Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
அழகுப் பராமரிப்பில் பெட்ரோலியம் ஜெல்லியை எப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம்!
பொதுவாக பெட்ரோலியம் ஜெல்லியானது அனைவரது வீட்டிலுமே இருக்கும். இத்தகைய பெட்ரோலியம் ஜெல்லியை பெரும்பாலும் மாய்ஸ்சுரைசராக மட்டும் தான் பயன்படுத்துவோம். ஆனால் இந்த பெட்ரோலியம் ஜெல்லியை பலவாறு பயன்படுத்தலாம். அதிலும் சரும பராமரிப்பில் மட்டுமின்றி, கூந்தல் பராமரிப்பு, சரும பிரச்சனைகளை போக்க என பலவாறு பயன்படுத்தலாம்.
இங்கு அழகைப் பராமரிக்கும் போது பெட்ரோலியம் ஜெல்லியை எதற்கெல்லாம், எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, வீட்டில் பெட்ரோலியம் ஜெல்லி இருந்தால் தவறாமல் பயன்படுத்தி, அதன் நன்மையைப் பெறுங்கள்.

கண் இமைகளை நீளமாக்க...
கண் இமைகள் சிறியதாக உள்ளதா? அதனை நீளமாக்க வேண்டுமா? அப்படியானால் தினமும் பெட்ரோலியம் ஜெல்லியை இரவில் படுக்கும் போது கண் இமைகளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து வாருங்கள். இதனால் கண் இமைகள் நீளமாக வளர்வதோடு, நன்கு அடர்த்தியாகவும் இருக்கும்.

வறட்சியான கூந்தல் பிரச்சனைக்கு...
சிலருக்கு கூந்தல் வறண்டு அசிங்கமாக காணப்படும். அப்போது பெட்ரோலியம் ஜெல்லியை சிறிது எடுத்து கூந்தலின் மேல் தடவினால், கூந்தலானது அடங்கி, வறட்சியில்லாமல் காணப்படும். குறிப்பாக அளவுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம். இல்லாவிட்டால், அது கூந்தலில் அதிகப்படியான எண்ணெய் பசை இருப்பது போல் வெளிப்படுத்தும்.

நீண்ட நேரம் நறுமணம் இருக்க...
வியர்வை நாற்றம் வராமல் இருக்க, அனைவரும் நிச்சயம் டியோடரண்ட் பயன்படுத்துவோம். அப்படி பயன்படுத்தும் போது, அதில் இருக்கும் நறுமணம் உடலில் நாள் முழுவதும் இருக்க வேண்டுமானால், டியோடரண்ட் அடிக்கும் முன்பு, அதனை உடலில் தடவிக் கொள்ளுங்கள். இதனால் நிச்சயம் நறுமணம் நாள் முழுவதும் இருக்கும்.

மூக்கில் உள்ள வெள்ளையை மறைக்க...
குளிர்காலம் என்பதால், பலருக்கு ஜலதோஷம் மற்றும் சளி பிடிக்கும். அதனால் அடிக்கடி மூக்கை சிந்தியதால், மூக்கைச் சுற்றி வறண்டு வெடிப்பு போன்று வெள்ளையாக அசிங்கமாக காணப்படும். இதனை மறைக்க பெட்ரோலியம் ஜெல்லியை மூக்கைச் சுற்றி தடவிக் கொள்ளலாம்.

ஹேர் டையினால் ஏற்படும் சரும பாதிப்பு
கூந்தலுக்கு ஹேர் டை அடிக்கும் முன், கூந்தல் படும் இடங்களில் பெட்ரோலியம் ஜெல்லியை தடவிக் கொண்டால், ஹேர் டையினால் சருமத்தில் ஏற்படும் கறைகளைத் தடுக்கலாம்.

ஹை லைட்டர்
கன்னங்களின் மீது பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவினால், அது கன்னங்களை அழகாக ஹை லைட் செய்து காண்பிக்கும். அதேப் போல் இதனை கண்களுக்கு மேக் அப் போடும் முன், கண் இமைகளுக்கு பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்தி, பின் ஐ ஷேடோவைப் பயன்படுத்தினால், கண்கள் அழகாக காணப்படும்.

வறட்சியான உதடுகளுக்கு...
உதடுகள் அடிக்கடி வறட்சி அடைந்தால், அப்போது பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளுக்கு தடவிக் கொண்டால், நீண்ட நேரம் உதடுகள் ஈரப்பசையுடன் இருக்கும்.



Click it and Unblock the Notifications