கழுத்தில் உள்ள கருமையைப் போக்குவதற்கு உதவும் பொருட்கள்!

By: Boopathi Lakshmanan
Subscribe to Boldsky

முகத்தின் அழகு அதிகரிக்க வேண்டுமென்று, அதிக அளவு பணம் செலவு செய்து அழகுப்படுத்தி விட்டு, கழுத்தை மட்டும் சரியாக கவனிக்காவிட்டால், அது அழகை பாழ்படுத்தும். ஏனெனில் அழகு என்று வரும் போது அதில் முகம் மட்டுமின்றி, கழுத்தும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆம், முகம் மட்டும் நன்கு பளிச்சென்று இருக்க, கழுத்து கருமையாக இருந்தால், அது பார்ப்போரின் முகத்தை சுளிக்கச் செய்யும்.

முகத்தில் உள்ள கருமை நீங்கி, பளிச்சென்று மின்ன ஆசையா? அப்ப இத படிங்க...

ஆனால் பலர் முகத்திற்கு கீழ் உள்ள கழுத்தை கவனிக்க மறந்து விடுகின்றோம். இருப்பினும் முகத்தை போல கழுத்தையும் நாம் அழகுப்படுத்த முடியும். இதனால் கழுத்தின் கருமை நீங்கி வளவளப்பான கழுத்தை பெற முடியும். இதற்காக வீட்டிலிருந்த படியே செய்யகூடிய எளிய குறிப்புக்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சை பழத்தின் தன்மையே வெளிர வைப்பது தான். இது சருமத்தின் கருமையை நீக்கும் குணம் கொண்டதாக உள்ளது. ரோஸ் தண்ணீருடன், இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து ஒரு பஞ்சு உருன்டை கொண்டு கழுத்தில் தடவுங்கள். முக்கியமாக கருமை படிந்த இடத்தில் இவ்வாறு தடவ வேண்டும். இரவு முழுதும் நிலைத்திருக்கும் படி விட்டு விட்டு காலையில் கழுவி துடைத்து விடுங்கள். ஒரு மாதம் இதை செய்தால் போதும். நல்ல வித்தியாசத்தைக் காணமுடியும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

கருமையாக படைகளாக உள்ள இடத்தில் இறந்த திசுக்கள் அதிகம் சேர்ந்திருக்கும். இதை உடனடியாக நீக்குவது கடினம் தான். ஓட்ஸ்சை கொண்டு கழுவினால் கழுத்தில் படிந்துள்ள இறந்த திசுக்களை படிப்படியாக நீக்க முடியும். இதனால் கழுத்தின் கருமை நிறம் குறையும். மூன்று அல்லது நான்கு ஸ்பூன் ஓட்ஸை எடுத்துக் கொண்டு அதை நன்கு அரைத்து இதில் தக்காளி விழுதை சேர்த்து கலக்கிக் கொள்ளவும். ஓட்ஸை நன்கு அரைக்கக் கூடாது. அதை கொஞ்சம் சொரசெரப்பாக வைத்தால் தான் ஸ்கரப் போல் பயன்படுத்த முடியும். இந்த கலவையை கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் விட்டு விட வேண்டும். பின்னர் கைகளை நனைத்து கழுத்து பகுதியை நன்கு தேய்க்க வேண்டும். அதன் பின்னர் குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும். இதை ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழம் மற்றும் ஆலிவ் எண்ணெயை கொண்டு ஒரு பேக்-ஐ செய்து கருப்பாக இருக்கும் இடத்தில் தடவுங்கள். ஒரு வாழைப்பழத்தை எடுத்து அதில் இரண்டு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து ஒரு கலவையாக்கி கழுத்தின் கருப்புத் தன்மை உடைய இடங்களில் தடவ வேண்டும். இதை 15 நிமிடங்கள் உலர விட்டு பின்னர் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு இரு முறை செய்து வரவும். நல்ல பலன்களை பார்க்க முடியும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

அதிக அளவு கருமை நிறத்தையும், அது படர்ந்த தோல் பகுதியையும் தேய்த்து சுத்தம் செய்வதில் பேக்கிங் சோடா மிகவும் சிறந்ததாகும். இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் கலந்து ஒரு பசை போலாக்கி, அதை கழுத்தில் தடவி 20 முதல் 30 நிமிடங்கள் விடவும். இவை இறந்த தோல் பகுதிகளை உரிக்க உதவுகின்றன. இதனால் கழுத்தின் கருமை நிற படைகளை நீக்க முடியும்.

சன் ஸ்கிரீன் போடுங்கள்

சன் ஸ்கிரீன் போடுங்கள்

வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது உங்கள் சருமம் கருத்து போகாமல் இருக்க சன் ஸ்கிரீன் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். இதை முகத்திற்கு மட்டுமல்லாமல் வெயிலில் வெளிப்படும் பாகங்கள் அனைத்திற்கும் போடலாம். இதனால் எந்த பாதிப்பும் வராது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies To Treat Black Neck

Treating the neck part similar to face and taking proper nurture will help to reduce the darkness formed over the neck. So, here are the natural home made remedies to treat your black neck.
Story first published: Monday, January 27, 2014, 13:41 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter