு குளித்த நாட்களைத் தவிர, மற்ற நாட்களில் எண்ணெய் வழிந்த முகத்துடன் இருப்பார்கள். இத்தகைய முடியைக் கொண்டவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு ஷாம்பு போட்டு குளிப்பது நல்லது. அதுவும் கெமிக்கல் அதிகம் நிறைந்த ஷாம்புக்களை பயன்படுத்தாமல், மைல்டு மற்றும் சல்பேர் இல்லாத ஷாம்புக்களைப் பயன்படுத்த வேண்டும். இப்படி பயன்படுத்துவதன் மூலம் எண்ணெய் அதிகம் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும். முடியும் ஆரோக்கியமாக இருக்கும்.
வறண்ட முடியைக் கொண்டவர்கள்...
வறண்ட முடியைக் கொண்டவர்களின் தலைமுடி எப்போதும் பொலிவிழந்து, தேங்காய் நார் போன்று இருக்கும். மேலும் இவர்களுக்கு முடி வெடிப்புக்களும் அதிகமாக இருக்கும். இத்தகைய முடியைக் கொண்டவர்கள் அடிக்கடி தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்கக்கூடாது. அப்படி குளித்தால் தலைமுடியில் உள்ள இயற்கை எண்ணெய் முற்றிலும் நீங்கி, முடி இன்னும் வறண்டு போகும். எனவே இவர்கள் வாரத்திற்கு 2 முறை தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்கலாம். அதுவும் முடியில் ஈரப்பசையைப் பராமரிக்க ஹைட்ரேட்டிங் ஷாம்புக்கள் மற்றும் கண்டிஷனர்களைப் பயன்படுத்த வேண்டும்.
சாதாரண முடியைக் கொண்டவர்கள்...
சாதாரண முடியைக் கொண்டவர்களுக்கு தலைமுடி மிகவும் வறண்டோ அல்லது மிகவும் எண்ணெய் பசையுடனோ இருக்காது. இவர்கள் வாரத்திற்கு 2-3 முறை தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்கலாம். அதுவும் இவர்கள் மென்மையான ஷாம்புக்களை வாங்கிப் பயன்படுதினால், தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் எண்ணெய் பசையின் அளவு பராமரிக்கப்படும்.
சுருட்டை முடியைக் கொண்டவர்கள்...
சுருட்டை முடியைக் கொண்டவர்களின் தலைமுடியும் சற்று வறண்டதாகவே இருக்கும். ஏனெனில் ஸ்கால்ப்பில் இருந்து எண்ணெய் பசையானது தலைமுடியின் முனை வரை பயணிக்க கடினமாக இருக்கும். இதன் விளைவாக இவர்களின் தலைமுடி பார்க்க வறண்டு போனது போன்று இருக்கும். இத்தகையவர்கள் வாரத்திற்கு ஒருமுறை அல்லது 2 முறை ஷாம்பு போடுவது போதுமானதாக இருக்கும். அதுவும் இவர்கள் சல்பேட்-ப்ரீ ஷாம்புக்களை பயன்படுத்துவதோடு, டீப் கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும். இதனால் சுருட்டை முடியின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கலாம்.
மென்மையான முடியைக் கொண்டவர்கள்...
மென்மையான முடியைக் கொண்டவர்களின் தலைமுடி விரைவில் எண்ணெய் பசையுடன் காட்சியளிக்கும். எனவே இத்தகைய தலைமுடியைக் கொண்டவர்கள் வாரத்திற்கு 3-4 முறை ஷாம்பு போட்டு குளிப்பது, தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் முடியும் நன்கு சுத்தமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications