Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
அக்குள் துர்நாற்றம் அதிகமா வீசுதா? அப்ப இந்த பாட்டி வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க...
Smelly Armpits: கோடைக்காலத்தில் பெரும்பாலானோர் சந்திக்கும் மிகவும் பொதுவான பிரச்சனை தான் வியர்வை நாற்றம். அதுவும் அக்குளை தூக்கினால் போதும், ஆள் மயங்கி விழும் வகையில் துர்நாற்றம் வீசும். உங்கள் அக்குளும் இப்படி மிகுந்த துர்நாற்றத்துடன் உள்ளதா? எத்தனை முறை குளித்தாலும் அக்குள் துர்நாற்றம் மட்டும் போகமாட்டீங்குதா?
இந்த அக்குள் துர்நாற்றத்தைப் போக்க கடைகளில் விற்கப்படும் விலை உயர்ந்த டியோடரண்ட்டுகளை வாங்கி பயன்படுத்தி வருகிறீர்களா? இருப்பினும் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் மீண்டும் அக்குள் நாற்றம் வீசத் தொடங்கிவிடுகிறதா? அப்படியானால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பவர்கள் இயற்கை வழிகளை ஒருமுறை முயற்சிக்கலாம்.

அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களை அக்குளில் பயன்படுத்தி வந்தால், அக்குள் நாற்றத்தை முழுமையாக அகற்றலாம். கீழே அக்குள் துர்நாற்றத்தைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் உங்களுக்கு ஏற்றதை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.
1. க்ரீன் டீ
டயட்டில் இருப்பவர்கள் குடிக்கும் க்ரீன் டீ, அக்குள் துர்நாற்றத்தைப் போக்க பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா? எப்படியெனில் க்ரீன் டீ சருமத்துளைகளை அடைக்க உதவி புரிந்து, அதிகமாக வியர்வை வெளியேறுவதைக் குறைக்கும். அதற்கு க்ரீன் டீ பேக் கொண்டு டீ தயாரித்த பின், அந்த க்ரீன் டீ பேக்குகளை தூக்கி எறியாமல், அவற்றை அக்குளில் சிறிது நேரம் வைத்து, பின் அக்குளை கழுவுங்கள். இப்படி தொடர்ந்து பயன்படுத்தும் போது அக்குள் நாற்றம் குறையும்.
2. எலுமிச்சை சாறு
எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் கொண்டது. இந்த எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அதை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, பின் அதை குளிக்க செல்வதற்கு முன் அக்குளில் ஸ்ப்ரே செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை அல்லது ஒவ்வொரு வேளை குளிக்கும் போதும் பயன்படுத்தி வர, அக்குளில் வீசும் துர்நாற்றத்தைத் தடுக்கலாம்.
3. பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா சருமத்தின் இயற்கை அமிலங்களை சமநிலையில் பராமரிக்க உதவி புரிந்து, அக்குள் நாற்றத்தைக் குறைக்கும். அதற்கு பேக்கிங் சோத்வை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, அதை அக்குளில் தடவி காய வைத்து, பின் குளிர்ந்த நீரால் அக்குளைக் கழுவ வேண்டும்.
4. ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அமிலம், பாக்டீரியாக்களை திறம்பட அழிக்க உதவுகிறது. எனவே அக்குள் நாற்றத்தால் அவதிப்படுபவர்கள், ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, அதை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, அக்குளில் ஸ்ப்ரே செய்ய வேண்டும். ஒருவேளை ஸ்ப்ரே பாட்டில் இல்லாவிட்டால், காட்டனில் நனைத்து, அக்குளில் தடவலாம். இப்படி தினமும் குளிக்கும் முன் பயன்படுத்தி வந்தால், அக்குள் நாற்றம் நீங்கும்.
5. மஞ்சள் தூள்
மஞ்சளில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் இருப்பதால், இது துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து, அக்குள் நாற்றத்தைத் தடுக்கும். அதற்கு மஞ்சள் தூளை நீரில் கலந்து, அதை அக்குளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் பயன்படுத்தி வந்தால், அக்குளில் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications