Latest Updates
-
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
முடி பளபளன்னு நீளமா வளரணுமா? அப்ப இந்த 5 எண்ணெய்களில் ஒன்றை தினமும் யூஸ் பண்ணுங்க...!
ஒருவரின் தோற்றத்தை அழகாக மாற்றுவதில் அவர்களின் கூந்தல் மிகவும் முக்கியப்பங்கு வகிக்கிறது. அது சேதமடையும் போது அது ஒட்டுமொத்த தோற்றத்தையும் பாதிக்கிறது. உங்கள் கூந்தல் நீளம் குறைவாகவும், சேதமடைந்ததிருக்கும் போது, கூந்தலின் ஈரப்பதத்தை மீட்டெடுக்கவும், பலவீனத்தைக் குறைக்கவும், ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சரியான முடி எண்ணெயைத் தேர்ந்தெடுப்பது அவசியம். இந்த பிரச்சினைகளை குணப்படுத்த நிபுணர்கள் சில எண்ணெய்களை பரிந்துரைத்துள்ளார்கள். அந்த எண்ணெய்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேங்காய் எண்ணெய்
வேறு என்ன தலைமுடி எண்ணெய் என்றாலே முதலில் தேங்காய் எண்ணெய் தான். குறைந்த மூலக்கூறு எடையை கொண்ட லாரிக் அமிலம் தேங்காய் எண்ணெயில் நிறைந்திருக்கிறது. இது சேதமடைந்த மற்றும் ஆரோக்கியமான முடியின் மயிர்கால்களுக்குள் ஆழமாக ஊடுருவி கூந்தலில் புரத இழப்பை நன்றாக குறைக்கிறது. ஆழமாக ஊடுருவுவதால் முடியை உள்ளிருந்து வலுவாக்குகிறது. மேலும் உடையாமல் தடுக்க உதவுவதோடு மென்மையாகவும் இருக்க செய்கிறது. இது சுற்றுச்சூழல் மாசுபாடால் ஏற்படும் சேதத்திற்கு எதிராக ஒரு பாதுகாப்பு அரணாகவும் செயல்படுகிறது. குளிப்பதற்கு முன் அல்லது பின் சிறந்த சிகிச்சை பண்புகளோடு திறம்பட செயல்படுகிறது. அதன் ஊட்டமளிக்கும் மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகள் உலர்ந்த, மற்றும் உடையக்கூடிய கூந்தலுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.
ஆர்கான் எண்ணெய்
ஆர்கான் எண்ணெய் "திரவ தங்கம்" எனவும் அழைக்கப்படுகிறது. இந்த ஆர்கான் எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இது முடியின் ஈரப்பதத்தை தக்கவைத்து மென்மையாக்குவதோடு, இயற்கையான பளபளப்பையும் கொடுக்கிறது. இது உலர்ந்த, சேதமடைந்த மயிர்கால்களுக்கு புத்துயிர் அளிப்பதால் முடி உதிர்தலையும் கட்டுப்படுத்துகிறது. இதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காரணமாக, முடியை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டல் ஏற்படும் சேதத்திலிருந்தும் பாதுகாக்கிறது. இது நீளம் அல்லது அடர்த்தி குறைந்த முடியை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது.
விளக்கெண்ணெய்
இது ஆமணக்கு எண்ணெய் எனவும் அழைக்கப்படுகிறது. இதில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருப்பதால், முடி வளர்ச்சியை அதிகரிக்கின்றன. மேலும் மயிர்கால்களை வலுப்படுத்தி கூந்தல் உதிர்வை தடுக்க உதவுகின்றன. அதிக அடர்த்தியை கொண்டிருக்கும் இந்த எண்ணெய் நிலைத்தன்மை, கூந்தல் வறட்சி, மற்றும் உடையக்கூடிய பலவீனமான முடிக்கு ஊட்டமளிக்கிறது. முடியின் முனை பகுதியில் ஏற்படும் பிளவை தடுப்பதற்கும் ஒரு சிறந்த தேர்வாகிறது. அதன் பலன்களை முழுவதும் பெற, இந்த எண்ணெயை தடவி உச்சந்தலையில் மசாஜ் செய்து இரவு முழுவதும் விட்டு விடவும். இது முடியின் நுண்ணறைகளுக்கு ஆழமாக ஊட்டமளித்து உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயில் சக்திவாய்ந்த வைட்டமின் ஈ, மேலும் ஒலிக் மற்றும் லினோலிக் அமிலங்கள் போன்ற மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் குறிப்பிட்ட அளவில் உள்ளன. இது உலர்ந்த முடியை மென்மையாக்குகிறது மற்றும் ஈரப்பதமாக்குகிறது, அதே நேரத்தில் புற ஊதா கதிர்வீச்சிலிருந்து கூந்தலை பாதுகாக்கிறது. பாதாம் எண்ணெயால் முடியின் தண்டுக்குள் ஆழமாக ஊடுருவ முடியாது, இருப்பினும் இது முடியின் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கிறது மற்றும் மற்றும் கூந்தலுக்கு பளபளப்பை சேர்க்கிறது, இது சேதமடைந்த முடிக்கு ஏற்றது.
ரோஸ்மேரி எண்ணெய்
ரோஸ்மேரி எண்ணெய் அதன் சக்திவாய்ந்த நன்மைகளுக்காக சமீபத்தில் பிரபலமடைந்து வருகிறது. உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தைத் தூண்டுவதற்கு பெயர் பெற்ற இது, முடி நுண்குழாய்களைப் புதுப்பிக்கவும், முடி பலவீனமாவதைக் குறைக்கவும், ஆரோக்கியமான, வலுவான முடியின் வளர்ச்சியை ஆதரிக்கவும் உதவுகிறது. இதில் சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றிகளும் நிறைந்துள்ளது மற்றும் அழற்சி எதிர்ப்பு நன்மைகளைக் கொண்டுள்ளது, இது வறண்ட அல்லது எரிச்சலூட்டும் உச்சந்தலையை குணப்படுத்தும் மற்றும் சேதமடைந்த முடியை குணப்படுத்தும்.



Click it and Unblock the Notifications












