உதடு வெடிப்புக்கு தேங்காய் எண்ணெய் இருக்க.. ஏன் கண்ட கண்ட பொருட்களை யூஸ் பண்ணுறீங்க...

By Ashok CR

குளிர்காலம் வந்தாலே உங்கள் சருமமும் தலைமுடியும் உதடுகளும் வறண்டு காணப்படும். இவற்றை பராமரிக்க நாம் கடைகளில் கிடைக்கும் க்ரீம்களையும், லோஷன்களையும், ஷாம்புக்களையும், லிப் பாம்களையும் வாங்க வேண்டிவரும். இவற்றில் உள்ள இரசாயனப் பொருட்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால், எளிய முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே நமது சருமத்தை பராமரிக்கலாம்.

இம்முறை குளிர்காலம் சீக்கிரமே வந்து கொண்டிருக்கின்றது. அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய இதுதான் தருணம். குளிர்காலத்தில் நாம் நமது சருமத்திற்கும் தலைமுடிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வறண்ட குளிர்ந்த காற்று உங்கள் சருமத்திலும் தலைச் சருமத்திலும் நீர் நீக்கலை ஏற்படுத்திவிடும். வறண்ட சருமத்தால் உங்களது முகமும் சருமமும் அழகற்று காட்சியளிக்கும். இதனை தவிர்ப்பதற்கு நாம் மாய்ஸ்சுரைசர் மற்றும் க்ரீம்களை உபயோகிக்க வேண்டும்.

நமது சருமம் குளிர்காலத்தை உணரும் திறனை பெற்றுள்ளது. ஆனால், நமது உதடுகளோ இதை காட்டிலும் இரண்டு மடங்கு உணரும் திறனை பெற்றிருக்கின்றது. நமது உதடுகளில் எண்ணெய் சுரக்கும் சுரப்பிகள் இல்லை. அதனால், குளிர்காலங்களில் அவைகளுக்கு போதுமான எண்ணெய் அல்லது ஈரப்பதம் கிடைப்பதில்லை. இதனால், நமது உடலில் உள்ள மற்ற சருமத்தைக்காட்டிலும் உதடுகளுக்கு அதிக கவனம் தேவைப்படுகின்றது. குளிர்காலத்தில் நமது உதடுகள் வறண்டு, வெடிப்பு ஏற்பட்டு அழகற்று காட்சியளிக்கின்றது. இதனை போக்குவதற்கு கடைகளில் ஏராளமான மாய்ஸ்சுரைசர்களும், லிப் பாம்களும், லிப் க்ரிம்களும் கிடைக்கின்றன.

வறண்ட வெடித்த உதடுகளை குணமாக்க வீட்டிலேயே செய்யக்கூடிய சிகிச்சைகள் பல உள்ளன. சிலவகை இயற்கையான மாயிஸ்ச்சரைசர்கள் உங்கள் உதடுகளை மென்மையாக்கி மீண்டும் நீரேற்றல் செய்யும். வெண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாலாடை போன்றவை இந்த வகையை சார்ந்தவைகளாகும். இவற்றுள் தேங்காய் எண்ணெய் உங்கள் வெடித்த உதடுகளை சரிசெய்வதற்கு சிறந்ததாகும். இந்த எண்ணெய் உங்கள் உதடுகள் வறண்டு போவதை குறைத்து உதடுகளுக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும். தேங்காய் எண்ணெய் உங்கள் வறண்ட வெடித்த உதடுகளைச் சுற்றி ஒரு படலத்தை ஏற்படுத்தி குளிர்காற்றில் இருந்து பாதுகாக்கும். தேங்காய் எண்ணெய் எளிதில் கிடைக்ககூடிய விலை மலிவான பொருளாகும். அதனால், எல்லோரும் வறண்ட வெடித்த உதடுகளின் சிகிச்சைக்கு தேங்காய் எண்ணையை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் கொண்டு வெடித்த உதடுகளை சிகிச்சை செய்வதற்கான சில வழிகளை இப்பொழுது படிக்கலாம்.

Ways To Cure Dry Chapped Lips With Coconut Oil

தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்

எப்பொழுதும் உங்கள் கைப்பையில் சிறிய தேங்காய் எண்ணெய் பாட்டில் ஒன்று எடுத்து செல்ல வேண்டும். போதுமான இடைவேளைகளில் எண்ணையை தடவிக்கொள்ள வேண்டும். உங்கள் விரல் நுனிகளில் சிறிதளவு எடுத்துக்கொண்டு உங்கள் உதடுகளில் தடவிக்கொள்ள வேண்டும். தேங்காய் இது எண்ணெயை பயன்படுத்தி வெடித்த உதடுகளைச் சிகிச்சை செய்வதற்கான சிறந்த வழியாகும். குளிர்காலங்களில் இதனை பயன்படுத்தி சிறந்த பலன்களை பெறுங்கள்.

இரவு முழுவதும் தடவி பலன் அடைதல்

தேங்காய் எண்ணெய்க்கு என்று ஒரு தனி மணமும் சுவையும் உள்ளது. இதன் மணம் பிடிக்கவில்லை என்றால் பகல் நேரங்களில் இதனை உபயோகிக்காமல் வேறு வழியில் உபயோகிக்கலாம். இரவு படுப்பதற்கு முன் இதனை உங்கள் உதடுகளில் தடவிவிடுங்கள் இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். காலையில் எழுந்தவுடன் தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள். பகல் நேரங்களில் மற்ற லிப் பாம்களை உபயோகிக்க மறந்துவிடாதீர்கள்.

தேங்காய் எண்ணெய் சுவையுடைய பாம்

இன்று கடைகளில் கிடைக்கும் சில லிப் பாம்களில் தேங்காய் எண்ணெய் சாறு நிறைந்துள்ளது. இந்த பாம்கள் தேங்காய் எண்ணெயின் துல்லியமான பலனை அளிக்காவிட்டாலும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பாம்களை தொடர்ந்து பயன்படுத்தலாம். ரசாயனங்கள் கொண்டு தயாரித்த லிப் பாம்களைக் காட்டிலும் இயற்கையான பொருட்களை கொண்டு தயாரித்த லிப் பாம்களையே வாங்குங்கள்.

திண்ம நிலையில் உள்ள எண்ணெய்

தேங்காய் எண்ணெயை திண்ம நிலையில் உபயோகித்தால் உங்கள் உதடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது ஒரு இயற்கையான லிப் பாம் ஆகும். திண்ம வடிவத்தில் இருக்கும் இது தூய்மையானதாகும். இந்த திண்ம வடிவில் உள்ள தேங்காய் எண்ணெயானது தட்பவெட்ப நிலைகளுக்கு ஏற்றாற்போல் மாறுவதே இதன் ஒரே குறைபாடு ஆகும். இது அதிக தட்பவெட்ப நிலைகளில் உருகி போய்விடும்.

எண்ணெய் கலவைகள்

தேங்காய் எண்ணெயுடன் ஆலிவ் எண்ணெய் அல்லது பிற எண்ணெய்களின் கலவை உங்கள் உதடுகளுக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும். இந்த கலவையை இரவு நேரங்களிலும் அல்லது பகல் நேரங்களிலும் தொடர்ந்து உபயோகிக்கலாம். இந்த கலவை உங்கள் உதடுகளுக்கு மிகுந்த பலனை அளிக்கும். மேலும் வறண்ட குளிர்ந்த காற்றிலிருந்து உங்கள் உதடுகளை பாதுகாக்கும்.

Story first published: Thursday, November 28, 2013, 2:04 [IST]
Desktop Bottom Promotion