Latest Updates
-
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...!
Fruit Facial: வீட்டிலேயே ஃபுரூட் ஃபேஷியல் எப்படி செய்யணும் தெரியுமா? இதோ உங்களுக்கான சில டிப்ஸ்கள்..
Fruit Facial In Tamil: பழங்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைய இருக்கிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகு பராமரிப்பிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்த பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் சருமத்திற்கு உள்ளிருந்து ஊட்டமளிக்கிறது. சருமத்தில் உள்ள முதுமை கோடுகள், சரும சுருக்கங்கள் இவற்றை போக்க உதவுகிறது.
எனவே நீங்கள் பழ ஃபேஷியல் செய்வதன் மூலம் உங்கள் சருமத்தை மிளிரச் செய்யலாம். இதற்காக நீங்கள் அழகு நிலையம் தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வீட்டிலேயே வீட்டில் இருக்கும் பழங்களை வைத்து ஃபுரூட் பேஷியலை நீங்கள் பண்ண முடியும். இந்த ஃபுரூட் ஃபேஷியல் உங்கள் சருமத்திற்கு உள்ளிருந்து போஷாக்கு அளிக்கிறது.

ஃபுரூட் ஃபேஷியலுக்கு என்னென்ன பழங்கள் அவசியம்?
திராட்சை
திராட்சை பழத்தில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் காணப்படுகிறது. இது சருமத்தை பளபளப்பாகவும் ஒளிரவும் வைக்க உதவுகிறது. திராட்சைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் காணப்படுகிறது. இது சருமத்தை ஆக்ஸினேற்ற சேதத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. தோல் நோயை போக்க விரும்புபவர்கள் திராட்சை பழ சாற்றை பயன்படுத்தி வரலாம். திராட்சை பழம் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் புற ஊதாக் கதிர்வீச்சில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது
அத்திப்பழம்
அத்திப்பழத்தை கொண்டு ஆய்வு செய்த போது அத்திப்பழம் முகப்பருக்கள், சுருக்கங்கள் இவற்றை போக்க உதவுகிறது. சருமத்தை என்றும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. அத்திப்பழம் அதிக நிறமியை கொடுக்கும். இதன் மூலம் உங்கள் சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்கும்.
பப்பாளி பழம்
பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. எனவே இது தோல் தடுப்பு செயல்பாட்டை பாதுகாக்கிறது. வயதான அறிகுறிகளை குறைக்க இது உதவுகிறது.
ராஸ்ப்பெர்ரி
ராஸ்ப்பெர்ரி சாற்றில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவில் காணப்படுகிறது. இது சுருக்கங்கள் மற்றும் வயதான அறிகுறிகளையும் மற்றும் ப்ரீ ரேடிக்கலையும் குறைக்க உதவுகிறது.
தக்காளி
தக்காளியில் லைகோபீன்கள் என்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் காணப்படுகிறது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் புற ஊதாக் கதிர்வீச்சிற்கு எதிராக நம்மை பாதுகாக்க கூடியது. இது சருமத்திற்கு பாதுகாப்பையும், புத்துணர்ச்சியையும் அளிக்கிறது.
லெமன்
லெமனில் அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த லெமன் முகப்பருக்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. இது சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது தோலை மென்மையாக வைக்கவும், சருமத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. சரும சுருக்கங்கள் போன்றவற்றை போக்க உதவுகிறது.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் உங்கள் சருமத்திற்கு குளிர்ச்சியான தன்மையை தரக் கூடியது. இதில் நிறைய ஆக்ஸினேற்ற பண்புகள் உள்ளன. சரும சுருக்கங்கள் மற்றும் சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க உதவுகிறது.
ஃபுரூட் பேஷியலுடன் சேர்க்க வேண்டிய பொருட்கள்:
தேன்
தேனில் அமினோ அமிலங்கள், புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவை நிறைய அளவில் காணப்படுகிறது. தேன் சரும ஆரோக்கியத்தில் சிறந்து விளங்க கூடியது. இது தோலின் pH அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது.
பால்
புளிக்கவைக்கப்பட்ட பாலை உட்கொள்வது உங்கள் சருமத்தை என்றுமே தெளிவாக்கும். பால் உங்கள் சருமத்தை பளபளப்பாக வைக்க உதவி செய்யும்.
தயிர்
தயிர் புரோபயாடிக்குகள் நிறைந்தது. தயிர் முகப்பருக்கள் மற்றும் ரோசாசியா போன்ற சரும தொற்றுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. வயதான சருமம் மற்றும் சூரிய ஒளி பாதிப்பில் இருந்து சருமத்தை காப்பாற்ற உதவுகிறது.
ஓட்ஸ்
ஓட்ஸில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை காணப்படுகிறது. இது வயதான அறிகுறிகளை முன்கூட்டியே போக்க உதவுகிறது. அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது.
வீட்டில் இருந்த படியே ஃபுரூட் ஃபேசியலை எப்படி செய்ய வேண்டும்?
* உங்கள் முகத்தை முதலில் நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
* லேசான சோப்பு கொண்டு முகத்தை நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். ஒரு பஞ்சுருண்டை எடுத்து அதை பாலில் நனைத்து சருமத்தை துடைத்து எடுங்கள்.
* பின் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்யும் போது பால் சரும துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்க உதவுகிறது மற்றும் முகத்திற்கு உடனடி பிரகாசத்தை கொடுக்கும்.
* பிறகு இறந்த செல்களை ஸ்க்ரப் கொண்டு நீக்குங்கள்.
* தேன் கொண்டு உங்கள் சருமத்தை லைட்டனிங் செய்யுங்கள்.
* பிறகு நீராவி கொண்டு ஆவி பிடித்து, சரும துளைகளை திறந்து வைக்கும் விஷயங்களை செய்யுங்கள்.
ஃபுரூட் ஃபேசியல் எப்படி செய்யலாம்?
* ஒரு பழுத்த தக்காளியை எடுத்து அதே பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். அதனுடன் சில துளிகள் லெமன் ஜூஸ் சேர்த்து கொள்ளுங்கள்.
* இப்பொழுது இந்த கலவையை 20-30 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.
* பின் அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து கொள்ளுங்கள்.
* இந்த பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும்.
* பிறகு 15 நிமிடங்கள் கழித்து தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.
* இல்லாவிட்டால், பழுத்த வாழைப்பழத்தை பிசைந்து சிறிது லெமன் சேர்த்து ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து பயன்படுத்தி வரலாம். இப்பொழுது இந்த கலவையை சருமத்தில் தடவிக் கொள்ளுங்கள். 15 நிமிடங்கள் அப்படியே விட வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.



Click it and Unblock the Notifications











