Latest Updates
-
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (19 July 2026-25 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது..! -
பரோட்டா கடை சிக்கன் சால்னா டேஸ்ட்டா இருப்பதன் ரகசியம் இதாங்க! -
ராகு-கேதுவின் பிடியில் இருந்து விடுபடும் 6 கிரகங்கள்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்! -
தினமும் சிறிது முருங்கை இலையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
பட்டாணி சாதமும், கத்திரிக்காய் கிரேவியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்று ஒரே நாளில் உருவாகும் ஹன்ஸ், கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
சர்க்கரை நோயாளிகளுக்கான அவல் இட்லியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க! -
இன்றைய ராசிபலன் 18 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்
ஆண்களே! முடி அதிகமா கொட்டுதா? தலை வழுக்கையாக கூடாதா? அப்ப இந்த ஹேர் மாஸ்க்குகளை வாரம் ஒருமுறை போடுங்க...
Hair Care Tips In Tamil: ஆண்களுக்கு தலைமுடி குட்டையாக இருந்தாலும், பெண்களைப் போன்றே ஆண்களும் தலைமுடி உதிர்வை சந்திப்பதுண்டு. அதுவும் ஆண்கள் ஹெல்மெட்டை அதிகம் அணிவதால், அவர்களுக்கு தலைமுடி அதிகம் உதிர வாய்ப்புள்ளது. இது தவிர வேலைப்பளுவினால் ஏற்படும் மன அழுத்தம், மோசமான உணவுப் பழக்கம் போன்றவையும் தலைமுடி உதிர்வுக்கு வழிவகுக்கும்.
இப்படி தலைமுடி உதிர்வை சந்திக்கும் ஆண்கள், காலநிலை மாற்றமடையும் போது, தலைமுடியில் வறட்சியையும் சந்திக்கக்கூடும். இப்படி ஆண்கள் தாங்கள் சந்திக்கும் தலைமுடி தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டுமானால், பெண்களைப் போன்றே தலைமுடிக்கு பராமரிப்புக்களை கொடுக்க வேண்டும்.

அதுவும் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு ஒருசில ஹேர் மாஸ்க்குகளைப் போட வேண்டும். இப்படி ஹேர் மாஸ்க்குகளைப் போடுவதால், தலைமுடிக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, தலைமுடி வலுபெறும்.
இதன் விளைவாக தலைமுடி உதிர்வது குறையும், முடியின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும், வறட்சி தடுக்கப்பட்டு, முடி மென்மையாக இருக்கும். இப்போது ஆண்களுக்காக சில சிறந்த நேச்சுரல் ஹேர் மாஸ்க்குகளைக் காண்போம்.
1. வறண்ட தலைமுடிக்கான ஹேர் மாஸ்க்
சில ஆண்களின் தலைமுடி மென்மையின்றி வறண்டு இருக்கும். இப்படி ஈரப்பதமின்றி வறண்டுள்ள தலைமுடியை மென்மையாக்க ஜொஜோபா எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஹேர் மாஸ்க் உதவி புரியும். அதோடு இந்த ஹேர் மாஸ்க் தலைமுடியை வலிமையாக்கி, தலைமுடி உதிர்வையும், தலைமுடி உடைவதையும் தடுக்கும்.
இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஜொஜோபா எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை வெதுவெதுப்பாக சூடேற்ற வேண்டும்.
பின்பு வெதுவெதுப்பான நிலையில் அந்த எண்ணெயை தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால், முடி வறட்சி தடுக்கப்படுவதோடு, முடி உதிர்வதும் குறையும்.
2. சுருட்டை முடிக்கான ஹேர் மாஸ்க்
சுருட்டை முடி உள்ள ஆண்களின் தலைமுடி கரடுமுரடாக இருக்கும். உங்கள் தலைமுடியும் இப்படி இருக்குமானால், இந்த ஹேர் மாஸ்க்கை போடுங்கள். அதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல், 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 3 டேபிள் ஸ்பூன் வைட்டமின் ஈ ஆயில் மற்றும் சிறிது ரோஸ்மேரி இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் இவை அனைத்தையும் பிளெண்டரில் போட்டு 10 நொடிகள் நன்கு அரைக்க வேண்டும்.
பின்பு அவற்றை வடிகட்டிக் கொள்ள வேண்டும். அதன் பின் அதில் சிறிது டீப் கண்டிஷனரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த கலவையை தலைமுடியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், சுருட்டை முடி மென்மையாக சிக்கலின்றி இருக்கும்.
3. தலைமுடி உதிர்வைத் தடுக்கும் ஹேர் மாஸ்க்
ஆண்களே! உங்கள் தலைமுடி அதிகம் உதிர்கிறதா? அப்படியானால் இந்த ஹேர் மாஸ்க் நல்ல பலனைத் தரும். இந்த ஹேர் மாஸ்க்கில் வாழைப்பழம் பயன்படுத்தப்படுகிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின்கள் மற்றும் இயற்கை எண்ணெய்கள் உள்ளன. இவை அனைத்தும் ஆரோக்கியமான தலைமுடிக்கு வேண்டிய சத்துக்களாகும்.
இந்த ஹேர் மாஸ்க்கிற்கு நன்கு கனிந்த 2 வாழைப்பழத்தை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்த கொள்ள வேண்டும்.
பின்பு அதை தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் படும்படி தடவி 5 நிமிடம் நன்கு ஊற வைத்து, பிறகு வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும். இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், தலைமுடி உதிர்வது நின்றுவிடும் மற்றும் தலைமுடியும் அடர்த்தியாக வளரும்.



Click it and Unblock the Notifications