Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
கிறிஸ்துமஸ் நாளில் பளிச்சுன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை இன்னைக்கே போடுங்க..
Christmas 2025: கிறிஸ்துமஸ் பண்டிகை வரப்போகிறது. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரையும் சந்திப்பீர்கள். அப்போது உங்கள் முகம் டல்லாக இருந்தால் நன்றாக இருக்குமா? இல்லை தானே.
அதுவும் தற்போது குளிர்காலம் என்பதால் சருமம் அதிகம் வறண்டு, மென்மையிழந்து இருக்கும். மேலும் மாசடைந்த சுற்றுச்சூழல் காரணமாக சருமத்தில் அழுக்குகளும், இறந்த செல்களும் அதிகம் சேர்ந்திருக்கும். இப்படியே இருந்தால் சருமம் பொலிவிழந்தும் கருமையாகவும் காட்சியளிக்கும்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் நாளில் பளிச்சென்று பிரகாசமாகவும், அழகாகவும் காட்சியளிக்க விரும்பினால், முகத்திற்கு ஒருசில ஃபேஸ் பேக்குகளைப் போடுங்கள். இப்படி ஃபேஸ் பேக்கை போடும் போது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பிரகாசமாகவும், பொலிவோடும் இருக்கும். கீழே கிறிஸ்துமஸ் அன்று உங்களை வெள்ளையாகவும், அழகாகவும் காட்ட போட வேண்டிய ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. தேன், வாழைப்பழம் மற்றும் பால் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 வாழைப்பழத்தை எடுத்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் காய்ச்சாத பால் மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அத்துடன் சில துளிகள் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. மோர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1/2 கப் மோரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகத்தில் தடவி 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் ஒரு நல்ல மாற்றத்தை காட்டும்.
3. கடலை மாவு மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும்.
* பின் அதில் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* ஃபேஸ் பேக் நன்கு காய்ந்த பின், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* எண்ணெய் பசை சருமத்தினர் சிறப்பான பலனைப் பெற, இந்த ஃபேஸ் பேக்குடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
4. பால் பவுடர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பால் பவுடரை எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
5. பப்பாளி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த சிறிது பப்பாளி துண்டை எடுத்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் பேக்குகளை பண்டிகை நாட்களுக்கு சில நாட்களுக்கு முன்பிருந்து பயன்படுத்தி வந்தால், முகத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முகமும் நன்கு பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications