தினமும் மார்பகங்களை மசாஜ் செய்வதால் ஏற்படும் அற்புதங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

தற்போது நிறைய பெண்கள் மார்பக புற்றுநோயால் அவஸ்தைப்படுகின்றனர். மேலும் சில பெண்கள் தங்களுக்கு மார்பகங்கள் பெரிதாக இல்லை என்று நினைத்து மனம் வருந்துகின்றனர். இதற்காக கடைகளில் விற்கப்படும் க்ரீம்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் மார்பகங்களின் அளவைப் பெரிதாக்கவும், அதன் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் ஓர் அற்புத வழி உள்ளது. அது தான் மார்பகங்களை மசாஜ் செய்வது. ஒரு பெண் தினமும் மார்பகங்களை மசாஜ் செய்வதன் மூலம், ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இங்கு இந்த நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கட்டிகள் மற்றும் புற்றுநோய் அபாயம் குறையும்

கட்டிகள் மற்றும் புற்றுநோய் அபாயம் குறையும்

தினமும் பெண்கள் தங்களது மார்பகங்களை மசாஜ் செய்வதால், மார்பகங்களில் ஏற்படும் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை வழங்கி உயிர் பிழைக்க முடியும். மேலும் மார்பங்களை மசாஜ் செய்வதால், நிணநீர் சுரப்பிகளில் இரத்த ஓட்டம் அதிகரித்து, புற்றுநோய்களை எதிர்க்கும் செல்கள் அழிக்கப்பட்டு, மார்பகங்களுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

பெரிய மார்பகங்கள்

பெரிய மார்பகங்கள்

மார்பகங்களை மசாஜ் செய்வதன் மூலம், மார்பகங்களின் அளவைப் பெரிதாக்கும் ஹார்மோன்களின் உற்பத்தி தூண்டப்படும். அதிலும் ஒருசில எண்ணெய்கள் அல்லது மூலிகைகளைக் கொண்டு மசாஜ் செய்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

வலி மற்றும் அசௌகரியம் நீங்கும்

வலி மற்றும் அசௌகரியம் நீங்கும்

சில பெண்கள் மாதவிடாய் காலத்தில் தங்கள் மார்பகங்களில் அசௌகரியத்தை உணர்வார்கள். இதிலிருந்து விடுபட, மார்பகங்களை தினமும் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் இரத்த ஓட்டம் மார்பகங்களில் அதிகரித்து, வலி குறையும். அதிலும் மார்பகங்களை மசாஜ் செய்யும் போது, சிறிது சீமைச்சாமந்தி எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் இன்னும் நல்லது.

மார்பகங்களின் அழகு மேம்படும்

மார்பகங்களின் அழகு மேம்படும்

மார்பக திசுக்களில் தசைகள் ஏதும் இல்லை. எனவே மார்பகங்களின் வடிவத்தை அழகாக பராமரிக்க மசாஜ் தான் ஒரே வழி. ஆகவே மார்பகங்கள் அழகான வடிவில் இருக்க வேண்டுமானால், தினமும் மார்பகங்களை மசாஜ் செய்யுங்கள்.

சுருக்கங்கள் தடுக்கப்படும்

சுருக்கங்கள் தடுக்கப்படும்

தினமும் மார்பகங்களை மசாஜ் செய்வதன் மூலம், மார்பங்களில் சுருக்கங்கள் ஏற்படாமல், நன்கு அழகாக இருக்கும். இதற்கு மசாஜ் மூலம் மார்பகங்களில் இரத்த ஓட்டம் அதிகம் இருப்பது தான் காரணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Mind Blowing Benefits Of Massaging Your Breasts Every Day!!!

Here are some mind blowing benefits of massaging your breasts every day. Read on to know more...