Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
ஒரு கைப்பிடியுளவு கறிவேப்பிலை போதுமாம்...முடி கொட்டம இருக்கவும் அடர்ந்த காடு மாதிரி கருகருன்னு வளரவும்!
Hair Care Tips In Tamil: உங்களுக்கு முடி கொத்து கொத்தா கொட்டுதா? நீளமா முடி வளரவே மாட்டேங்குதா? உங்களுக்கு கருகருன்னு முடி வேணுமா? இந்த எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே இயற்கையான தீர்வு இருக்கிறது என்று சொன்னால், நீங்கள் நம்புவீர்களா? ஆம், அந்த தீர்வு கறிவேப்பிலைதான்.
இன்றைய நாளில் அதிகரித்து வரும் முக்கிய பிரச்சனைகளில் முடி உதிர்தலும் ஒன்று. இது ஆண், பெண் என இருவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனையாகும். இது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு, சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை தொடர்பான பிரச்சினைகளுக்கும் கூட வழிவகுக்கும்.

இயற்கை வைத்தியம் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் அதிக முடி உதிர்வை கட்டுப்படுத்தும். அத்தகைய ஓர் நல்ல தீர்வுகறிவேப்பிலை. உங்கள் உச்சந்தலையில் ஊட்டமளிக்கும் மற்றும் முடியின் வேர்களை வலுப்படுத்தும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் கறிவேப்பிலை நிரம்பியுள்ளது.
பண்டைய காலம் முதல் இன்று வரை முடி பராமரிப்பில், கறிவேப்பிலை ஓர் முக்கிய பங்கு வகிக்கிறது. கறிவேப்பிலையில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் புரதம் முடியை வலுப்படுத்த உதவுகிறது, அதே நேரத்தில் இரும்பு மற்றும் வைட்டமின் பி மற்றும் சி ஆகியவை உச்சந்தலையில் ஊட்டமளித்து ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். முடி உதிர்வை குறைக்கவும் கருமையான கூந்தலை பெறவும் கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம் என இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
கறிவேப்பிலை முடி எண்ணெய்
தேவையான பொருட்கள்
- 1 கப் தேங்காய் எண்ணெய்
- 1 கைப்பிடி அளவு புதிய கறிவேப்பிலை
செய்முறை
ஒரு கடாயில், தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் கறிவேப்பிலையைச் சேர்த்து, அடர் பழுப்பு நிறமாக மாறும் வரை சுமார் 15-20 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர், அடுப்பை அணைத்து அதை ஆறவிடவும். இந்த கலவையை வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.
உங்களுக்கு தேவைப்படும்போது, கறிவேப்பிலை முடி எண்ணெயை உங்கள் உச்சந்தலையில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். ஒரு நாள் இரவு முழுவதும் அல்லது குறைந்தது ஒரு மணி நேரமாவது எண்ணெய் உங்கள் தலையில் இருக்க விடவேண்டும். பின்னர், லேசான ஷாம்பூ கொண்டு முடியை நன்றாக அலச வேண்டும்.
கறிவேப்பிலை ஹேர் மாஸ்க்
தேவையான பொருட்கள்
- 1 கைப்பிடி அளவு புதிய கறிவேப்பிலை
- 1 தேக்கரண்டி தயிர்
- 1 தேக்கரண்டி தேன்
செய்முறை
கறிவேப்பிலையை மிருதுவான பேஸ்டாக அரைத்துக்கொள்ள வேண்டும். அந்த கலைவையில், தயிர் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த கறிவேப்பிலை ஹேர் மாஸ்க்கை உங்கள் தலைமுடியின் வேர்களில் இருந்து நுனி வரை நன்றாக தடவ வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் முடியை அலச வேண்டும்.
கறிவேப்பிலை நீர்
தேவையான பொருட்கள்
- 2 கப் தண்ணீர்
- 1 கைப்பிடி புதிய கறிவேப்பிலை
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். கறிவேப்பிலை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். கறிவேப்பிலையின் சாயம் முழுவதுமாக நீரில் இறங்கியதும், அடுப்பை அணைத்து கலவையை குளிர்விக்கவும்.
பின்னர் திரவத்தை வடிகட்டி, தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் தலைமுடியை ஷாம்பு கொண்டு அலசி, கண்டிஷனிங் செய்த பிறகு, அந்த கறிவேப்பிலை நீரில் முடியை அலச வேண்டும். அப்படியே உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்யவும். கறிவேப்பிலை நீரில் முடியை அலசிய பின், மீண்டும் தண்ணீரில் அலச வேண்டாம்.
இயற்கையான முறையில் முடி உதிர்வை குறைக்கவும், முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் கறிவேப்பிலை உங்களுக்கு உதவும். மேலும், இது உங்களுக்கு பளபளப்பான முடியை தருவதோடு, முடியின் கருமையையும் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications
