For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகான மென்மையான உதடுகளைப் பெற சில டிப்ஸ்...

By Maha
|

ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் உதடுகளுக்கும் முக்கிய பங்குண்டு. உதடுகள் நன்கு அழகாக இருந்தால், தானாக முகத்தின் அழகும் அதிகரித்து வெளிப்படும். ஆனால் தற்போது பலருக்கு உதடுகள் பொலிவிழந்து, அடிக்கடி வறட்சியாகிறது. இப்படி உதடுகள் வறட்சியாவதற்கு காலநிலை ஒரு காரணமாக இருந்தாலும், நாம் குடிக்கும் பானங்களான சூடான டீ மற்றும் காபியும் மற்றொரு காரணமாக உள்ளன.

உதடு வறட்சியால் ஏற்படும் வெடிப்புக்களைத் தடுக்கும் இயற்கைப் பொருட்கள்!!!

ஏனெனில் இவை உதடுகளில் உள்ள ஈரப்பசையை போக்குவதுடன், உதடுகளை மென்மையிழக்கச் செய்து, கருமையாக மாற்றுகின்றன. இதற்காக காபி, டீ போன்றவற்றை குடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. அவற்றை மிகவும் சூடாக குடிக்காமல், சிறிது குளிர வைத்து குடியுங்கள் என்று தான் சொல்கிறோம். இவை மட்டுமின்றி, உதடுகளை சரியாக பராமரிக்காமல் இருப்பது, அடிக்கடி உதடுகளில் எச்சில் வைப்பதும் உதடுகளை வறட்சியடையச் செய்து, பின் அதன் மென்மையை இழக்கச் செய்துவிடும்.

முத்தம் கொடுக்கத் தூண்டும் உதடுகள் வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...

எனவே உதடுகள் எப்போதும் அழகாகவும், மென்மையாகவும் இருக்க ஒருசில இயற்கைப் பொருட்களைக் கொண்டு அன்றாடம் பராமரித்து வந்தால், நிச்சயம் உங்கள் உதடுகள் உங்கள் அழகை இன்னும் அதிகரித்து வெளிக்காட்டும். சரி, இப்போது அந்த இயற்கை பொருட்கள் என்னவென்றும், எப்படி செய்ய வேண்டும் என்றும் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேன்

தேன்

லிப் பாம்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக தேன் விளங்கும். ஏனெனில் தேனில் சருமத்தில் ஈரப்பசையை தக்க வைக்கும் சக்தி இருப்பதால், அவை உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும். அதற்கு சிறிது தேனை எடுத்து, உதடுகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

ஆலிவ் ஆயில் மற்றும் பாதாம் ஆயில்

ஆலிவ் ஆயில் மற்றும் பாதாம் ஆயில்

ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாக கலந்து, தினமும் இரவில் படுக்கும் போது உதடுகளுக்கு தடவி வந்தால், ஒரு வாரத்தில் உதடுகளில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் துண்டுகளை உதடுகளின் மேல் வைத்து 15 நிமிடம் ஊற வைத்து வந்தால், அவை உதடுகளுக்கு ஈரப்பசையைத் தருவதுடன், உதடுகளில் உள்ள கருமையை மறையச் செய்யும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கற்றாழையின் ஜெல்லை உதடுகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், அவை உதடுகளை மென்மையாக்குவதுடன், உதடுகளின் நிறத்தை பிங்க் நிறத்தில் மாற்றும்.

மில்க் க்ரீம்

மில்க் க்ரீம்

மில்க் க்ரீம்மில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், அவை உதடுகளை ஈரப்பதத்துடனும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளும். அதற்கு மில்க் க்ரீமை உதடுகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

அவகேடோ

அவகேடோ

அவகேடோ பழத்திலும் உதடுகளில் ஈரப்பசையை தக்க வைக்கும் குணம் இருப்பதால், இதனை உதடுகளில் தேய்த்து ஊற வைத்து பின் கழுவுங்கள்.

தயிர்

தயிர்

பால் பொருட்களில் ஒன்றான தயிரில் ஏற்கனவே எண்ணெய் பசை நிறைந்திருப்பதால், இதனை உதடுகளுக்கு தடவி வந்தால், அவை உதடுகளில் வறட்சி ஏற்படுவதைத் தடுப்பதோடு, உதடுகளை மென்மையாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Get Soft Smooth Lips Naturally

One fast way to get soft smooth lips overnight is by providing good amount moisture and cleaning the dirt to make lips soft, silky and baby pink. Here are some tips that can be used by both men and women to get smooth and soft lips.
Desktop Bottom Promotion