For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உதட்டில் ஏற்படும் வறட்சி மற்றும் வெடிப்புக்களைத் தடுக்க சில எளிய வழிகள்!!!

By Maha
|

குளிர்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் உதடு வறட்சி அடைவது. சில நேரங்களில் அந்த வறட்சியினால் உதட்டில் வெடிப்புக்கள் ஏற்பட்டு இரத்தக் கசிவுகள் உண்டாகி, உதட்டில் கடுமையான வலியை சந்திக்கக்கூடும். ஆனால் குளிர்காலத்தில் போதிய பராமரிப்புக்களை உதட்டிற்கு கொடுத்தால், வறட்சி ஏற்படுவதை தடுத்து, அதனால் ஏற்படும் தீவிரமான பாதிப்புக்களில் இருந்து விலகி இருக்கலாம்.

உதடுகள் வறட்சி அடைவது ஏன் என்று தெரியுமா?

குளிர்காலத்தில் உதட்டில் வறட்சி ஏற்படாமல் எப்போதும் ஈரப்பசையுடன் இருக்க தமிழ் போல்ட் ஸ்கை ஒருசில டிப்ஸ்களைக் கொடுத்துள்ளது. அந்த டிப்ஸ்கள் அனைத்துமே எளிமையானவை. மேலும் எவ்வித பக்கவிளைவுகளும் அதனால் ஏற்படாது.

முக்கியமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ளதை புகைப்பிடிப்பவர்கள், கருமையான உதட்டைக் கொண்டவர்கள் பயன்படுத்தும் முன் பரிசோதித்து பின் உபயோகப்படுத்தவும். மேலும் உதட்டில் எச்சில் வைப்பதைத் தவிர்க்கவும். சரி, இப்போது குளிர்காலத்தில் உதட்டில் வறட்சி மற்றும் வெடிப்புக்கள் ஏற்படுவதைத் தடுக்க உதவும் வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா? இத ட்ரை பண்ணுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை பாதியாக வெட்டி, அதன் தோலை நீக்கி, குளிர்ந்த நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதனைக் கொண்டு, உதட்டை மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உதட்டில் ஈரப்பசை எப்போதும் இருக்கும்.

வெண்ணெய்

வெண்ணெய்

வறட்சியான மற்றும் வெடிப்புக்கள் உள்ள உதட்டை சரிசெய்ய வெண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில் வெண்ணெயில் உள்ள புரோட்டீன் உதட்டின் ஈரப்பசையை தங்க வைக்கும்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ வளமையாக உள்ளது. இது உதட்டில் உள்ள வறட்சியைத் தடுக்கும் சக்தி கொண்டது. எனவே பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் உதட்டை மசாஜ் செய்து வந்தால், குளிர்காலத்தில் உதட்டில் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

சர்க்கரை மற்றும் தேன்

சர்க்கரை மற்றும் தேன்

தேன் மற்றும் சர்க்கரையை ஒன்றாக கலந்து, அதனைக் கொண்டு உதட்டை ஸ்கரப் செய்தால், சர்க்கரை உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீக்கும் அதே சமயம் தேன் உதட்டின் ஈரப்பசையைத் தக்க வைக்கும்.

லிப் மாஸ்க்

லிப் மாஸ்க்

உதட்டில் வெடிப்புக்கள் அதிகம் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்கு விருப்பமான பழத்தை பேஸ்ட் செய்து, அதனை உதட்டில் தடவி உலர வைக்க வேண்டும். இதனால் பழங்களில் உள்ள வைட்டமின்கள் உதட்டிற்கு கிடைத்து, உதடு ஆரோக்கியமாகவும், பிரச்சனையின்றியும் இருக்கும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை வீட்டில் இருந்தால், தினமும் அதன் ஜெல்லை உதட்டில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், உதடு ஈரப்பசையோடு அழகாக இருக்கும்.

சிட்ரஸ் தோல் மாஸ்க்

சிட்ரஸ் தோல் மாஸ்க்

சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றின் தோல் உதட்டு வறட்சியைத் தடுக்கக்கூடியது. அதற்கு அவற்றின் தோலில் இருந்து வெளிவரும் சாற்றினை உதட்டில் தடவி வர வேண்டும்.

தேங்காய் எணணெய்

தேங்காய் எணணெய்

நிச்சயம் அனைவரது வீட்டிலும் தேங்காய் எண்ணெய் இருக்கும். அந்த தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, உதட்டில் தடவி மசாஜ் செய்து வர வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், உதட்டின் ஈரப்பசையைத் தங்க வைக்கலாம்.

ஆலிவ் ஆயில் மற்றும் எலுமிச்சை

ஆலிவ் ஆயில் மற்றும் எலுமிச்சை

ஆலிவ் ஆயிலை எலுமிச்சை சாற்றுடன் கலந்து, அதனை உதட்டில் தடவி வந்தால், உதட்டின் வறட்சி நீங்குவதோடு, உதட்டில் உள்ள கருமையும் நீங்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதனை உதட்டில் தடவி வந்தால், அதில் உள்ள புரோட்டீன் உதட்டு வறட்சியைப் போக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Quick Ways To Naturally Hydrate Dry Lips

Boldsky shares with you a list of easy tips to hydrate your lips so that they are soft and supple the whole year round.
Desktop Bottom Promotion