For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பற்களில் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கறையை நிரந்தரமாக நீக்க இந்த சமையலறை பொருட்களே போதுமாம் தெரியுமா?

பற்களில் இருக்கும் மஞ்சள் கறையைஅகற்றுவது ஒரு கடினமான பணி. எவ்வளவு ஆற்றல் கொண்ட பற்பசையைக் கொண்டு ஒருவர் பல் துலக்கினாலும், பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவது நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒன்று.

|

பற்களில் இருக்கும் மஞ்சள் கறையைஅகற்றுவது ஒரு கடினமான பணி. எவ்வளவு ஆற்றல் கொண்ட பற்பசையைக் கொண்டு ஒருவர் பல் துலக்கினாலும், பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவது நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒன்று. முறையற்ற பல் பராமரிப்பு அல்லது சில உணவுப் பொருட்கள் எனபற்கள் மஞ்சள் நிறமாக இருப்பதற்கான காரணங்கள் பல உள்ளது.

Effective Kitchen Ingredients For Teeth Whitening in Tamil

எத்தனை முறை வாய் கொப்பளித்தாலும், பல் துலக்கினாலும் மஞ்சள் கறையை அகற்றி விட முடியாது. ஆனால், உலகில் உள்ள மற்ற எல்லா பிரச்சனைகளையும் போலவே, பற்களின் மஞ்சள் நிறத்திற்கும் இயற்கையான தீர்வு இருக்கிறது. மஞ்சள் நிற பற்களை சரி செய்ய இந்த எளிய சமையலறை பொருட்களை பயன்படுத்தலாம். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகரின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உங்கள் பற்களின் வெள்ளை நிறத்தை மீண்டும் கொண்டு வர உதவும். உங்கள் வழக்கமான மவுத்வாஷை சிறிது ஆப்பிள் சைடர் வினிகருடன் கலக்கினால் போதும். பிறகு, பற்களின் மஞ்சள் நிறத்தைப் போக்க ஒருமுறை உங்கள் வாயைக் கொப்பளிக்கவும். இதைத் தொடர்ந்து செய்யவும், ஆனால் அதிக ஆப்பிள் சைடர் வினிகர் பல் பற்சிப்பி சிதைவதற்கு வழிவகுக்கும் என்பதால், அதன் அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் பல் பராமரிப்புக்கு உதவும். துலக்குவதற்கு முன், உங்கள் வழக்கமான பற்பசையைத் தூக்கி எறிந்துவிட்டு, அதற்குப் பதிலாக மஞ்சளைக் கொண்டு பல் துலக்குங்கள். பல் துலக்கி முடித்ததும், உங்கள் வாயிலிருந்து மஞ்சளை அகற்றி விடவும், பின்னர் பற்பசையைப் பயன்படுத்தி துலக்கவும்.

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சுத் தோலில் உள்ள அமிலத் தன்மைகள் அதை இயற்கையான ப்ளீச் ஆக்குகிறது மற்றும் எந்த நேரத்திலும் மஞ்சள் கறையில் இருந்து விடுபட இது உதவும். உறங்கும் முன் ஆரஞ்சு தோலின் உட்பகுதிகளால் பற்களைத் தேய்த்து துவைக்கவும், அதன் பலன்கள் விரைவில் வெளிப்படும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

நீங்கள் எழுந்தவுடன் தேங்காய் எண்ணெயில் வாயைக் கொப்பளிப்பது, உங்களின் அட்டகாசமான புன்னகையை மீண்டும் கொண்டுவர உதவும். அதன்பின் தண்ணீரில் வாய் கொப்பளித்து விட்டு, உங்கள் வழக்கமான பற்பசையால் துலக்கவும். உங்கள் தினசரி காலை வழக்கத்தில் இதைச் சேர்ப்பது இயற்கையாகவே பற்களை வெண்மையாக்க உதவும்.

கரித்தூள்

கரித்தூள்

கரித்தூள் ஒருவேளை மிகவும் பயனுள்ள இயற்கை சுத்தப்படுத்திகளில் ஒன்றாகும். அதிக ஆக்டிவேட்டட் கரி உள்ளடக்கம் கொண்ட பற்பசையை தேர்ந்தெடுங்கள் மற்றும் அதை பயன்படுத்தி பிரஷ் செய்து பிரகாசமான முடிவுகளைப் பெறுங்கள். வாயைக் கழுவுவதற்கு முன் அதை நீண்ட நேரம் பற்களில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள், இல்லையெனில் எதிர்மறை விளைவுகள் ஏற்படும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவுடன் பல் துலக்குவது வெண்மையாக்க உதவுவது மட்டுமல்லாமல், வாயில் பாக்டீரியாக்கள் தங்குவதையும் தடுக்கும். ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் இரண்டு ஸ்பூன் தண்ணீர் கலந்து, இந்தக் கலவையுடன் துலக்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Effective Kitchen Ingredients For Teeth Whitening in Tamil

Check out these simple kitchen hacks to get rid of yellow teeth forever.
Story first published: Friday, August 12, 2022, 17:07 [IST]
Desktop Bottom Promotion