For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான எளிய வழிகள்!!!

By Maha
|

பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கு மாதம் ஒருமுறை பல் மருத்துவரை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் நீங்கள் பல் மருத்துவரிடம் அடிக்கடி சென்று பற்களை சுத்தம் செய்ய போர் அடித்திருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி பற்களை சுத்தப்படுத்துங்கள்.

பளிச்சிடும் வெண்மையான பற்கள் வேண்டுமா? இதோ சில சூப்பர் டிப்ஸ்...

பொதுவாக பற்களில் பின்னால் ஏற்படும் கறைகளானது, பாக்டீரியாக்கள் புரோட்டீன் மற்றும் உணவுகளுடன் சேர்ந்து, பற்களின் பின்னால் ஒரு படலமாக படிகிறது. அப்படி படியும் படலத்தைத் தான் பற்காறை அல்லது ப்ளேக் என்று கூறுவார்கள். இப்படி பற்களின் பின்னால் படியும் கறைகளை, பற்களை துலக்குவதன் மூலம் நீக்குவது என்பது கடினம்.

வாய் துர்நாற்றத்தை தவிர்ப்பதற்கான சில இயற்கை வழிகள்!!!

அதுமட்டுமின்றி, அந்த பற்காறைகளை நீக்காவிட்டால், அவை ஈறுகளை தாக்கி, பற்களின் எனாமலை பாதித்து, சொத்தை பற்களை உருவாக்கிவிடும். எனவே பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்க வேண்டியது அவசியம்.

பற்களின் ஈறுகளில் ஏற்படும் தொற்றுக்களை தடுப்பதற்கான 17 இயற்கை வைத்தியங்கள்!!!

சரி, இப்போது பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!

பற்களின் ஆரோக்கியம் மோசமாக இருந்தால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிராம்பு

கிராம்பு

3-4 கிராம்பை பொடி செய்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கறையுள்ள பற்களின் மேல் தடவி, பின் டூத் பிரஷ் கொண்டு தேய்க்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், பற்காறைகள் அகலும்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியை உட்கொள்வதன் மூலம், பற்களை வெண்மையாக வைத்துக் கொள்ளலாம். அதிலும் பற்களின் பின்புறத்தில் உள்ள காறைகளைப் போக்குவதற்கு ஸ்ட்ராபெர்ரியைக் கொண்டு மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரினால் வாயை கொப்பளிக்க வேண்டும்.

மாதுளை

மாதுளை

மாதுளை பூவை காய வைத்து பொடி செய்து, பின் அதில் சிறிது ப்ளாக் உப்பு சேர்த்து, அத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, தினமும் இரண்டு முறை பற்களை துலக்கினால், பற்களில் உள்ள கறைகள் அகன்றுவிடும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா கூட பற்காறைகளைப் போக்க உதவும். அதற்கு விரலால் பேக்கிங் சோடாவை எடுத்து பற்களை தேய்த்து, 2 நிமிடம் கழித்து, டூத் பிரஷ் கொண்டு பற்களைத் தேய்த்தால், பற்காறைகள் உருவாவது தடுக்கப்படுவதோடு, அவை இருந்தாலும் விரைவில் அகன்றுவிடும்.

கொத்தமல்லி

கொத்தமல்லி

கொத்தமல்லி இலைகள் கூட சொத்தைப் பற்களைத் தடுக்கும் என்பது தெரியுமா? அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் கொத்தமல்லி நீரால் வாயைக் கொப்பளிப்பது தான்.

வால்நட்ஸ்

வால்நட்ஸ்

வால்நட்ஸை பேஸ்ட் செய்து, அதனைக் கொண்டு பற்கள் மற்றும் ஈறுகளில் தேய்த்து, பின் பிரஷ் கொண்டு 2 நிமிடங்கள் பற்களைத் துலக்கினால், பற்களில் உள்ள காறைகள் அகலும். மேலும் பற்களும், ஈறுகளும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆப்பிள்

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு, பற்காறைகள் ஏற்படும் வாய்ப்பு குறைவு. ஏனெனில் ஆப்பிளானது பற்களில் அழுக்குகள் சேர்வதைத் தடுத்து, பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோலை காய வைத்து, பொடி செய்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அந்த பேஸ்ட்டைக் கொண்டு பற்களைத் துலக்கினால், பற்காறைகள் விரைவில் நீங்கும். குறிப்பாக இச்செயலை வாரம் இரண்டு முறை மேற்கொள்வது நல்ல பலனைத் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Simple Ways To Remove Plaque Naturally Without a Dentist

Tired of spending those big bucks on a dentist visit, well here are some of the perfect ways to get rid of Plaque yourself and at home, take a look.
Story first published: Tuesday, September 15, 2015, 12:05 [IST]
Desktop Bottom Promotion