அடர்த்தியான புருவங்களைப் பெற வேண்டுமா? இதை முயற்சி செய்யுங்க...

By: Boopathi Lakshmanan
Subscribe to Boldsky

புருவங்கள் தான் பெண்களின் கண்களிலேயே அழகை மிகைப்படுத்தி காட்டும் பகுதியாக உள்ளன. இவை முகத்தின் அழகை வெளிப்படுத்தும் பாகமாகவும் உள்ளன. விளையாட்டிற்கு கூட நமது அழகை நாம் பாழ்படுத்த விரும்புவதில்லை. டிரிம் செய்யாத புருவமும் இப்படித்தான், தடிமனாகவோ அல்லது மெல்லியதாகவோ இருந்து நமது அழகை பாழாக்கும்.

நமது உடல் அமைப்பிற்கேற்ப நமது புருவங்களும் இருப்பது அவசியம். இது நமது அழகையும் அமைப்பையும் மிகைப்படுத்தும். இதை பெறுவதற்கு ஏதேனும் இரசாயன மருந்துகளையும் சிகிச்சையும் நீங்கள் பெற விரும்பினால் அது தவறு.

இதுப்போன்று வேறு: உங்க கை அட்டு கருப்பாக இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணி வெள்ளையாக்குங்க...

இதை எல்லாம் முயற்சி செய்து நம்மை நாமே பாழாக்கிக் கொள்ள வேண்டியதில்லை. எனவே, இயற்கையாக கிடைக்கும் பொருட்கள் கொண்டு சரி செய்ய முடியும்.

இதை வைத்து நாம் அடர்த்தியான புருவங்களை பெற முடியும். கொஞ்சம் கூட இரசாயனம் இல்லாமல் சிறப்பான முறையில் மற்றும் பாதுகாப்பான வழியில் பெறும் வழியாகும். கீழ் வரும் பகுதியில் உள்ள இயற்கையான முறைகளை பயன்படுத்தி நீங்கள் விரும்பும் புருவத்தை பெற முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய்

குறைந்த செலவில் மிகுந்த பலன் தரக்கூடியது ஆமணக்கு எண்ணெயாகும். தடியான புருவங்களை பெற இதை பலரும் பின்பற்றி வருகின்றனர். ஆமணக்கு எண்ணையை உங்களுடைய புருவங்களில் தொடர்ந்து தடவி வந்தால் புருவங்களின் அடர்த்தி அதிகரிக்கும். இந்த எண்ணெய் நிச்சயம் உங்களுக்கு சிறந்த பலனை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

பெட்ரோலியம் ஜெல்லி: வாசலீன்

பெட்ரோலியம் ஜெல்லி: வாசலீன்

வாசலீன் பயன்படுத்துவது உலர்ந்த புருவங்களை ஈரப்பதமூட்டி அதில் உள்ள வெடிப்புகளை சரி செய்கின்றது. இதனால் அங்குள்ள தசைகள் ஊட்டம் பெறுகின்றன. இதை நாம் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை தடவ வேண்டும். இதனால் புருவம் நீளமாகவும், உறுதியாகவும் காணப்படும். அது மட்டுமில்லாமல் புருவத்தையும் நன்கு பெருகி வளரச் செய்யும்.

சுத்தமான தேங்காய் எண்ணெய்

சுத்தமான தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் நிச்சயம் முடி வளர்ப்பிற்கு உதவும் என்பது நமக்கு மிகவும் தெரிந்த உண்மைகளில் ஒன்று. இதுவும் புருவங்களை வளர்ப்பதற்கு ஏற்ற சிறந்த திரவமாக உள்ளது. இந்த எண்ணைய் முடியை விரைவாக வளரச் செய்வது மட்டுமல்லாமல் புருவத்திற்கு நல்ல வடிவத்தையும் தருகின்றது.

வெங்காய சாறு

வெங்காய சாறு

வெங்காயத்தில் அதிக அளவு சல்பர் உள்ளது. இந்த குணத்தால் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த முடியும். இந்த சாற்றை புருவங்களில் தடவும் போது அவை புருவத்தின் அடர்த்தியை அதிகரித்து அழகுபடுத்தலாம். இதில் சிறிய வெங்காய வகையை பயன்படுத்தலாம். ஒரு பஞ்சு உருண்டையை கொண்டு வெங்காய சாற்றை தடவினால் போதும், உறுதியான அழகான புருவங்களை பெற முடியும்.

தண்ணீர்

தண்ணீர்

எந்த ஒரு உடல் சம்மந்த பிரச்சனையாக இருந்தாலும் தண்ணீர் சிறந்த மருந்தாக இருக்கும். நாம் ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு லிட்டர் தண்ணீர் அருந்துவது உடலின் ஆற்றலை அதிகப்படுத்துகின்றது.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணையும் புருவங்களுக்கு ஏற்ற திரவமாகும். வீட்டிலிருந்தபடி நாம் தடியான புருவங்களை பெற இதுவும் ஒரு வழியாக உள்ளது. இந்த எண்ணெயை முழுமையாக பயன்படுத்தி அழகான புருவங்களை பெறுங்கள். இது புருவங்களை அடர்த்தியாக்குவது மட்டுமல்லாமல் அழகான வடிவத்தையும் அமைத்து தருகின்றது.

கற்றாழை

கற்றாழை

உடலில் உள்ள பல பிரச்சனைகளிடமிருந்து நம்மை குணமாக்கும் சக்தி கற்றாழைக்கு உண்டு. இதை கடைகளில் வாங்கி அல்லது வீட்டில் உள்ள செடியிலிருந்து இலையை பறித்து அந்த பசையை புருவத்தில் தடவலாம். இவை புருவங்களை நன்கு வளர செய்கின்றன. இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வித்தியாசத்தை பார்க்க முடியும்.

முட்டை

முட்டை

முட்டையை உடைத்து அதன் மஞ்சள் கருவை எடுத்து அதை நன்கு கலக்குங்கள். பின்னர் ஒரு பஞ்சு உருண்டையை கொண்டு அதை தொட்டு புருவங்களில் தடவி 15-20 நிமிடங்கள் விட்டு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முட்டையில் உள்ள புரதச் சத்துக்கள் முடி வளர பெருமளவு உதவி செய்யும்.

எலுமிச்சை துண்டுகள்

எலுமிச்சை துண்டுகள்

உங்களுடைய புருவங்களின் நீளத்திற்கு எலுமிச்சையை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த எலுமிச்சை துண்டுகளை புருவங்களின் மேல் வைத்து நல்ல அடர்த்தியான புருவங்களை பெற்று மகிழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies For Thicker Eyebrows

You really don’t want to get in chemicals on your skin and ruin it completely. Instead you wish there were some natural ways to get those thick eyebrows. Thick eyebrows home remedies offer you brilliant solutions to get the thick eyebrow without a faint of chemical on your skin.
Story first published: Monday, January 20, 2014, 10:35 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter