For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கம்பீரமான அழகுக்கு காரணம் இந்த ரகசியங்கள்தானாம்...!

|

அழகாக இருப்பதை தான் அனைவரும் விரும்புகிறார்கள். நாம் இவர்களை போல அழகாக இருக்க வேண்டும் என்று நடிகை, நடிகரை பார்த்து ஆசைப்பட்டிருப்போம். அவர்களின் அழகின் ரகசியம் என்ன? இப்படி இவ்வ்ளவு அழகாக இருக்கிறார்கள்? என்று நம் நண்பர்களிடையே பலமுறை உரையாடியிருப்போம். இன்றைய தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவை ரசிக்காத கண்கள் இருந்திருக்காது. அவரின் அழகை புகழாதவர்கள் மிகமிக குறைவு. மிகவும் தன்னம்பிக்கையுடனும் துணிச்சலுடன் பல காதாப்பாத்திரங்களை எடுத்து நடித்து வருகிறார். ரஜினி, விஜய், அஜித் என பல முன்னனி நடிகர்களுடன் நடித்திருந்தாலும், தனக்கென ஒரு தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துள்ளார்.

இதற்கு அவருடைய திறமையும், உழைப்பும்தான் முதன்மை காரணங்கள். அழகிலும் நயன்தாரா ரசிகர்களை கவரும் ராட்சசியாக வளம் வருகிறார். இவருடைய அழகை கண்டு பொறாமை கொள்ளாத பெண்களே இல்லை எனலாம். ஐயாவில் தொடங்கிய இவர் நடிப்பு பயணம் இன்றும் இளமையாக அண்ணாத்த வரை தொடர்ந்துள்ளது. இன்னுமும் தொடர இருக்கிறது. நயனின் அழகு ரகசியம் என்னவென்று தெரிந்துகொள்ள பலர் ஆர்வமாக உள்ளனர். நயன்தாராவின் அழகு ரகசியத்தை பற்றிதான் இக்கட்டுரையில் காணப்போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இயற்கையான தயாரிப்புகள்

இயற்கையான தயாரிப்புகள்

நயன்தாரா மிகவும் விரும்புவது மற்றும் உபயோகப்படுத்துவது ஆயுர்வேத அழகு சாதன பொருட்களைதானாம். மேலும், அவர் ஆயுர்வேத குளியலை அடிக்கடி எடுத்துக்கொள்கிறாராம். இதனால், அவரது உடல் மற்றும் சருமம் ஆயுர்வேத நன்மைகளை பெற்றுக்கொள்கின்றன. இயற்கையான தயாரிப்புகளை பயன்படுத்துவதால், அவரது தோல் பளபளப்பாக மின்னுகிறது. இப்போதும் இளமையாக இருக்கிறார்.

சன்ஸ்கிரீன் இல்லாமல் வெளியே வருவதில்லை

சன்ஸ்கிரீன் இல்லாமல் வெளியே வருவதில்லை

நயன்தாரா, தினமும் சன்ஸ்கிரீன் கிரீம் தடவாமல் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. அது நயனின் சருமத்தை ஆரோக்கியமாக வைத்து சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கிறது. மேலும், சருமம் தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்படுவதிலிருந்து அவரைப் பாதுகாக்கிறது.

நீரேற்றமாக வைத்திருத்தல்

நீரேற்றமாக வைத்திருத்தல்

நயன்தாரா தன்னுடைய உடலையும் சருமத்தையும் எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்கிறாராம். அதனால், அவர் அடிக்கடி தண்ணீர் அருந்துவார். தண்ணீர் அதிகம் குடிப்பதால், உடல் சூடால் உருவாகும் பருக்கள் நயனுக்கு ஏற்படுவதில்லை. அதோடு உணவு இடைவெளிகளில் ஜூஸ் போன்ற திரவ உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்கிறார். பொதுவாக தண்ணீர் அருந்துவது உடலுக்கும் சருமத்திற்கும் நன்மை அளிக்கும். நயன்தாராவின் பளபளப்பான சருமத்திற்கு இதுவும் காரணமாக இருக்கிறது.

