Latest Updates
-
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும்
என்றும் இளமையாய் இருக்க நதியா சொல்வதை கேளுங்க!

பூவே பூச்சூடாவா படத்தில் அறிமுகமான நதியா, பத்தாண்டுகாலம் தமிழ் திரையுலகின் தேவதையாய் வலம்வந்தார்.
நதியா எதை அணிந்தாலும் அது பேஷன் ஆனது. நதியா கொண்டை, வளையல், தோடு என அனைத்தும் சந்தையில் விற்றுத்தீர்ந்தது. இத்தனைக்கும் கவர்ச்சிகரமான உடலழகை வெளிப்படுத்துகிற வேடங்கள் எதையுமே நதியா அண்டவிடவே இல்லை. நதியா தன் முகத்தை, தன் ஒல்லியான உடலமைப்பை நம்பினார். வெற்றிகரமான நாயகியாக வலம் வந்த நேரத்திலேயே திருமணம் செய்து கொண்டு ஒதுங்கியவர் பல ஆண்டுகள் கழித்து கதாநாயகனின் அம்மாவாக வசீகமாகத் தோன்றினார்.
இன்றைக்கும் இளமையாக இருக்கக் காரணம் நதியா மேற்கொள்ளும் உடற்பயிற்சிதானாம். உடம்பில் கொஞ்சம் கொழுப்பு சேர்வது போல தோன்றினாலும் அதற்கான கலோரிகளை எரிக்க உடற்பயிற்சி செய்வேன் என்கிறார். சிறு வயதில் இருந்தே எனக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். காலையில் வாக்கிங், ஜிம்மில் வெயிட் ட்ரெயினிங் செய்கிறேன். அதோட வீட்டு வேலைகளை நானே செய்துகொள்கிறேன். என் குழந்தைகளுக்கும் உடற்பயிற்சியின் அவசியத்தை உணர்த்தியிருக்கிறேன் என்கிறார் நதியா.
நமக்கு உடம்பு சரியாக இருக்கிறது என்பதை பசியும், தூக்கமும் உணர்த்திவிடும். எனவே அதை சரியாக வைத்துக்கொள்ளவேண்டும். உடல் உழைப்புக்கு ஏற்ற உணவு சாப்பிட்டால் போதும். தென்னிந்திய உணவோ, மும்பை உணவே எதுவுமே உடலுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவிற்கு சாப்பிடுவேன். கலோரிகளை எரிக்கும் அளவிற்கு வேலை செய்வேன். டென்னிஸ் விளையாடுவதும் ஜிம்முக்கு செல்வதும் எனக்கு பிடித்தமான ஒன்று அதுதான் என் ஆரோக்கியமான அழகின் ரகசியமும் கூட என்று கூறியுள்ளார் இன்றைக்கும் இளமையாக காட்சி தரும் நதியா.
முக அழகிற்கு என்று எதையும் ஸ்பெசலாக செய்வதில்லை. அடிக்கடி நல்ல தண்ணீரில் முகம் கழுவுவேன். நிறைய தண்ணீர் குடிப்பேன். குளிர்ச்சியான எண்ணெயால் மசாஜ் செய்வேன். அதைவிட எப்போதும் சிரித்த முகத்தோடு இருந்தாலே முகத்தில் சுருக்கம் வர வாய்ப்பே இல்லை. பெண்கள் தினசரி தங்களை கவனிக்க அரைமணிநேரம் ஒதுக்குங்க. உடற்பயிற்சி, தியானம் செய்யலாம். மனதை டென்சன் இல்லாம ரிலாக்ஸ் ஆக வைத்துக்கொள்ளுங்கள் முதுமை என்பது எட்டிப்பார்க்காது என்று கூறினார் நதியா.



Click it and Unblock the Notifications