For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிகரெட்டால் பற்களில் ஏற்பட்டுள்ள அசிங்கமான கறைகளைப் போக்கும் வழிகள்!

புகையிலை பற்களில் மோசமான பிரச்சனைகளை உண்டாக்குவது தவிர, புற்றுநோயை உண்டாக்கக்கூடியது. இப்போது பற்களில் படிந்துள்ள சிகரெட் கறைகளைப் போக்கும் சில சக்தி வாய்ந்த இயற்கை வழிகளைக் காண்போம்.

|

இன்று பலரின் புண்பட்ட மனதை ஆற்றும் ஒன்றாக சிகரெட் உள்ளது. குறிப்பாக இளைஞர்களிடையே சிகரெட் பிடிப்பது ஒரு ட்ரெண்டாக உள்ளது. ஆனால் சிகரெட்டில் உள்ள புகையிலை உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கக்கூடியது. குறிப்பாக புகையிலை வாயின் ஆரோக்கியத்தையே முதலில் பாதிக்க ஆரம்பிக்கிறது. சிகரெட் பிடிக்கும் பலரைப் பார்த்தால், அவர்களது பற்களின் நிறம் மாறி அசிங்கமாக காணப்படும். ஏனெனில் புகையிலையில் உள்ள நிக்கோட்டின் பற்களைச் சுற்றி படிந்து, பற்களை மஞ்சள் நிறத்தில் மாற்றுகிறது.

How To Remove Tobacco Stains From Teeth In Tamil

புகையிலை பற்களில் மோசமான பிரச்சனைகளை உண்டாக்குவது தவிர, புற்றுநோயை உண்டாக்கக்கூடியது. இப்போது பற்களில் படிந்துள்ள சிகரெட் கறைகளைப் போக்கும் சில சக்தி வாய்ந்த இயற்கை வழிகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாயை தினமும் முறையாக சுத்தம் செய்யவும்

வாயை தினமும் முறையாக சுத்தம் செய்யவும்

வாய் சுத்தம் வெறும் பற்களைத் துலக்குவதோடு நின்றுவிடாது. உண்மையில் வாய் சுத்தம் என்பது ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்களைத் துலக்குவது, மௌத் வாஷ் மற்றும் ப்ளாஷ் போன்றவற்றை ஒரு நாளைக்கு ஒருமுறையாவது மேற்கொள்வது போன்றவற்றைக் குறிக்கிறது. இப்படி தினமும் ஒருவர் பின்பற்றி வந்தால், பற்களில் உள்ள நிக்கோட்டின் கறைகள் விரைவில் நீங்குவதோடு, அனைத்து வகையான கறைகளும் பற்களில் இருந்து நீங்கிவிடும்.

வாயை எப்போதும் சுத்தமாக மற்றும் மென்மையாக வைத்துக் கொள்ளவும்

வாயை எப்போதும் சுத்தமாக மற்றும் மென்மையாக வைத்துக் கொள்ளவும்

எப்போது பற்களில் கறைகள் படிகிறது என்றால், பற்கள் மென்மையின்றி சொரசொரப்பாக இருக்கும் போது தான். ஆகவே பற்களின் மேற்பரப்பை எப்போதும் மென்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தினமும் காலையில் மற்றும் இரவு தூங்கும் முன் பற்களைத் துலக்க வேண்டும். இது தவிர, எதை சாப்பிட்ட பின்னரும், வாயை வெதுவெதுப்பான உப்பு நீரால் கொப்பளிப்பது மிகவும் நல்லது.

கிருமிகளின்றி வாயைப் பராமரிக்கவும்

கிருமிகளின்றி வாயைப் பராமரிக்கவும்

பற்களை வெள்ளையாக வைத்துக் கொள்ள வேண்டுமானால், பற்களில் எந்த வகையான துவாரமும் இருக்கக்கூடாது. வாயில் பாக்டீரியா இல்லாமல் இருந்தால், பற்கள் எப்போதும் பளிச்சென்று வெள்ளையாக இருக்கும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா பற்களில் உள்ள கறைகளை நீக்க உதவும் அற்புதமான பொருள். பற்களைத் துலக்கிய பின், சிறிது பேக்கிங் சோடாவால் பற்களைத் தேய்த்து வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி அவ்வப்போது செய்து வந்தால், பற்களில் உள்ள அசிங்கமான கறைகளை நீங்கி, பற்கள் வெள்ளையாக மாற ஆரம்பிக்கும்.

கேரட் சாப்பிடவும்

கேரட் சாப்பிடவும்

கேரட் பற்களில் உள்ள கறைகளைப் போக்க உதவும். ஏனெனில் இதில் நார்ச்சத்து உள்ளது. இது பற்களை முறையாக சுத்தம் செய்யும். மேலும் இது பற்களின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்கை விரைவில் நீக்க உதவும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் அசிட்டிக் அமிலம் உள்ளது. இது பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை அகற்ற உதவும். அதற்கு எலுமிச்சை சாற்றினைக் கொண்டு பற்களைத் துலக்கலாம் அல்லது எலுமிச்சையின் தோலைக் கொண்டு பற்களைத் தேய்க்கலாம். ஆனால் அளவுக்கு அதிகமாக இந்த முறையைப் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால், அதில் உள்ள அசிட்டிக் அமிலம் பற்களில் சேதத்தை ஏற்படுத்தும்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி பழங்கள் பற்களை வெண்மையாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள பயன்படுகிறது. அதற்கு ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிடலாம். இல்லாவிட்டால், ஸ்ட்ராபெர்ரி பழத்தை மசித்து, அத்துடன் பேக்கிங் சோடா சிறிது சேர்த்து கலந்து, பற்களில் தடவி தேய்த்து சில நிமிடங்கள் கழித்து வாயை நீரால் கொப்பளித்து விட்டு, வழக்கமான டூத் பேஸ்ட் கொண்டு பற்களைத் துலக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கி, பற்கள் பளிச்சென்று இருக்கும்.

பற்களை பரிசோதிக்கவும்

பற்களை பரிசோதிக்கவும்

பற்களில் உள்ள கறைகளை நீக்குவதற்கு வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றுவதோடு, மருத்துவரின் அறிவுரையும் மிகவும் முக்கியம். எனவே பற்களில் உள்ள நீங்கா கறைகளை நீக்க மருத்துவரிடம் சென்று பற்களை பரிசோதனை செய்ய வேண்டும். என்ன தான் வீட்டிலேயே பற்களுக்கு சரியான பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தாலும், சீரான இடைவெளியில் பற்களின் ஆரோக்கியத்தை மருத்துவரிடம் சென்று சோதனை செய்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம் என்பதை மறவாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Remove Tobacco Stains From Teeth In Tamil

Here are some ways to remove tobacco stains from teeth. Read on...
Story first published: Monday, October 25, 2021, 14:06 [IST]
Desktop Bottom Promotion