சரும வறட்சி

சரும வறட்சி

நடிகை என்பதால், எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புவார்கள். ஆதலால், அடிக்கடி சோப்பு அல்லது கிரீம் போட்டு முகத்தை கழுவிக்கொண்டே இருக்க வேண்டிய நிலை நடிகைகளுக்கு இருக்கலாம். ஆனால், நயன்தாரா சோப் எதுவும் பயன்படுத்தாமல் வெறும் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிக் கொள்வாராம். இது சருமத்தை வறட்சியடையச் செய்யாமல் பாதுகாக்கும்.

பிரகாசமான சருமத்திற்கு பழச்சாறுகள்

பிரகாசமான சருமத்திற்கு பழச்சாறுகள்

முகம் மட்டுமல்லாமல் மேனி முழுவதும் பிரகாசமாக இருக்க தினமும் அவர் பழச்சாறுகளை அருந்துகிறாராம். ஏனெனில், பழச்சாறுகள் இயற்கையாகவே உடலுக்கும் சருமத்திற்கும் நன்மைகளை அளிக்கிறது. வைட்டமின் சி நிறைந்த பழச்சாறுகளை நயன்தாரா தினமும் குடித்து, அவரது சருமத்தை இயற்கையாகவே பிரகாசிக்க வைக்கிறார்.

சி.டி.எம் வழக்கம்

சி.டி.எம் வழக்கம்

முக்கியமான சி.டி.எம் வழக்கத்தை நயன்தாரா ஒருபோதும் தவிர்ப்பதில்லை. சி.டி.எம் என்பது கிளன்சிங் (cleansing), டோனிங் (toning), மாய்ச்சரைஸிங் (moisturizing) ஆகிய மூன்றும்தான். இந்த அடிப்படையான மூன்று விஷயங்களையும் நயன்தாரா செய்யத் தவறுவதில்லையாம். இதிலும், ஆயுர்வேத தயாரிப்புகளுக்கு தான் நயன் முன்னுரிமை கொடுக்கிறாராம்.

தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய்

தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய்

நயன்தாராவின் பளபளப்பான மற்றும் வளவளப்பான கூந்தலுக்குப் பின்னால் இருக்கும் ஆச்சரியமான ரகசியம் தேங்காய் எண்ணெயைத் தவிர வேறில்லை. தினமும் குளிப்பதற்கு முன்பு தலைக்கு நிறைய தேங்காய் எண்ணெய்யை தேய்த்துக் குளிக்கும் பழக்கத்தை அவர் கொண்டிருக்கிறார். மேலும், தலைமுடியைப் பராமரிக்கவும் அவர் ஆயுர்வேத முறைகளையே முதன்மையாகப் பின்பற்றுகிறார். இதனால், அவருடைய தலைமுடியும் இயற்கையாக அவருக்கு கூடுதல் அழகை கொடுக்கிறது.

கண்களுக்கு இயற்கையான கோல்

கண்களுக்கு இயற்கையான கோல்

நயன்தாராவின் கண்கள் பார்ப்பவரை வசீகரிக்கும் தன்மை கொண்டது. ரசிகர்களை கவரும் கண் அழகையும் நயன் கொண்டிருக்கிறார். அவருடைய பிரகாசமான கண்களுக்கு இயற்கையான காஜலைப் பயன்படுத்துவதையே விரும்புகிறார்.

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

நயன்தாரா பெரிதாக அழகு சாதனப் பொருள்களோ அதிக மேக்கப்போ செய்து கொள்வதில்லை. இயற்கையான அழகையே அவர் விரும்புகிறார். அதேபோன்று தினமும் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றையும் கட்டாயம் செய்கிறாராம். நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை பார்க்க வேண்டும். வெறும் செயற்கை தயாரிப்புகளை பூசிக்கொள்வதால் மட்டும் அழகாக மாறிவிட முடியாது. நம் உள்ளிருந்தும் இருந்து ஒளிர வேண்டும். நயன்தாரா தன்னம்பிக்கையோடு உள்ளிருந்து என்றும் இளைமையோடு ஒளிருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

south indian actress nayanthara beauty secrets in tamil

Here we are talking about the south indian actress nayanthara beauty secrets in tamil.
Story first published: Friday, December 3, 2021, 18:20 [IST]
Desktop Bottom Promotion