Latest Updates
-
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம்
பிகினி வேக்ஸ் Vs பிரேசிலியன் வேக்ஸ் - இவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? எது சிறந்தது?
பெண்கள் தங்கள் உடம்பில் உள்ள முடிகளை நீக்க பொதுவாக வேக்சிங் செய்வது உண்டு. இதற்காக பெண்கள் இரண்டு விதமான வேக்சிங் பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஒன்று பிகினி வேக்சிங் மற்றொன்று பிரேசிலியன் வேக்சிங் ஆகும். இந்த இரண்டு வேக்சிங் முறைகளுமே தேவையற்ற முடிகளை நீக்கினாலும் இரண்டுக்கும் இடையே சில வித்தியாசங்கள் உண்டு.
பிகினி வேக்சிங் உங்களுக்கு குறுகிய நேரத்தில் நல்ல தீர்வை கொடுக்கும். உங்களுக்கு ஒரு நல்ல மென்மையான சருமத்தை கொடுக்கும். பிரேசிலியன் வேக்சிங்கில் கடினமான மற்றும் மென்மையான வேக்ஸ் பயன்படுத்துவது உண்டு. சரி வாங்க இந்த இரண்டு வேக்சிங் முறையில் எந்த வேக்சிங் முறை சிறந்தது என அறிந்து கொள்வோம்.

பிகினி வேக்சிங்கிற்கும், பிரேசிலியன் வேக்சிங்கிற்கும் இடையே உள்ள வித்தியாசம்
பிகினி வேக்ஸ் அந்தரங்க பகுதியில் காணப்படும் முடிகளை நீக்க உதவுகிறது. முடிகளை சுத்தமாக நீக்கி உங்களுக்கு மென்மையான சருமத்தை கொடுக்கும். இது உங்களுக்கு விரைவான மற்றும் சிறந்த தீர்வை அளிக்க கூடியது. இது வலி இல்லாத முறையாகும்.
பிரேசிலியன் வேக்சிங் என்பது நெருக்கமான செயல்முறையாகும். இது முன்புறம், பின்புறம் உள்ள அனைத்து முடிகளையும் நீக்க உதவுகிறது. முன்பக்கத்தில் இருந்து பிட்டம் வரை முடிகளை நீக்க உதவுகிறது. முடிகள் அடர்த்தியானதாக இருந்தால் உங்களுக்கு வேதனையை அளிக்க வாய்ப்பு உள்ளது.
வேக்சிங் வகைகள்
வேக்சிங் செய்வதற்கான வேக்ஸ் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. கடினமான மற்றும் மென்மையான வேக்ஸ் வகைகளில் கிடைக்கிறது. இதில் கடினமான வேக்ஸ் ஒரு தடினமான ஜெல் போன்ற நிலைப்புத்தன்மை கொண்டுள்ளது. இந்த வேக்ஸை சூடாக்கி சருமத்தில் தடவி இழுக்க வேண்டும். இது வலி குறைந்தது. சென்ஸ்டிவ் சருமத்திற்கு ஏற்றது மற்றும் பாதுகாப்பானது.
மென்மையான வேக்ஸ் கடினமான வேக்ஸை விட மெல்லிய நிலைப்புத்தன்மை கொண்டவை. இந்த வேக்ஸை தோலின் மெல்லிய அடுக்குகளில் தடவி துணி அல்லது பேப்பர் கொண்டு இழுக்கப்படுகிறது.
பிகினி வேக்சிங்
பிகினி வேக்சிங்கில் பயன்படுத்தும் வேக்ஸ் ஆனது உங்கள் அந்தரங்க பகுதியில் முடியின் தடிமனைப் பொறுத்தது. இருப்பினும் கடினமான வேக்ஸ் கரடுமுரடான முடிகளை நீக்க உதவுகிறது. மேலும் கடினமான வேக்ஸ் ஒரு எக்ஸ்ஃபோலியட்டராகவும் செயல்படுகிறது.
