For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க பிட்டம் சொரசொரன்னு அசிங்கமா இருக்கா? இதோ அதைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள்!

பிட்ட பகுதியை எடுத்துக் கொண்டால், பெரும்பாலானோரின் பிட்டம் சொரசொரவென்று பருக்களுடன் அசிங்கமாக இருக்கும். இப்படிப்பட்ட பிட்டத்தைக் கொண்டவர்கள், அதைப் போக்க எத்தனையோ க்ரீம்களை பயன்படுத்தி இருப்பார்கள்.

|

சரும அழகு என்று சொல்லும் போது, அந்த சருமமானது பட்டுப்போன்று மென்மையாக இருக்க வேண்டும். ஆனால் பலருக்கு அப்படி இருப்பதில்லை. குறிப்பாக பிட்ட பகுதியை எடுத்துக் கொண்டால், பெரும்பாலானோரின் பிட்டம் சொரசொரவென்று பருக்களுடன் அசிங்கமாக இருக்கும். இப்படிப்பட்ட பிட்டத்தைக் கொண்டவர்கள், அதைப் போக்க எத்தனையோ க்ரீம்களை பயன்படுத்தி இருப்பார்கள். இருப்பினும் எந்த பலனும் கிடைத்திருக்காது.

Home Remedies For Smooth Butt

ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில இயற்கை வழிகளைப் பின்பற்றினால், நிச்சயம் பிட்ட பகுதியில் உள்ள பருக்கள் நீங்கி, பிட்டம் பட்டுப் போல மென்மையாக இருக்கும். இப்போது அந்த இயற்கை வழிகளைக் காண்போம் வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய், பிட்டத்தில் உள்ள பருக்களை போக்கக்கூடியது. ஏனெனில் இது சருமத்தில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் பசையின் உற்பத்தியைக் குறைத்து, அழற்சியை சரிசெய்து, தொற்றுக்களை உண்டாக்கும் கிருமிகளையும் அழிக்கும். அதற்கு தேங்காய் எண்ணெயை தினமும் பிட்டத்தில் தடவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை தேங்காய் எண்ணெயை தடடிவி வந்தால், பிட்டம் மென்மையாவதை நீங்களே காண்பீர்கள்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரில் இயற்கையாகவே ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இது பருக்கள் தொடர்பான பிரச்சனையை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது. ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள வைட்டமின் சி, பிட்டத்தில் பருக்களின் பெருக்கத்திற்கு காரணமான பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவும். அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி நனைத்து பிட்டத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழையில் உள்ள மருத்துவ பண்புகள், பருக்களால் ஏற்படும் காயங்களை ஆற்ற உதவுகிறது. அதற்கு கற்றாழை ஜெல்லை இரவு தூங்கும் முன் பிம்பிள் உள்ள பிட்டத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நாளடைவில் பருக்கள் பட்டுப்போல மாறிவிடும்.

டீ-ட்ரீ ஆயில்

டீ-ட்ரீ ஆயில்

டீ-ட்ரீ ஆயிலில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-செப்டிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை பருக்களின் வளர்ச்சிக்கு காரணமான பாக்டீரியாக்களை அழித்து, விரைவில் பருக்களை உதிர வைத்து, பருக்களால் ஏற்படும் தழும்புகளையும் நீக்கும். அதற்கு சில துளிகள் டீ-ட்ரீ ஆயிலை பஞ்சுருண்டையில் நனைத்து, பிட்டத்தில் மீது தடவி காய வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். உங்களுக்கு சென்சிடிவ் சருமம் என்றால் டீ-ட்ரீ ஆயிலுடன் நீர் சேர்த்து பயன்படுத்துங்கள். இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸ் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள், பிம்பிள் போன்றவற்றை வெளியேற்றும் அற்புதமான பொருள். இந்த ஓட்ஸை பொடி செய்து, அத்துடன் தயிர் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, பிம்பிள் உள்ள பிட்டத்தில் தடவி நன்கு காய்ந்த பின் நீர் பயன்படுத்தி 5 நிமிடம் மென்மையாக தேய்க்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரால் பிட்டத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்தால் பிட்டம் மென்மையாக இருக்கும்.

தக்காளி ஜூஸ் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர்

தக்காளி ஜூஸ் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர்

தக்காளியில் பல்வேறு வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை பருக்களையும், அவை விட்டு செல்லும் தழும்புகளையும் நீக்கும். அதே சமயம் ஆப்பிள் சீடர் வினிகர் சருமத்துளையின் ஆழத்தில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்யும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் தக்காளி கூழுடன் 1/2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, பிட்டத்தைச் சுற்றி தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

வேப்ப எண்ணெய்

வேப்ப எண்ணெய்

பழங்காலத்தில் சரும தொற்றுகளுக்கு வேப்பிலை மருந்தாக பயன்படுத்தப்பட்டது. வேப்பிலையில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள் உள்ளதால், இவை அனைத்து வகையான சரும தொற்றுக்களையும் சரிசெய்ய வல்லது. அதற்கு வேப்பிலை எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் தினமும் 2 முறை தடவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், பிட்டத்தில் உள்ள பருக்கள் மாயமாய் மறையும்.

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின்

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின்

எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்து. இது மெலனின் உற்பத்தியைக் குறைத்து, சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும். அதே சமயம் கிளிசரின் சருமத்திற்கு மென்மைத்தன்மையை அளிக்க வல்லது. எலுமிச்சை சாற்றையும், கிளிசரினையும் சரி சம அளவில் எடுத்து கலந்து, அதை பாதிக்கப்பட்ட பிட்டத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், நல்ல பலன் கிடைப்பதைக் காண்பீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies For Smooth Butt in Tamil

Here are some home remedies for smooth butt. Read on...
Desktop Bottom Promotion