Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
முகப்பரு மற்றும் சரும வெடிப்புக்கு 'குட் பை' சொல்ல... இந்த ஃபேஸ் மாஸ்க்குகளை யூஸ் பண்ணா போதுமாம்!
எண்ணெய் பசை சருமம் மற்றும் அதனுடன் வரும் சரும பிரச்சனைகளான முகப்பரு மற்றும் சரும வெடிப்பு கோடைகாலத்தில் அதிகமாக ஏற்படலாம். இந்த முகப்பரு பிரச்சனைகளைத் தடுக்க வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் மாஸ்க்குகளை நீங்கள் முயற்சி செய்யலாம்.
கோடை வெயில் நமக்கு பல்வேறு சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக கோடையில் வெப்பம் மற்றும் மாசுபாடு காரணமாக முகப்பரு பிரச்சனைகள் அதிகமாகலாம். அதனால், உங்கள் சருமத்தை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டியது முக்கியம். கோடைகால முகப்பருக்களை தடுத்து உங்கள் சருமத்தை ஜொலிக்க வைக்க சில இயற்கை வழிகள் உள்ளன.

முகப்பருவைத் தடுக்க உதவும் ஃபேஸ் மாஸ்க்குகள்
பெரும்பாலான மக்கள் பிரகாசமான மற்றும் தெளிவான சருமத்தைதான் விரும்புகிறார்கள். அந்த வகையில், இரசாயன அடிப்படையிலான பொருட்களைப் பயன்படுத்துவது, உங்கள் சருமத்திற்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அதனால், இயற்கை வழிமுறைகளை பின்பற்றுவது சிறந்த தீர்வாக இருக்கும். இன்றைய நாளில் பெரும்பாலான மக்கள் இயற்கை பொருட்களையே அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
அந்த வகையில், பாக்டீரியா வளர்ச்சியைக் குறைக்கவும், முகப்பரு பிரச்சனைகளைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் சில ஃபேஸ் பேக்குகளை நீங்கள் வீட்டிலேயே முயற்சி செய்யலாம். அவை என்னென்ன ஃபேஸ் மாஸ்க்குகள் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
சருமத்திற்கு ஏற்ற பொருட்கள்
முகப்பரு பிரச்சினைகளை கட்டுப்படுத்த பல இயற்கை பொருட்கள் உள்ளன. எனவே, உங்கள் குறிப்பிட்ட தோல் பிரச்சனைகளுக்கு சரியான இயற்கை பொருட்களை தேர்ந்தெடுப்பது சிறந்தது. ஆனால் முகப்பரு என்று வரும்போது, எண்ணெய் மற்றும் நீரேற்றத்தை சமப்படுத்தக்கூடிய சில பொருட்கள் உங்கள் சருமத்திற்கு தேவைப்படும். அவற்றின் மூலம் நீங்கள் சரும வெடிப்புகளையும் தடுக்கலாம்.
முல்தானி மிட்டி மற்றும் சந்தன ஃபேஸ் மாஸ்க்
தேவையான பொருட்கள்:
- முல்தானி மிட்டி 2 தேக்கரண்டி
- அலோ வேரா ஜெல் 1 தேக்கரண்டி
- 2 டீஸ்பூன் சந்தன பொடி
- தேவையான அளவு தண்ணீர்
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் முல்தானி மிட்டி மற்றும் கற்றாழை ஜெல்லை ஒன்றாக கலக்க வேண்டும். பின்னர், சந்தனப் பொடி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். மென்மையான பேஸ்ட்டாகும் வரை கலக்கி, அதை உங்கள் முகத்தில் தடவி 10 நிமிடம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர், முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி உலர வைக்கவும். இதற்கான பலனை நீங்களே காணலாம்.
முல்தானி மிட்டி உங்கள் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய், அழுக்கு மற்றும் வியர்வையை நீக்கும். மேலும் கற்றாழை முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தி குறைக்கும். உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தால் இந்த முகமூடியை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை தடவவும்.
மஞ்சள் மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க்
தேவையான பொருட்கள்
- 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
- 1 தேக்கரண்டி தேன்
- 1 தேக்கரண்டி தயிர்
- 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். கெட்டியான பேஸ்ட் ஆகும் வரை கலக்கி, அதை உங்கள் கழுத்து உட்பட உங்கள் முழு முகத்திலும் பயன்படுத்துங்கள். 15 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
மஞ்சள் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியா வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். மேலும் பிற பொருட்கள் முகப்பருவைக் குறைக்க உதவும். வாரம் இருமுறை இந்த ஃபேஸ் மாஸ்க்குகளை பயன்படுத்தலாம். உங்கள் சருமம் பொலிவாகவும் அழகாகவும் இருக்கும்.
அரிசி மாவு மற்றும் தக்காளி ஃபேஸ் மாஸ்க்
தேவையான பொருட்கள்
- அரிசி மாவு 2 தேக்கரண்டி
- தேன் 1 தேக்கரண்டி
- தக்காளி கூழ் 2 தேக்கரண்டி
- தேவையான அளவு தண்ணீர்
செய்முறை:
இந்த அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து பேஸ்ட்டாக தயாரிக்கவும். அந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தக்காளியில் வைட்டமின்கள் சி, ஏ மற்றும் கே அதிகம் உள்ளது. மேலும் இது அமிலத்தன்மை கொண்டது. இந்த பண்புகள் சருமத்தின் pH சமநிலையை பராமரிக்கவும், முகப்பரு வெடிப்பு அபாயத்தை குறைக்கவும் உதவுகின்றன.
கற்றாழை மற்றும் பப்பாளி ஃபேஸ் மாஸ்க்குகள்
தேவையான பொருட்கள்
- கடலைமாவு 2 தேக்கரண்டி
- அலோ வேரா ஜெல் 1 தேக்கரண்டி
- பப்பாளி கூழ் 2 தேக்கரண்டி
- தேவையான அளவு தண்ணீர்
செய்முறை:
ஒரு ஃபேஸ் மாஸ்க்கை தயாரிக்க, மேலே கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். பேஸ்ட்டாக இருக்கும் இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி, 10-15 நிமிடங்கள் விட்டு, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
நீங்கள் உங்கள் சருமத்தை பளபளப்பாக ஜொலிக்க வைக்க விரும்பினால், இது ஒரு சரியான முகமூடியாகும். பப்பாளியில் முகப்பரு பிரச்சனைகளை சமாளிக்கும் எண்ணெய் உற்பத்தியை சமநிலைப்படுத்தும் போது எக்ஸ்ஃபோலியேட் செய்யும் என்சைம்கள் உள்ளன. மேலும், கற்றாழை ஜெல்லில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை முகப்பருவைக் கட்டுப்படுத்துவதில் நன்மை பயக்கும்.
எனவே, பெண்களே! கோடையில் மேலே கொடுக்கப்பட்டுள்ள முகமூடிகளை முயற்சி செய்து, முகப்பருவுக்கு பை-பை கூறுங்கள். உங்கள் சருமத்தையும் அழகாக ஜொலிக்க வையுங்கள்.



Click it and Unblock the Notifications

