Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
தீபாவளி நாளில் பளிச்சுன்னு ஜொலிக்கணுமா? அப்ப பாலை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
Diwali Skin Care Tips In Tamil: தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தீபாவளி நாளில் புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடிப்போம். மேலும் உறவினர்களும் இந்நாளில் வீட்டிற்கு வருவார்கள். அப்போது புதிய ஆடைகளை அணியும் போது முகம் பொலிவிழந்து டல்லாக இருந்தால் நன்றாக இருக்காது தானே!
இந்நிலையில் நிறைய பேர் பண்டிகைக்கு முன் அழகு நிலையங்களுக்கு சென்று ஃபேஸ் பேக், ப்ளீச்சிங் போன்றவற்றை போடுவார்கள். ஆனால் சிலருக்கு அதற்கு கூட நேரம் கிடைக்காது. அப்படிப்பட்டவர்கள் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தால் தான் பொலிவாக பளிச்சென்று ஜொலிக்க முடியும்.

அதுவும் வீட்டில் உள்ள பால் கொண்டு ஃபேஸ் பேக்கை போட்டு வருவதன் மூலம், முகப்பொலிவை அதிகரிக்கலாம். கீழே பண்டிகை காலத்தில் பொலிவான முகத்தைப் பெற உதவும் சில பால் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஃபேஸ் பேக் #1
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் காய்ச்சாத பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் அதிகமாக மஞ்சளை சேர்த்துவிட வேண்டாம். இல்லாவிட்டால் சருமத்தில் மஞ்சள் கறை படிந்துவிடும்.
ஃபேஸ் பேக் #2
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி பயன்படுத்தும் போது முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
ஃபேஸ் பேக் #3
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூள் ஓட்ஸ் பவுடர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதை முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் 2 முறை பயன்படுத்தி வந்தால், முகம் பளிச்சென்று இருப்பதோடு, சருமம் மென்மையாகவும் இருக்கும்.
ஃபேஸ் பேக் #4
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதைத் தொடர்ந்து மாய்ஸ்சுரைசரை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் 1-2 முறை பயன்படுத்தலாம்.
ஃபேஸ் பேக் #5
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் சிறிது நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அத்துடன் காய்ச்சாத பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் 2 முறை பயன்படுத்தலாம்.
ஃபேஸ் பேக் #6
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடரை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பாலை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் 1 முறை பயன்படுத்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications