Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
காலை சுத்தமாக வைத்திருந்தாலும் துர்நாற்றம் வீசுகிறதா? பேக்கிங் சோடா இருக்க கவலை எதுக்கு?
அத்தளட்ஸ் ஃபுட் என்பது எளிதில் தொற்றக்கூடிய ஒரு பூஞ்சை தொற்றாகும். இந்த பூஞ்சை தொற்று நமது பாதங்கள் மற்றும் கைகளில் எளிதாக தொற்றிக் கொள்கிறது. இந்த பாக்டீரியா ஈரமான நிலப்பரப்பில் வளருகிறது. இதை நம் சம
அத்தளட்ஸ் ஃபுட் என்பது எளிதில் தொற்றக்கூடிய ஒரு பூஞ்சை தொற்றாகும். இந்த பூஞ்சை தொற்று நமது பாதங்கள் மற்றும் கைகளில் எளிதாக தொற்றிக் கொள்கிறது.

இந்த பாக்டீரியா ஈரமான நிலப்பரப்பில் வளருகிறது. எனவே ஈரமான இடங்களுக்கு வெறும் கால்களில் செல்வது, ரெhம்ப இறுக்கமான காலணிகளை அணிவதால் கூட இந்த தொற்றுகள் பரவ வாய்ப்புள்ளது.

அறிகுறிகள்
சரும எரிச்சல்
அரிப்பு
வறண்ட தோலுரிந்த சருமம்
இப்படி நிறைய தீமைகளை உண்டு பண்ணும் இந்த பூஞ்சை தொற்றை நம் சமையலறை பொருளான பேக்கிங் சோடா கொண்டே சரி செய்ய இயலும். வாங்க பார்க்கலாம்.

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா வில் உள்ள அல்கலைன் பொருள் சரும pH அளவை பராமரிக்கிறது. இது ஒரு ஸ்க்ரப் மாதிரி செயல்பட்டு சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்பதை கீழ்க்கண்டவாறு காணலாம்.

பேக்கிங் சோடா மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு தன்மை பூஞ்சை தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் அழற்சி மற்றும் அரிப்பு போன்றவற்றை குறைக்கிறது.
தேவையான பொருட்கள்
1 கப் ஆப்பிள் சிடார் வினிகர்
2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா
பயன்படுத்தும் முறை
முதலில் ஆப்பிள் சிடார் வினிகரை ஒரு கப் நீரில் கலந்து கொள்ளவும். பிறகு அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்கவும். இப்பொழுது ஒரு பஞ்சை எடுத்து இந்த கலவையில் நனைத்து பாதிக்கப்பட்ட பாதங்களில் நன்றாக தடவுங்கள். 30 நிமிடங்கள் வரை காத்திருந்து பிறகு சாதாரண நீரில் கழுவவும். ஒரு சுத்தமான துண்டை எடுத்து நன்றாக துடைத்து விடுங்கள். இதை ஒரு வாரத்திற்கு 1-2 முறை என செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பேக்கிங் சோடா மற்றும் பூண்டு
பூண்டு பூஞ்சை எதிர்ப்பு பொருள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருளை கொண்டுள்ளது. இதனால் பூஞ்சை தொற்றை எளிதாக போக்குகிறது.
தேவையான பொருட்கள்
2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா
2 பூண்டு பொடி
பயன்படுத்தும் முறை
ஒரு பாத்திரத்தில் பூண்டு பொடியை சேர்த்து அதனுடன் பேக்கிங் சோடாவை சேருங்கள். பிறகு அதனுடன் 1/2 லிட்டர் தண்ணீர் சேருங்கள். இதில் 15-20 நிமிடங்கள் வரை பாதங்களை ஊற வைக்கவும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். ஒரு சுத்தமான துண்டை எடுத்து நன்றாக துடைத்து விடுங்கள். ஒரு நாளைக்கு 2-3 தடவை செய்து வந்தால் சீக்கிரமே நல்ல மாற்றத்தை காணலாம்.

பேக்கில் சோடா மற்றும் கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லில் பூஞ்சை தொற்றை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது. எனவே இது அத்தளட்ஸ் ஃபுட் டுக்கு ஒரு நல்ல மருந்தாக செயல்படுகிறது.
தேவையான பொருட்கள்
2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்
1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா
பயன்படுத்தும் முறை
ஒரு சுத்தமான கற்றாழய இலையை எடுத்து அதிலிருந்து ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து கொள்ளுங்கள். இதை ஒரு பெளலில் எடுத்து பேக்கிங் சோடாவை கலந்து நன்றாக கலக்கவும். இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை என செய்து வந்தால் பூஞ்சை தொற்று விரைவில் சரி ஆகிவிடும்.

பேக்கிங் சோடா மற்றும் வெங்காயச் சாறு
வெங்காயத்தில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருள் பூஞ்சை தொற்றுக்கு எதிராக செயல்படுகிறது.
தேவையான பொருட்கள்
1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா
1 டேபிள் ஸ்பூன் வெங்காயச் சாறு
பயன்படுத்தும் முறை
ஒரு மீடிய வடிவ வெங்காயத்தை எடுத்து அதை அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வையுங்கள். 15 நிமிடங்கள் கழித்து ஒரு காட்டன் பஞ்சை எடுத்து நன்றாக துடைத்து விடுங்கள். இதை வாரத்திற்கு ஒரு முறை என செய்து வாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
மேற்கண்ட இயற்கை முறைகள் மூலம் அத்தளட்ஸ் ஃபுட் டுக்கு பை பை சொல்லி விடலாம்.



Click it and Unblock the Notifications