For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க உதடு கருப்பா மாறுவதற்கு நீங்க செய்யும் இந்த பழக்கம்தான் காரணமாம்...இனி அத செய்யாதீங்க..!

உலர்ந்த மற்றும் வெடிப்புள்ள உதடுகள் உதடுகளில் நிறமாற்றத்தை ஏற்படுத்தும். உங்கள் உதடுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க, ஹைட்ரேட் செய்வது முக்கியம். உங்கள் உதடுகளை நன்றாக பராமரிக்க நல்ல லிப் பாம் தடவவும்.

|

ஒருவரின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் உதடு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான இளஞ்சிவப்பு உதடு வைத்திருப்பது ஒருவர் முகத்தின் கவர்ச்சியான அம்சமாகும். யாரும் கண்டுபிடிக்க தவறாத ஒரு அம்சம். இளஞ்சிவப்பு உதடுகள் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆணின் முகத்திற்கும் கவர்ச்சியை சேர்க்கின்றன. ஆனால் வயதானது, சூரியன் பாதிப்பு போன்ற பல காரணிகள் உண்மையில் உதடுகளில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி அவற்றை விரைவிலையே கருப்பாக மாற்றும்.

habits that are making your lips dark

உங்கள் உதடுகளை மீண்டும் அழகாகவும் இளஞ்சிவப்பு நிறமாகவும் மாற்ற பல வழிகள் உள்ளன. ஆனால், உங்கள் உதடு கருப்பாக நிறம் மாறுவதற்கு என்ன காரணம் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆம். உங்கள் உதடுகளை மெதுவாக கருமையாக்கும் ஐந்து பழக்கங்கள் பற்றி இக்கட்டுரையில் நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்கள் உதடுகளை ஈரப்பதமாக்குவதில்லை

உங்கள் உதடுகளை ஈரப்பதமாக்குவதில்லை

உலர்ந்த மற்றும் வெடிப்புள்ள உதடுகள் உதடுகளில் நிறமாற்றத்தை ஏற்படுத்தும். உங்கள் உதடுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க, ஹைட்ரேட் செய்வது முக்கியம். உங்கள் உதடுகளை நன்றாக பராமரிக்க நல்ல லிப் பாம் தடவவும். கோகோ வெண்ணெய், ஷியா வெண்ணெய் போன்ற பொருட்களைப் பயன்படுத்துங்கள்.

MOST READ: உங்க உடலின் ஆக்சிஜன் அளவை பராமரிக்க உதவும் இரத்த ஓட்டத்தை இந்த உணவுகள் மூலம் அதிகரிக்கலாம் தெரியுமா?

இறந்த சருமத்தை அகற்றவில்லை

இறந்த சருமத்தை அகற்றவில்லை

வெளிப்புற உதடுகள் ஈரப்பதத்தை எளிதில் இழக்க முனைகின்றன. ஏனெனில் இது நம் முகத்தில் சருமத்தின் ஒல்லியான அடுக்கு. வெடிப்புள்ள மற்றும் உலர்ந்த உதடுகளிலிருந்து விடுபட, இறந்த சருமத்தை அகற்றவும், உங்கள் உதடுகளை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க நீங்கள் வழக்கமாக எக்ஸ்போலியேட் செய்ய வேண்டும்.

சன் பிளாக் தவிர்க்கிறது

சன் பிளாக் தவிர்க்கிறது

உங்கள் சருமத்தைப் போலவே, உங்கள் உதடுகளும் வெயிலைப் பெறலாம். எனவே, கடுமையான புற ஊதா கதிர்களிடமிருந்து உங்கள் உதடுகளைப் பாதுகாக்க வேண்டும். எனவே, நீங்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு SPF 30 கொண்ட லிப் பாம் தடவவும்.

MOST READ: உங்க உடலில் இயற்கையாகவே ஆக்சிஜன் அளவு அதிகரிக்க நீங்க 'இத' செஞ்சா போதுமாம்...!

புகைத்தல்

புகைத்தல்

புகைப்புடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு பொதுவாக உதடு கருப்பாக காணப்படும். சிகரெட் மற்றும் பீடி குடிப்பது உங்கள் உதடுகளை கருப்பாக மாற்றும். நீங்கள் ஒரு சிகரெட் புகையை சுவாசித்தவுடன், நிகோடின் மற்றும் தார் உதடுகளில் இடமாற்றம் செய்யப்படுகின்றன. இது இறுதியில் உங்கள் உதட்டில் நிறமாற்றத்தை ஏற்படுத்துகிறது.

உதடு பராமரிப்பு இல்லாதது

உதடு பராமரிப்பு இல்லாதது

தோல் பராமரிப்பு என்று வரும்போது, உதடு பராமரிப்பை நாம் புறக்கணிக்கிறோம். ஈரப்பதமூட்டுதல் முதல் உதடு உரித்தல் வரை, உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்திலும் உதடுகளை சேர்க்க வேண்டும். உங்கள் உதடுகளின் தோற்றத்தை மேம்படுத்த, ஒவ்வொரு இரவும் பாதாம் எண்ணெயை உதட்டில் மசாஜ் செய்யலாம். வழக்கமான மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

habits that are making your lips dark

Here we are talking about the habits that are making your lips dark.
Story first published: Saturday, May 15, 2021, 13:30 [IST]
Desktop Bottom Promotion