உங்களுக்கு முடி நீளமாக வளரணுமா? அப்ப இந்த காய்கறிகளை அதிகமா சாப்பிடுங்க போதும்...

Hair Care Tips In Tamil: காய்கறிகள் நம் உடல் ஆரோக்கியத்தில் மட்டுமல்ல நம் அழகு பராமரிப்பிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. காய்கறிகளில் ஏராளமான நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை உங்கள் கூந்தலின் அடர்த்தி மற்றும் நீளத்தை பராமரிக்க பெருமளவில் உதவுகிறது.

கீரைகள், கேரட் போன்ற காய்கறிகளை நீங்கள் எடுத்துக் கொள்ளும் போது நல்ல முடி வளர்ச்சியை பெறுவீர்கள். காய்கறிகளில் உள்ள சத்துக்கள் உங்கள் கூந்தல் உதிர்தலை தடுத்து கூந்தல் வளர்ச்சியை மேலும் மேலும் அதிகரிக்க உதவுகிறது. சரி வாங்க உங்கள் முடி நீளமாக வளர எந்த மாதிரியான காய்கறிகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்பதை பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

Hair Care Tips: Best Vegetables For Hair Growth In Tamil

கீரைகள்

உங்கள் கூந்தல் வளர்ச்சியை தூண்டுவதில் கீரைகள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. கீரைகளில் நிறைய நார்ச்சத்துக்கள், இரும்புச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை காணப்படுகிறது. இதில் துத்தநாகம் நிறைய அளவில் காணப்படுகிறது. இது கூந்தல் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்த விரும்புபவர்கள் கீரைகளை தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டு வரலாம்.

கேரட்

கேரட் கூந்தல் வளர்ச்சியை தூண்டும் இரண்டாவது காய்கறியாகும். கேரட்டில் வைட்டமின் பி7 அல்லது பயோட்டின் சத்துக்கள் காணப்படுகிறது. இது கூந்தலுக்கு ஒரு சிறந்த டானிக்காக செயல்படுகிறது. இதிலுள்ள பயோட்டின் முடியின் வேர்களை வலுப்படுத்த உதவுகிறது. கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன்கள் காணப்படுகிறது.

இந்த சத்துக்கள் முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. சில கேரட்டை எடுத்து தண்ணீரில் போட்டு வேக வையுங்கள். பிறகு அந்த கேரட்டை பேஸ்ட்டாக்கி வேக வைத்த தண்ணீரை கலக்கி தலையில் மாஸ்க் மாதிரி தடவிக் கொள்ளுங்கள். 30 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசிக் கொள்ளுங்கள். இது முடி வளர்ச்சியை தூண்டவும், கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது.

வெங்காயம்

வெங்காயத்தில் கூந்தலுக்கு உதவக் கூடிய நிறைய சத்துக்கள் காணப்படுகிறது. இதில் துத்தநாகம், இரும்புச்சத்து, பயோட்டின் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இவை முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. வெங்காயம் கூந்தல் முன்கூட்டியே நரைப்பதை தடுக்கிறது. எனவே உணவில் வெங்காயத்தை அதிகளவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டீன்கள் அதிகளவில் காணப்படுகிறது. நம் உடலானது இந்த பீட்டா கரோட்டீனை வைட்டமின் ஏ ஆக மாற்றுகிறது. இந்த பீட்டா கரோட்டீன் உடல் செல்களை சரி செய்ய உதவுகிறது. இது கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது.

தக்காளி

தக்காளியில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் லைகோபீன்கள் காணப்படுகிறது. இந்த தக்காளி சாற்றை உச்சந்தலையில் தடவி வந்தால் கூந்தல் பளபளப்பாக இருக்கும். இது கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்தவும் கூந்தலை பொலிவாக வைக்கவும் உதவுகிறது.

பூண்டு

பூண்டு துர்நாற்றம் வீசக் கூடிய ஒன்றாக இருந்தால் கூட பூண்டு கூந்தலுக்கு சிறந்த டானிக்காக செயல்படுகிறது. இதில் மிகக் குறைந்த அளவே கலோரிகள் காணப்படுகிறது. பூண்டில் அதிகளவு கந்தகம் காணப்படுகிறது. இது கூந்தல் நீளமாக வளர உதவுகிறது.

பீட்ரூட்

பீட்ரூட் சிவப்பு நிறத்தில் காணப்படுவதற்கு அதில் லைகோபீன்கள் காணப்படுகிறது. இந்த லைகோபீன்கள் முடி வளர்ச்சியை துண்டுகிறது. பீட்ரூட் மட்டுமல்ல இதர சிவப்பு காய்கறிகள் கூட கூந்தலுக்கு ஆரோக்கியமானது. பீட்ரூட்டில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகிறது.

கறிவேப்பிலை

கறிவேப்பிலை இலைகள் கூந்தல் உதிர்தலை தடுக்க உதவுகிறது. கறிவேப்பிலை இலைகள் கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. இது முடி வளர்ச்சிக்கு சிறந்த டானிக்காக உதவுகிறது. இது கூந்தலை பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

பிரஞ்சு பீன்ஸ்

பிரஞ்சு பீன்ஸில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதிலுள்ள வைட்டமின் ஈ முடியை பொலிவாக வைக்க உதவுகிறது. இது கூந்தலை முன்கூட்டியே நரைப்பதை தடுக்க உதவுகிறது. கூந்தலுக்கு சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது.

பச்சை மிளகாய்

பச்சை மிளகாயில் கரோட்டீன்கள், வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. பச்சை மிளகாய் கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. புதிய மயிர்க்கால்களை ஊக்குவிக்க உதவுகிறது. உச்சந்தலையில் சேதமடையும் செல்களை சரி செய்ய உதவுகிறது. புதிய மயிர்க்கால்களை உருவாக்கி முடி அடர்த்தியை பாதுகாக்க உதவுகிறது.

ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற காய்கறிகள்

ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற காய்கறிகளான குடை மிளகாய் போன்றவற்றில் முடி உதிர்தலை தடுக்கும் சத்துக்கள் காணப்படுகிறது. இந்த குடை மிளகாயில் பீட்டா கரோட்டீன்கள் அதிகளவில் காணப்படுகிறது. இவை கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் சரும ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல கூந்தல் ஆரோக்கியத்திலும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. வெள்ளரிக்காயை பேஸ்ட்டாக்கி உச்சந்தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து வாருங்கள். இதனுடன் வெந்தய பொடியையும் சேர்த்து தலையில் அப்ளை செய்து வரலாம். இது உங்கள் கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. வெள்ளரிக்காய் உங்கள் கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை வழங்கி கூந்தலை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

Story first published: Thursday, August 10, 2023, 19:25 [IST]
Desktop Bottom Promotion