பிரேசிலியன் வேக்சிங்
இந்த பிரேசிலியன் வேக்சிங்கில் கடினமான மற்றும் மென்மையான வேக்ஸ் இரண்டையும் பயன்படுத்தலாம். கரடுமுரடான முடிகளை நீக்க கடினமான வேக்ஸூம், மென்மையான முடிகளை நீக்க மென்மையான வேக்ஸூம் பயன்படுகிறது. பிகினி வேக்சிங் குறைந்த விலையிலும் பிரேசிலியன் வேக்சிங் சற்று அதிகமான விலையிலும் செய்யப்படுகிறது.
பிகினி மற்றும் பிரேசிலியன் வேக்ஸ் எப்படி தயார் செய்யப்படுகிறது?
* பிகினி வேக்ஸ் செய்வதற்கு சில வாரங்கள் காத்திருக்க வேண்டும். முடியின் நீளம் 1/4 இன்ச் வரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.
* வேக்சிங் செய்த பிறகு அஸ்பிரின் அல்லது கனமான எக்ஸ்ஃபோலியன்ட்களை தவிர்க்க வேண்டும். அவை சருமத்தை மேலும் எரிச்சலடைய செய்ய வாய்ப்பு உள்ளது.
* வேக்சிங் செய்த பிறகு சருமத்தின் மேற்பரப்பில் உள்ள இறந்த செல்களை நீக்க லேசாக ஸ்க்ரப் செய்தால் போதுமானது.
* வேக்சிங் செய்த பிறகு இறுக்கமான ஆடைகளை அணிவதற்கு பதிலாக தளர்ந்த ஆடைகளை அணியுங்கள். இறுக்கமான ஆடைகள் சருமத்தில் எரிச்சலை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
* வேக்சிங் செய்த வலியை சமாளிக்க 30-60 நிமிடங்களுக்கு அட்வில் மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள்.
வேக்சிங் செய்த பிறகு என்ன செய்ய வேண்டும்?
* வேக்சிங் செய்த பிறகு ஏற்படும் சரும எரிச்சல், சிவத்தல் மற்றும் புடைப்புகளை போக்க குளிர் ஒத்தடம் கொடுக்க வேண்டும். கற்றாழை ஜெல்லை மாய்ஸ்சரைசராக பயன்படுத்தலாம். இருப்பினும் எந்த பொருளை பயன்படுத்துவதற்கு முன்பும் அழகு கலை நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
* அரிப்பு மற்றும் சரும எரிச்சலை தடுக்க தளர்வான ஆடைகளை அணியுங்கள்.
* டியோடரண்டுகள், வாசனை திரவியங்கள் அல்லது சாயங்கள் எதையும் சருமத்தில் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அவற்றில் உள்ள ஆல்கஹால் மற்றும் கடுமையான இராசயனங்கள் அரிப்பு மற்றும் எரிச்சலை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
* சில நாட்களுக்கு ஜிம் மற்றும் கடலில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். சருமத்தை கஷ்டப்படுத்தி உடற்பயிற்சி செய்வதை தவிருங்கள். அது உங்களுக்கு எரிச்சலை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. வியர்வை உங்கள் சருமத்திற்கு மேலும் எரிச்சலை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. கடல் நீரில் உள்ள உப்பு உங்கள் தோலை மேலும் எரிச்சலடைய செய்யும்.
பக்க விளைவுகள்:
* சருமம் சிவந்து போதல், தோலின் நிறத்தில் ஏற்படும் மாற்றம் அல்லது தற்காலிக மாற்றம் ஏற்படுதல்.
* சரும எரிச்சல் ஏற்படுதல்
* சரும அழற்சி உண்டாதல்
* காயங்கள் மற்றும் எரியும் உணர்வு ஏற்படுதல்
* பருக்கள் மற்றும் புடைப்புகள் தோன்றுதல்
குறிப்பு : வேக்ஸ் தடவிய உடனேயே சருமம் சிவந்து போனால் உங்கள் சரும கலை நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. ஏனெனில் சிலருக்கு வேக்ஸ் ஒவ்வாமையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.



Click it and Unblock the Notifications