பெண்களே! எடுப்பான மார்பகங்கள் வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது மார்பகங்கள் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு என்ன செய்வதென்று தெரிவதில்லை.

மார்பகங்கள் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்க வேண்டுமெனில், ஒருசில செயல்களை தவறாமல் பின்பற்றி வரை வேண்டும். இதனால் மார்பகங்களை அழகான வடிவத்திலும், அளவில் பராமரிக்க முடியும்.

இங்கு மார்பகங்களை கவர்ச்சியானதாக மாற்ற சில ஈஸியான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி வந்தால் நிச்சயம், அன்புத் துணையை எளிதில் உங்கள் அழகிற்கு அடிமையாக்கிவிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூங்கும் நிலை

தூங்கும் நிலை

எப்போதும் படுக்கும் போது, குப்புற தூங்குவதையோ அல்லது பக்கவாட்டில் தூங்குவதையோ தவிர்த்து, மல்லாக்க தூங்க வேண்டும். இதனால் மார்பகங்களில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

மசாஜ்

மசாஜ்

தினமும் மார்பகங்களை மசாஜ் செய்ய வேண்டும். அழகான மார்பகங்கள் வேண்டுமெனில், தினமும் குளிக்கும் போது, சிறிது நேரம் மார்பகங்களை மசாஜ் செய்யுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மாய்ஸ்சுரைசர்

மாய்ஸ்சுரைசர்

சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர் தடவுவது போல, தினமும் மார்பகங்களுக்கும் மாய்ஸ்சுரைசர் தடவி வர வேண்டும். அதிலும் குளித்து முடித்த பின், ஈரப்பசை முற்றிலும் நீங்குவதற்குள் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். இதனால் மார்பகங்கள் மென்மையாக இருக்கும்.

இரத்த ஓட்டம்

இரத்த ஓட்டம்

மார்பகங்கள் அழகாக இருக்க, குளிக்கும் போது முதலில் சுடுநீரைக் கொண்டு மார்பகங்களை மசாஜ் செய்த பின், குளிர்ந்த நீரினால் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் மார்பகங்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

புஷ்-அப் பிரா

புஷ்-அப் பிரா

மார்பகங்கள் நன்கு சிக்கென்று அழகாக வெளிப்பட புஷ்-அப் பிரா உதவும் என்று அனைவருக்கும் தெரியும். எனவே இதனை தினமும் அணிந்து வரலாம்.

தவறான பிராவை தவிர்க்கவும்

தவறான பிராவை தவிர்க்கவும்

பெரும்பாலான பெண்கள் அதிக பணம் செலவழித்து பிரா வாங்கிவிட்டோம் என்று, பொருந்தாமல் இருக்கும் பிராவையும் அணிந்து வருகிறார்கள். இப்படி பொருந்தாத தவறான பிராவை அணிந்தால், அது மார்பகங்களை இன்னும் மோசமானதாகத் தான் மாற்றும். எனவே பிரா பொருந்தாவிட்டால், அதனை அணிவதைத் தவிர்த்திடுங்கள்.

நேராக இருக்கவும்

நேராக இருக்கவும்

எப்போது உட்காரும் போதும் சரி, நிற்கும் போதும் சரி, குனிந்தவாறு இருக்காமல், நேராக இருக்கவும். இப்படி இருப்பதாலும் மார்பகங்கள் அழகாக இருக்கும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

பெண்கள் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, மார்பகங்களும் நல்ல அழகான வடிவத்தையும் பெறும். வேண்டுமெனில் முயற்சித்து தான் பாருங்களேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Easy Ways To Make Your Breasts Look Amazing

Having amazing breasts is something all women would love and regardless of their shape and size, there are a few tricks we have up our sleeves to have them look gorgeous.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter