For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்

பல தேவையற்ற அழகு குறிப்புகளை நீங்கள் பயன்படுத்தி அதனால் விளையும் தீங்குகளுக்கு உங்கள் சருமத்தை விட்டுவிடாதீர்கள். அழகு குறிப்புகளுக்கு பின்னால் இருக்கும் உண்மைகள் என்ன கட்டுகதைகள் என்ன என்பதை அறிந்து

|

இப்போது வலைத்தளங்களில் பல அழகு குறிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதில் எது உங்கள் சருமத்திற்கு நலல்து எது உங்கள் சருமத்திற்கு சேராது என்பது தெரிந்து முயற்சி செய்ய வேண்டும். மேலும் அழகு குறிப்புகளில் சில உண்மையாக வேலை செய்யக்கூடியதாக இருக்கும் மற்றும் சில குறிப்புகள் உங்கள் சருமத்திற்கு ஏற்றதாக இருக்காது.

Best Beauty Tips and Myths

பல தேவையற்ற அழகு குறிப்புகளை நீங்கள் பயன்படுத்தி அதனால் விளையும் தீங்குகளுக்கு உங்கள் சருமத்தை விட்டுவிடாதீர்கள். அழகு குறிப்புகளுக்கு பின்னால் இருக்கும் உண்மைகள் என்ன கட்டுகதைகள் என்ன என்பதை அறிந்து செயல்படுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரெட் லிப்ஸ்டிக்

ரெட் லிப்ஸ்டிக்

ரெட் லிப்ஸ்டிக் போட்டு கொள்ள வேண்டாம் என்பது சிலரின் கருத்தாக இருக்கும். ஆனால் உண்மையில் ரெட் லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ளலாம். நீங்கள் முதல் முதலில் ரெட் லிப்ஸ்டிக் போட விரும்பவில்லை என்றால் சற்று லைட் நிற ரெட் லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ளலாம். உங்கள் சருமம் சற்று மஞ்சள் நிறமாக இருந்தால் நீங்கள் இளஞ்சிவப்பு நிற லிப்ஸ்டிக் தேர்வு செய்யலாம். நீங்கள் பிங்க் நிறத்தில் இருந்தால் கூல் ரெட் லிப்ஸ்டிக் தேர்ந்து எடுங்கள்.

 இயற்கை பொருட்கள்

இயற்கை பொருட்கள்

இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு கூற்று உள்ளது. ஆனால் செயற்கை பொருட்களை விட இயற்கை பொருட்கள் மட்டும் தான் சிறந்தது என்று எந்த ஆராய்ச்சியும் கூறவில்லை. மேலும் எல்லா செயற்கை பொருட்களும் இரசாயனங்களை கொண்டு இருக்கவில்லை. அதே போல் எல்லா இயற்கை பொருட்களும் சுத்தமானவை இல்லை.

நெயில் பாலீஷ்

நெயில் பாலீஷ்

உங்கள் நகங்களில் நெயில் பாலீஷ் போடும் போது அது விரல்களில் மற்ற இடங்களில் பட்டு விட்டால் கவலைப்படத் தேவையில்லை. நெயில் பாலீஷ் பட்ட இடங்களில் சற்று எண்ணெய் வைத்து தேய்த்து மறுநாள் காலையில் குளிக்கும் போது லேசாக தேய்த்தால் போதுமானது. தேவையற்ற இடங்களில் பட்ட நெயில் பாலீஷ் அழிந்து விடும். பின்னர் நகங்களின் மேல் ஒரு அழகான டாப் கோட்டிங் கொடுத்துக் கொள்ளுங்கள்.

டூத்பேஸ்ட்

டூத்பேஸ்ட்

இப்போது டூத்பேஸ்ட் பயன்படுத்தி முகப்பருக்களை போக்கலாம் என்பது பரவிவருகிறது. அதாவது டூத்பேஸ்ட்களில் ஜிங்க் இருப்பதால் இப்படிப்பட்ட கூற்றுகள் பரவி வருகிறது. ஆனால் இதில் உள்ள ஃவுளூரைடு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பொருட்கள் உங்கள் முகப்பருக்களை இன்னும் அதிகப்படுத்தும்.

தண்ணீர் பருகுதல்

தண்ணீர் பருகுதல்

அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும் என்று கருதுகின்றனர். ஆனால் தண்ணீர் மட்டுமே உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்காது. நீங்கள் உண்ணும் உணவில் இருக்கும் கொழுப்பு அமிலங்களும் இதற்க்கு உதவும்,. எனவே உங்கள் உணவில் கொழுப்பு அமிலங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.

சாக்லெட்

சாக்லெட்

சாக்லெட் சாப்பிடுவதால் முகத்தில் பருக்கள் ஏற்படும் என்றும் சிலர் கூறுவார்கள். ஆனால் சாக்லெட் உண்மையில் பருக்களை ஏற்படுத்தாது. சாக்லெட்களில் உள்ள சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ், நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் கிளைசெமிக் பொருட்களைக் கொண்ட அனைத்தும் தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

காஸ்மெட்டிக்ஸ்

காஸ்மெட்டிக்ஸ்

உங்கள் மேக்கப் சாதனங்களை பிரிட்ஜ்ஜில் வைத்து படுத்தினால் நீண்ட நாட்கள் இருக்கும் என்று கருதிகிறார்கள். ஆனால் நீங்கள் பிரிட்ஜ்ஜில் வைக்கும் போது காஸ்மெட்டிக்ஸ்யில் உள்ள எண்ணெய் மென்மையாகி தண்ணீராக மாறிவிடும். எனவே உங்கள் ரூமில் சூரியஒளி நேரடியாக படாத இடங்களில் வைத்தாலே போதும். அவை மிக பாதுகாப்பாக இருக்கும்.

பவுண்டேஷன்

பவுண்டேஷன்

பவுண்டேஷன் போடுவது முகத்தில் புள்ளிகளை ஏற்படுத்தும் என்ற கருத்து உள்ளது. ஆனால் பவுண்டேஷன் உண்மையில் அப்படி செய்யாது. ஆனால் பவுண்டேஷனை அந்த நாளின் முடிவில் அகற்றிவிட்டால் எந்த விதமான சரும பிரச்சனைகளும் ஏற்படாது.

தலை வாருதல்

தலை வாருதல்

ஒரு நாளைக்கு அதிக முறை தலை வாருவதால் உச்சந்தலைக்கு சிறந்தது. ஆனால் உங்கள் முடியின் நீளத்தை இது அதிகரிக்காது. அதிக முறை தலை வாருதல் முடியை சேதப்படுத்தும் மற்றும் முடி உடைவதற்கு காரணமாக அமையும். மேலும் தலையில் இருக்கும் இயற்கையான எண்ணெய்யை பாதிக்கும். எப்போது தேவையோ அப்பொழுது மட்டும் தலையை வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Beauty Tips and Myths

Brush your hair 100 times a day might be good for your scalp, but not for the length of your hair. Repetitive brushing damages your hair and can cause breakage and splitting. It also distributes the natural oils, which leads to the need for more regular washing. Brush hair only when necessary.
Desktop Bottom Promotion