Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குழப்பமான நாளாக இருக்குமாம் -
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும் -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
நீங்கள் தினமும் புகைப்பிடிப்பவரா? உங்கள் நகத்தினை சற்று உற்று நோக்குங்கள்!
நகத்தின் நிறத்தினைக் கொண்டே உடலில் ஏற்பட்டுள்ள வியாதிகள் என்னவென்று அறியலாம். பொதுவாக ஒருவருக்கு நகங்கள் சற்று சிவந்த நிறத்தில், தொட்டால் ரத்த ஓட்டம் தெரிந்தால், அவர் ஆரோக்கியமான உடல் நிலை கொண்டவர் என அறிந்துகொள்ளலாம்.
நகம் ஏன் மஞ்சள் நிறமாக மாறுகிறது?
பெண்கள் அடர்ந்த நிறத்தில் நக பாலிஷ் போட்டால், நகம் மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். அதனை தடுக்க முதலில் வெளிர் நிற கோட்டிங் கொடுத்து அதன் பின் அடர்ந்த நிறத்தில் நக பாலிஷ் போட்டுக் கொள்ளலாம்.
அசிடோன் கலந்த நக பாலிஷ் ரிமூவர் உபயோகித்தாலும், இந்த பிரச்சனை வரலாம். அசிடோன் நகத்தின் நிறத்தினை மாற்றி விடும். அதனால் அசிடோன் அல்லாத நக பாலிஷ் ரிமூவர் கேட்டு வாங்குங்கள். அடிக்கடி புகைப்பிடித்தாலும் நகங்கள் மஞ்சள் நிறத்தில் மாற காரணியாக இருக்கிறது.

அதே போல் இன்னொரு காரணம் நகத்தில் ஏற்படும் பூஞ்சை தொற்று. நகம் கடிப்பதனால் நகத்தின் ஓரத்திலுள்ள தோல் உரிந்து தொற்று ஏற்படலாம்.
மஞ்சள் நிறத்தினை அகற்றுவது எப்படி?
டூத் பெஸ்ட் இப்போ நக பேஸ்ட்!
டூத் பேஸ்ட்டை நகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். ஒரு நிமிடம் கழித்து நன்கு கழுவி துடைத்தால் நகங்கள் பளிச்சிடும், உறுதியாகவும் இருக்கும்.
கறைகளை போக்கும் மாத்திரைகள் நகத்திற்கு நிவாரணம்:
கறைகளை போக்கக் கூடிய மாத்திரைகள் (Denture tablets) சூப்பர் மார்கெட்டுகளில் கிடைக்கும். விரல்கள் மூழ்கும் அளவிலான வெதுவெதுப்பான நீரில் மாத்திரையை கரைத்து, அவற்றில் விரல்களை அமிழ்த்த வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து நீரில் கைகளை கழுவ வேண்டும். தினமும் ஒருமுறை செய்தால் நகத்தில்,ஏற்படும் மஞ்சள் நிறம் மாறிவிடும்.
ஹைட்ரஜன் பெராக்ஸைட் (Hydrogen peroxide )
ஹைட்ரஜன் பெராக்ஸைட் நகங்கள் உடைந்து போவதை தடுப்பதுடன், உறுதிப்படுத்தும். 10மி.லி அளவுளள 30% ஹைட் ரஜன் பெராக்ஸைட்டை கால் லிட்டர் அளவுள்ள நீரில் சேர்த்து அதில் சிறிது உப்பும் கலந்து ,கரைந்தவுடன் கைகளை அதனுள் அமிழ்த்த வேண்டும். இது நகக்கண்களில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி கைகளை சுத்தமாக்கி மிருதுவாக்கும்.



Click it and Unblock the Notifications


