Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
இவ்ளோ கருப்பா இருக்கிற அக்குளையும் சரிசெய்யும் உருளைக்கிழங்கு... எப்படி அப்ளை பண்ணணும்?
உருளைக்கிழங்கு ஒரு இயற்கையான ப்ளீச்சிங் ஏஜெண்ட் மாதிரி செயல்படுகிறது. மேலும் இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அக்குள் சருமத்தை சரி செய்து புதுப்பிக்கிறது.
உங்கள் அக்குள் பகுதி கருப்பாக இருக்கிறதா? அப்போ இத ட்ரை பண்ணி பாருங்க
இந்த நவீன காலத்தில் பெண்களுக்கு என்று வித விதமான ஸ்டைலில் ஆடைகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. மற்ற பெண்களை பார்க்கும் போது நமக்கும் ஸ்லீவ்லெஸ் டாப், ப்ளெவ்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து செல்ல ஆசையாக த் தான் இருக்கும்.
ஆனால் அக்குள் பகுதி கருப்பாக அசிங்கமாக இருக்கும் போது நாம் நிறையவே யோசிக்க செய்வோம். ஆசையாக இருந்தாலும் இந்த மாதிரியான ஆடைகளை தவிர்க்கவும் செய்வோம்.

அக்குள் பகுதி
அக்குள் பகுதியில் அடிக்கடி ஷேவிங் செய்வது, வேக்ஸ் செய்வது நமக்கு இந்த மாதிரியான கருப்பை ஏற்படுத்தி விடுகிறது. இந்த கருப்பை போக்க நிறைய க்ரீம்களையும் அழகு சாதன பொருட்களையும் நாம் தேடி அலையவே வேண்டாம். நம் சமையலறை பொருட்களே இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது. உருளைக்கிழங்கு ஒரு இயற்கையான ப்ளீச்சிங் ஏஜெண்ட் மாதிரி செயல்படுகிறது. மேலும் இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சரி செய்து புதுப்பிக்கிறது. சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

உருளைக்கிழங்கு ஜூஸ் மற்றும் தேன்
தேன் ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசர் மாதிரி செயல்பட்டு சருமத்திற்கு ஈரப்பதத்தை தருவதோடு அக்குள் பகுதியில் உள்ள பாக்டீரியாவை அழிக்கிறது.
பயன்படுத்தும் முறை
உருளைக்கிழங்கின் தோலை உரித்து அதை அரைத்து அதன் சாற்றை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். 2 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு ஜூஸை ஒரு பெளலில் எடுத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை அப்படியே உங்கள் அக்குள் பகுதியில் அப்ளே செய்து 20 நிமிடங்கள் காய விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி உலர்த்த வேண்டும். இதை தினமும் செய்து வாருங்கள் நல்ல மாற்றத்தை காணலாம்.

உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி
தக்காளி சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்க உதவுகிறது. உருளைக்கிழங்கு மற்றும் தக்காளியை சிறுது சிறுதாக நறுக்கி அரைத்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இதை உங்கள் அக்குள் பகுதியில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீர் கொண்டு கழுவுங்கள். படுக்கைக்கு போவதற்கு முன் தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

உருளைக்கிழங்கு, லெமன் ஜூஸ் மற்றும் சர்க்கரை
சர்க்கரை மற்றும் லெமன் ஜூஸ் இயற்கையான ஸ்க்ரப் மாதிரி செயல்படுகிறது. இது அக்குள் பகுதியில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. இதனால் சரும நிறம் மாற்றம் பெறும்.
பயன்படுத்தும் முறை
2 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு மற்றும் லெமன் ஜூஸ் இரண்டையும் ஒரு பெளலில் எடுத்து கொள்ளுங்கள். அதில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். இதை அக்குள் பகுதியில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் விட்டு விடவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி உலர்த்த வேண்டும்.

உருளைக்கிழங்கு மற்றும் பால்
உருளைக்கிழங்கு அக்குள் பகுதியில் ஏற்பட்டுள்ள சரும நிறத்தை மாற்றவும் பால் சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுக்கவும் உதவுகிறது.
பயன்படுத்தும் முறை
உருளைக்கிழங்கை அரைத்து அதன் ஜூஸை எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை அக்குள் பகுதியில் தடவி சில நிமிடங்கள் காய விடவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரிக்காய்
இந்த முறை உங்கள் அக்குள் பகுதி சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்கிறது.
பயன்படுத்தும் முறை
1/4 பங்கு அளவு வெள்ளரிக்காய் மற்றும் 1 உருளைக்கிழங்கு இரண்டையும் நறுக்கி அரைத்து கொள்ளுங்கள். இதனுடன் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை சேர்த்து நன்றாக கலக்கவும். இதை அக்குள் பகுதியில் தடவி 20-30 நிமிடங்கள் காத்திருக்கவும். பிறகு சாதாரண நீரில் கழுவவும். இதை ஒரு வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
