For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க சருமமும் தலைமுடியும் பொலிவாகவும் பளபளப்பாகவும் இருக்க நீங்க 'இத செஞ்சா போதுமாம்...!

உங்கள் கண்களுக்குக் கீழே உள்ள வட்டங்களுக்கு, வெள்ளரி மற்றும் எலுமிச்சை கலவையானது காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தோல் நோய்களுக்கான சிகிச்சையில் அவை மிகவும் முக்கியமானவை.

|

Women's Day 2023: மகளிர் தினம் என்பது பெண்களையும் பெண்மையையும் கொண்டாடும் நாள். இந்த நாளில் பெண்கள் பொதுவாக என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள்? நாங்கள் உங்களுக்கு ஒரு யோசனையை கூறுகிறோம். ஆம், இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் மீது கவனம் செலுத்துங்கள். நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கலாம் அல்லது படிக்க நிறைய இருக்கலாம் என்பது உண்மைதான். ஆதலால், உங்களுக்கு எளிதாகக் கிடைக்கக்கூடிய இயற்கையான பொருட்களைக் கொண்டு உங்களை பொலிவு பெற செய்வதற்காக நாங்கள் இங்கு வந்துள்ளோம். மேலும், இவை உங்கள் சுய-அன்பின் பாதையில் உங்களை அழைத்துச் செல்லும். இவற்றைச் செய்வது மிகவும் வேடிக்கையாகவும் இருக்கும்.

Womens day: Beauty hacks you didnt know existed in tamil

உங்கள் சருமம் மற்றும் தலைமுடியில் கவனம் செலுத்துங்கள். இத்தினத்தின் இரவு நேரத்திலோ அல்லது நண்பர்களுடன் பார்ட்டியிலோ இதை நீங்கள் முயற்சி செய்யலாம் அல்லது எதுவும் செய்யாமல் உங்கள் நண்பருடன் வெறுமனே ஹேங்அவுட் செய்யலாம். உங்களுக்கே தெரியாத பியூட்டி ஹேக்குகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

முகத்திற்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதால் உங்கள் முகம் மென்மையாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும். இது உங்கள் வறண்ட சரும பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது. தேங்காய் எண்ணெய் சிறந்த இயற்கை ஒப்பனை நீக்கி என்றும் அறியப்படுகிறது. சில துளிகள் தேங்காய் எண்ணெயை உங்கள் முகத்தில் தடவி, உங்கள் தோலில் வாரம் ஒருமுறை மசாஜ் செய்யவும். இது நிச்சயமாக உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடனும், ஈரப்பதத்துடனும் உணர வைக்கும். தேங்காய் எண்ணெய் பல நன்மைகளை உங்கள் சருமத்திற்கு வழங்குகின்றன மற்றும் அதற்கு தகுதியான ஊக்கத்தையும் அளிக்கிறது.

வெள்ளரி மற்றும் எலுமிச்சை சாறு

வெள்ளரி மற்றும் எலுமிச்சை சாறு

உங்கள் கண்களுக்குக் கீழே உள்ள வட்டங்களுக்கு, வெள்ளரி மற்றும் எலுமிச்சை கலவையானது காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தோல் நோய்களுக்கான சிகிச்சையில் அவை மிகவும் முக்கியமானவை. ஒரு பருத்தி பந்து அல்லது வெள்ளை துணியை கொண்டு, சம அளவு வெள்ளரி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கலவையில் நனைத்து உங்கள் கண் கீழ் வட்டங்களில் தடவவும். உங்கள் கண்ணில் எலுமிச்சை சாறு படமால் பார்த்துக் கொள்ளுங்கள். பின்னர், 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள்.

தேன், சர்க்கரை, தேங்காய் எண்ணெய்

தேன், சர்க்கரை, தேங்காய் எண்ணெய்

உங்கள் உதடுகளை அழகாகவும், சரியான இளஞ்சிவப்பு நிறத்தைப் பெறவும் சரியான லிப் ஸ்க்ரப்பை உருவாக்கவும். தேன் மற்றும் தேங்காய் எண்ணெயுடன் ஒரு சிறிய ஸ்பூன் சர்க்கரை கலந்து, பின்னர் கலவையை உங்கள் உதடுகளில் தடவி, நல்ல ஸ்க்ரப் கொடுக்கவும். தண்ணீரில் கழுவுவதற்கு முன் கலவையை சில நிமிடங்கள் அப்படியே விடவும். வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே இதைப் பின்பற்ற வேண்டும். ஸ்க்ரப்பிங் மென்மையாக செய்ய வேண்டும், மிகவும் கடுமையாக செய்யக்கூடாது.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை முடிக்கு அற்புதங்களைச் செய்கிறது. இது உங்கள் முடியை பளபளப்பாகவும் மென்மையாகவும் தோற்றமளிக்க வைக்க உதவுகிறது. ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்துவது உண்மையில் உங்கள் முடி பராமரிப்பை அதிகரிக்கலாம். கற்றாழை ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் தலைமுடி கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.

கற்றாழை தயிர் ஹேர் மாஸ்க்

கற்றாழை தயிர் ஹேர் மாஸ்க்

மூன்று தேக்கரண்டி புதிய கற்றாழை ஜெல், இரண்டு தேக்கரண்டி தயிர், ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒரு சிறிய கலவை கிண்ணத்தில் சேர்த்து கலக்கவும். இந்த ஹேர் மாஸ்க்கை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் தடவவும். 10 நிமிடங்களுக்கு, இந்த கலவையை உச்சந்தலையில் நன்கு மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் தலைமுடியில் அந்த கலவையை அப்படியே வைத்திருங்கள். பின்னர், வெதுவெதுப்பான நீரில் உங்கள் தலைமுடியை அலசுங்கள்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சள் சிறந்த குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது பலவிதமான ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளதோடு, உங்கள் சருமத்தை இளமையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்கும். ஒரு கப் உளுத்தம்பருப்பு மாவுடன் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். ஒரு மென்மையான பேஸ்ட் செய்ய, போதுமான பால் அல்லது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு சில துளிகள் ரோஸ் வாட்டரில் கலக்கவும். பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர விடவும். அதன் பிறகு, குளிர்ந்த நீரில் நன்றாக கழுவவும். இதனால் உங்கள் சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இறுதிகுறிப்பு

இறுதிகுறிப்பு

இயற்கையான பொருட்களைக் கொண்டு உங்களின் சரியான மகளிர் தினத் தோற்றத்தை நீங்களும் உங்கள் நண்பர்களும் அடைவதற்கும், மகிழ்ச்சியாக இருக்கத் தயாராக இருப்பதற்கும் சில வழிகள் இவை. இருப்பினும், உங்கள் சருமத்தில் எதையும் நேரடியாகப் பயன்படுத்துவதற்கு முன், நீங்கள் ஸ்வாட்ச் சோதனைகளைச் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Women's Day: Beauty hacks you didn't know existed in tamil

Here we are talking about the Women's day: Beauty hacks you didn't know existed in tamil.
Desktop Bottom Promotion