Latest Updates
-
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்டையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? -
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
பஞ்சாபி பஞ்சரத்ன தால் ரெசிபி - இந்த மாதிரி பருப்பு கடைஞ்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
கொழுப்பு கல்லீரல் புற்றுநோயாக மாறுமா? யாருக்கு ஆபத்து அதிகம்? - விளக்கும் கல்லீரல் நிபுணர்! -
இராவணனை கடவுளாக வழிபடும் வித்தியாசமான 5 இந்தியக் கோவில்கள் - எங்க இருக்கு தெரியுமா?
உங்களுக்கு முகப்பருகள் இருக்கா? அப்போ நீங்க ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம்.. எப்படி தெரியுமா?
உங்கள் உடலில் உள்ள முகப்பருவினால் உங்கள் உடல்நலத்தில் ஏதோ பிரச்சினைகள் உள்ளது என தெரிந்துக் கொள்ளலாம்.. முகப்பருவுடன் உடலின் ஆரோக்கியமும் இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் முகப்பரு உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..
உங்கள் முகத்தில் உள்ள ஒவ்வொரு புள்ளியும் உங்கள் உடலில் ஒரு குறிப்பிட்ட பகுதி மற்றும் செயல்முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவேதான் ஒரு இடத்தில் ஒரு சின்ன பருவோ அல்லது கொப்புளமோ தோன்றினால், அது உடலில் வேறு எங்காவது பிரச்சனை உள்ளது என்று அர்த்தம் என மருத்துவர்கள் சொல்லுகின்றனர்.

உங்கள் முகப்பரு உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி என்ன சொல்கிறது?
உங்கள் நெற்றியில் ஒரு பரு இருந்தால் அது வயிற்று பிரச்சனை:
நெற்றியில் உள்ள பருக்கள் உங்கள் வயிறு மற்றும் உணவு நுகர்வுடன் நேரடியாக தொடர்புடையவை. நொறுக்குத் தீனிகளைத் தவிர்க்கவும், அதிக சர்க்கரை எடுக்க வேண்டாம், நிறைய தண்ணீர் குடிக்கவும் - ஏனெனில் இது வயிற்றுத் தொற்று போன்ற பெரிய பிரச்சனையையும் ஏற்படுத்தும்.
புருவங்களுக்கு இடையில் பரு இருந்தால் கல்லீரல் பிரச்சனை:
ஆம், உங்கள் புருவங்களுக்கு இடையே உள்ள சிறிய பரு உங்கள் கல்லீரல் அதிக எடையை இழுக்கிறது என்பதற்கான அறிகுறியாகும். எனவே மது, இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இரவு நேர தின்பண்டங்களை குறைத்து, நன்றாக தூங்குங்கள். வாரத்திற்கு ஒருமுறை சாத்வீக உணவை உண்ணுங்கள், உங்கள் உடலை உற்சாகப்படுத்துங்கள். பச்சை உணவுகளை சுத்தம் செய்து சாப்பிடுவது ஆரம்பநிலைக்கு நல்லது.
உங்கள் கண்களைச் சுற்றியும் உங்கள் நெற்றியின் அருகிலும் பருக்கள் இருந்தால் சிறுநீர்ப்பை பிரச்சனை:
உங்கள் நெற்றி, கண்கள் மற்றும் புருவ எலும்புகளைச் சுற்றியுள்ள பருக்கள் உங்கள் சிறுநீர்ப்பையில் பிரச்சனை உள்ளதை தெரிவிக்கிறது என்பதற்கான அறிகுறியாகும். எனவே உங்கள் உடலை நீரேற்றமாக வைக்க அதிகமான தண்ணீரை பருகவும்.. தண்ணீர் பாட்டிலை கைவசம் வைத்து அடிக்கடி குடிக்கவும்.. அத்துடன் தண்ணீர் பழங்கள், காய்கறிகள் ஆகிவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.. அதனால் உங்கள் பருக்களை சுற்றி இருக்கும் கருவளையம் கண்டிப்பாக நீரிழப்புக்கான அறிகுறியாகும்.
மூக்கில் பரு இருந்தால் இதய பிரச்சனை:
உங்கள் மூக்கில் ஒரு பரு இருக்கிறது என்றால் நீங்கள் காதலிக்கிறீர்கள் என்று அர்த்தம் இல்லை.. அது உங்கள் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையான விஷயம். உங்கள் இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலும் சரி அல்லது குறைவாக இருந்தாலும் சரி, அல்லது உங்களுக்கு வைட்டமின் பி குறைபாடு இருந்தால், உங்கள் மூக்கு அதற்கான அறிகுறிகளைக் காட்டும். எனவே சிறிது சுத்தமான காற்றை அனுபவிக்கவும், உடற்பயிற்சி செய்யவும், வைட்டமின் பி சப்ளிமெண்ட்ஸ் எடுத்து அந்த பருக்களை குறைக்கவும்.
கன்னத்தில் பரு வந்தால் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள்:
நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தாலும் அல்லது உங்களுக்கு சுவாசப் பிரச்சனைகள் இருந்தாலும், உங்கள் கன்னங்களில் ஒரு பரு அல்லது இரண்டு பருக்கள் இருக்கும். புகைப்பிடிப்பதைக் குறைத்து, அதிகாலையில் உடற்பயிற்சி செய்யுங்கள்.. உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உணவில் குளிர்ச்சியான உணவுகள் மற்றும் பானங்கள் (தோசை, புச்சா போன்றவை) சேர்த்துக்கொள்ளுங்கள், இது உடலில் இருந்து அதிகப்படியான வெப்பத்தை நீக்குகிறது. மேலும் கன்னத்தில் முகப்பரு வந்தால் ஹார்மோன் சமநிலையின்மை என்றும் அதர்தம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்...
முகப்பரு சிகிச்சை குறிப்புகள்
உங்கள் சருமத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் உள்ளன. உங்கள் முகப்பருவுக்கு சிகிச்சையளிப்பதற்கான சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன...
1. தினமும் போதுமான தண்ணீர் குடிக்கவும்
2. கற்றாழையை முகத்தில் அப்ப்ளை செய்யலாம்..
3. தினமும் பழங்களை சாப்பிடுங்கள்
4. ஒரு நாளைக்கு இரண்டு முறை கிரீன் டீ குடிக்கவும்
5. மன அழுத்தத்தைக் குறைக்கவும்
6. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்
இவை முகப்பரு மற்றும் உங்கள் உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக அமையும்..ஆனாலும் உங்கள் பருக்கள் மறையவில்லை என்று நீங்கள் உணர்ந்தால், உங்கள் உடலில் என்ன பிரச்சனை என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவும். முகப்பரு பகுதியில் கவனம் செலுத்தப்பட்டு, உள்நோக்கி சிகிச்சை செய்யப்பட வேண்டும். உங்கள் உடல்நலப் பிரச்சினைகளுக்கு சில சிகிச்சைகள் அல்லது மருந்துகளை முயற்சிக்கவும் அல்லது உங்களது சுகாதார வல்லூநரை சந்தித்து ஆலோசனை பெறவும்..



Click it and Unblock the Notifications
