For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2 நிமிடத்தில் அக்குள் முடியை நீக்க வேண்டுமா? அப்ப இத செய்யுங்க...

இங்கு 2 நிமிடத்தில் அக்குள் முடியை நீக்கும் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

உடலை அழகாக பராமரிப்பதற்கு, உடலின் ஒவ்வொரு உறுப்புக்களுக்கும் தவறாமல் சரியான பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். முக்கியமாக அக்குள் பகுதியை எடுத்துக் கொண்டால், மிகவும் ஸ்பெஷலான பராமரிப்பைக் கொடுக்க வேண்டும். அதுவும் கோடைக்காலத்தில், அக்குள் பகுதியை முடியின்றி, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அக்குளில் வளரும் முடியை நீக்குவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. வெறும் ஷேவிங் மற்றும் அழகு நிலையங்களுக்குச் சென்றால் மட்டும் தான் அக்குளில் உள்ள முடியை நீக்க முடியும் என்பதில்லை.

Tips for Removing Underarm Hairs in Just 2 Minutes

மேலும் அக்குள் முடியை நீக்க பல்வேறு இயற்கை வழிகளும் உள்ளன. இயற்கை வழிகளின் மூலம் அக்குள் முடியை நீக்கினால், எவ்வித பக்கவிளைவுகளும் இருக்காது. அக்குளில் வளரும் முடியை வெறும் 2 நிமிடத்தில் நீக்க முடியும். அதுவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளைப் பின்பற்றினால், 2 நிமிடத்தில் அக்குள் முடியை காணாமல் போகச் செய்யலாம். சரி, இப்போது அக்குள் முடியைப் போக்கும் இயற்கை வழிகளைக் காண்போமா...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* சர்க்கரை - 2 கப்

* எலுமிச்சை சாறு - 1/4 கப்

* தண்ணீர் - 1/4 கப்

* தேன் - 1/4 கப்

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

* ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, சிறிது நேரம் நீரை கொதிக்க வைக்க வேண்டும்.

* நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மற்ற பொருட்களையும் சேர்த்து கலந்து, குறைந்தது 1/2 மணிநேரம் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

* எப்போது கலவையானது ப்ரௌன் நிறத்தில் மாறுகிறதோ மற்றும் சற்று கெட்டியாகிறதோ, அப்போது அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

* அக்குளை நீரால் கழுவ வேண்டும். பின் துணியால் அக்குளை துடைத்து, உலர்த்த வேண்டும். இதனால் அக்குளில் உள்ள வியர்வை நீங்கும்.

* பின்பு பேபி பவுடர் அல்லது வேறு ஏதேனும் டால்கம் பவுடரை அக்குளில் தடவுங்கள். இதனால் அக்குளில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கும்.

* பிறகு தயாரித்து வைத்துக்க கலவையை தட்டையான ஸ்பூன் பயன்படுத்தி அக்குளில் மெல்லிய லேயராக தடவ வேண்டும்.

* கலவையானது நன்கு காய்ந்த பின், மிகவும் வேகமாக உரித்தெடுங்கள். மெதுவாக உரித்தெடுத்தால், சருமத்தில் சுருக்கங்கள் விழ ஆரம்பிக்கும். பின் அக்குளில் உள்ள முடியும் சரியாக நீங்காமல் இருக்கும்.

* உரித்தெடுத்த பின், அக்குளை சோப்பு பயன்படுத்தி நீரால் கழுவ வேண்டும். பின் துணியால் துடைத்துவிட்டு, மாய்ஸ்சுரைசர் எதையேனும் தடவுங்கள். இந்த செயலை மற்றொரு அக்குளிலும் செய்யுங்கள்.

கீழே வேறு சில இயற்கை வழிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

கடலை மாவு மாஸ்க்

கடலை மாவு மாஸ்க்

ஒரு பௌலில் 4-5 டேபிள் ஸ்பூன் கடலை மாவில், 1 டீஸ்பூன் பிரஷ் க்ரீம், 4-5 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் அந்த கலவையை அக்குளில் முடி வளரும் திசையை நோக்கி தடவி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் நீர் பயன்படுத்தி அக்குளை மென்மையாக சிறிது நேரம் ஸ்கரப் செய்து, குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்தால், அக்குளில் உள்ள முடி நீங்கும்.

முட்டை மாஸ்க்

முட்டை மாஸ்க்

ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, அக்குளில் தடவி நன்கு காய வையுங்கள். பின் முடி வளரும் எதிர் திசையை நோக்கி உரித்து எடுங்கள். அதன் பின் நீரால் அக்குளைக் கழுவுங்கள். இறுதியில் மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்துங்கள்.

முட்டை மற்றும் சோள மாவு

முட்டை மற்றும் சோள மாவு

முட்டை மற்றும் சோள மாவு கலவையும் அக்குள் முடியை நீக்கும். அதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து, அக்குளில் தடவி நன்கு உலர்த்துங்கள். அதன்பின் நீரால் அக்குளைக் கழுவுங்கள்.

பால் மற்றும் மஞ்சள் தூள்

பால் மற்றும் மஞ்சள் தூள்

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அதை அக்குளில் தடவி சில நிமிடங்கள் நன்கு உலர்த்துங்கள். பின்பு குளிர்ந்த நீரால் அக்குளைக் கழுவுங்கள். இதனாலும் அக்குள் முடி நீங்கும்.

சர்க்கரை மற்றும் எலுமிச்சை

சர்க்கரை மற்றும் எலுமிச்சை

இது ஒரு பழங்கால வழியாகும். இதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, அக்குளில் முடி வளரும் திசையை நோக்கித் தடவுங்கள். கலவையான நன்கு காய்ந்த பின், ஈரத்துணியால் அக்குளைத் துடைத்தெடுங்கள். இந்த செயலை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்துங்கள். இதனால் அக்குளில் வளரும் முடியின் வளர்ச்சி குறைந்திருப்பதைக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips for Removing Underarm Hairs in Just 2 Minutes

During the summer months it is very important that you take good care of your underarm area and keep them clean and hair-free. You can remove the underarm hairs in just two minutes with some of the home remedies. Read on to know more...
Story first published: Monday, May 7, 2018, 17:39 [IST]
Desktop Bottom Promotion