Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
தீபாவளி அன்னிக்கு பளபளன்னு மின்னணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை உடனே போட ஸ்டார்ட் பண்ணுங்க..
Diwali Beauty Tips In Tamil: தீபாவளி பண்டிகை வரப்போகிறது. இந்த தீபாவளியில் புத்தாடை அணியும் போது, முகம் டல்லாக இருந்தால் நன்றாக இருக்குமா என்ன? நிச்சயம் இல்லை தானே? அப்படியானால் தீபாவளி பண்டிகை வருவதற்கு முன் உங்கள் முகத்தை பளிச்சென்று பிரகாசமாக்க சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுங்கள்.
ஆனால் உங்களுக்கு அழகு நிலையம் சென்று சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் அளவில் நேரம் இல்லையா? அப்படியென்றால் உங்கள் வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க் போன்றவற்றை போடுங்கள்.

இப்படி இயற்கை பொருட்களைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க் போடும் போது சருமத்தில் உள்ள இறந்த செல்கள், அழுக்குகள் போன்றவை நீங்குவதோடு, சரும செல்களின் ஆரோக்கியம் மேம்பட்டு, அழகும் அதிகரிக்கும். இப்போது சரும நிறத்தை அதிகரித்து, முகத்தை பளிச்சென்று பிரகாசமாக்க உதவும் சில ஃபேஸ் மாஸ்க்குகளைக் காண்போம்.
ஃபேஸ் மாஸ்க் #1
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* ஆனால் இந்த ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தும் முன், கையில் பேட்ச் டெஸ்ட் செய்து பாருங்கள். ஏனெனில் சிலருக்கு எலுமிச்சை சரும அரிப்பை ஏற்படுத்தலாம்.
ஃபேஸ் மாஸ்க் #2
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் நன்கு மசித்த சிறிது பப்பாளி கூழை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
ஃபேஸ் மாஸ்க் #3
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் துருவிய சிறிது வெள்ளரிக்காயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
ஃபேஸ் மாஸ்க் #4
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி கூழை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
ஃபேஸ் மாஸ்க் #5
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் 1 வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் மாஸ்க்குகள் சருமத்தின் நிறத்தை மேம்படுத்துவதோடு, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் கருமை நீங்கி முகம் பளிச்சென்று பிரகாசமாக மின்னும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications