Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
தீபாவளி நாளில் பளிச்சுன்னு வெள்ளையா தெரியணுமா? அப்ப 3 நாள் தொடர்ந்து இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க..
Diwali Beauty Tips In Tamil: தீபாவளி பண்டிகை வரப்போகிறது. இந்த தீபாவளி நாளில் நீங்கள் அழகாக காட்சியளிக்க வேண்டுமா? ஆனால் உங்கள் முகம் ரொம்ப டல்லாகவும் கருப்பாகவும் இருக்கிறதா? உங்கள் சருமத்தின் அழகையும், நிறத்தையும் மேம்படுத்த வேண்டுமா? அதுவும் குறுகிய நாட்களில் உங்கள் முகத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண வேண்டுமா?
அப்படியானால் ஒருசில ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகளைப் போடுங்கள். இயற்கை பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடும் போது, எவ்வித பக்கவிளைவுகளும் இருக்காது மற்றும் சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும். கீழே தீபாவளிக்கு முன் சருமத்தின் நிறத்தை உடனே மேம்படுத்த உதவும் சில ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. மஞ்சள் மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 4 டீஸ்பூன் கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பால் அல்லது நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் கழுவி, சருமத்தை துடைத்த பின், மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும்.
2. பூ ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு 3-4 சிவப்பு ரோஜாப்பூக்களை எடுத்து, அதன் இதழ்களை மட்டும் பறித்து, அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் சிறிது பால் மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உடனடி மாற்றத்தை ஏற்படுத்தும்.
3. சந்தன ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடரை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. வேப்பிலை, துளசி, மஞ்சள் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு 5-6 வேப்பிலை மற்றும் துளசியை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* முக்கியமாக இந்த ஃபேஸ் பேக் பயன்படுத்திய பின், தவறாமல் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும்.
5. தக்காளி மற்றும் முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டீஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் தக்காளி சாற்றினை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* முல்தானி மெட்டி சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை போக்கக்கூடியது. எனவே இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை பயன்படுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications