Latest Updates
-
வீட்டில் செல்வம் பெருகணுமா? வாஸ்து சாஸ்திரம் சொல்லும் இந்த செடிகளை சரியான திசையில் வையுங்கள்! -
சாணக்கிய நீதி படி பெண்களின் கூடவே பிறக்கும் 5 தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
Guru Peyarchi 2026: உச்சம் பெறும் குருவால் இந்த 6 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது.. -
ஓட்ஸ் இட்லியும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 02 ஜூன் 2026: இந்த நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா -
புதன்-சுக்கிரன் ஒரே நாளில் நட்சத்திரத்தை மாற்றுவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
1/4 கப் வேர்க்கடலையும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க - இட்லி,தோசைக்கு செமயா இருக்கும் -
குரு-சனி இணைந்து உருவாக்கும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க மூட்ட மூட்டையா பணத்தை அள்ளப்போறாங்க.. -
பிரைட் மாதம் கொண்டாடும் எல்ஜிபிடிகியூ இணையர்களே! பொது இடங்களில் பாதுகாப்பாக இருக்க இந்த 5 விஷயங்களை மறக்காதீங்க! -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க? ஜூன் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம்
நகங்கள் ஆரோக்கியமாக வளர மசாஜ் பண்ணுங்க!

நகங்களுக்கு மசாஜ்
சிலருக்கு நகங்களே வளராமல் குட்டையாகவே இருக்கும். இதுபோன்றவர்கள் கை விரல்களுக்கு மசாஜ் அளித்து வந்தால், விரைவில் நகங்களில் வளர்ச்சி ஏற்படும். குளித்தபின்பு நகப் படுகையில் நன்றாக அழுத்தி மசாஜ் செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் நகங்களின் வளர்ச்சி அதிகரிக்கும். மாதம் ஒருமுறை பெடிக்யூர், மெனிக்யூர் போன்றவற்றையும் செய்து கொள்ளலாம். இதுவும் விரல் நகங்களுக்கு நன்மை அளிக்கும்.
உடைவதை தடுக்க
கைவிரல் நகங்கள் லேயர் லேயராக உடைவதைப் பார்த்திருப்பீர்கள். இதற்கு வீட்டில் தூய்மைப்படுத்துவதற்காக பயன்படுத்தும் சோப்புத் தன்மையால் ஏற்படும் அலர்ஜியால் கூட இருக்கலாம். நகத்தில் உள்ள நகத்தட்டுகளுக்குத் தேவையான நீர்த்தன்மை இல்லாமல் போவதும் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதியாகும்
நகச்சிதைவு
நகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க சூரியகாந்தி எண் ணையை கை, கால் நகங்களில் தடவ வேண்டும்.
சிலருக்கு நகம் கடினத்தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும். அதே போல், தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம்.
நகச்சொத்தை கவனம்
விரலில் அடிபடுவது, இடுக்கில் கைவிரல் சிக்கிக் கொள்வது போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பால் நகப்படுக்கையில் ஏற்படும் ரத்தக் கசிவானது, நகத் தட்டுக்கு அடியில் தங்கிவிடும். இதனால் நகச் சொத்தை ஏற்படுகிறது. இந்த நகச்சொத்தை தானாக சரியாகவும் வாய்ப்புள்ளது. ஆனால் நகச்சொத்தை தீவிரமடைந்து, நகப் பகுதியில் வலி ஏற்படுமாயின், நகத்தை பிடுங்கிவிட்டு அப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டியது அவசியமாகும். விரல் நகங்களுக்கு நடுவில் சொத்தை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான காரணத்தை அறிவது நல்லது.
சத்தான உணவுகள்
கை விரல் நகங்கள் இளம் சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். இதில் வெள்ளை நிறம் ரத்த சோகையையும், மஞ்சள் காமாலையையும் குறிக்கும். சில நேரங்களில் சிலரது கைவிரல் நகங்கள் வழக்கத்திற்கு மாறாக வெளுத்துப்போய் காணப்படும். அந்த மாற்றம் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.
இரத்தச் சோகை இருக்கிறது என்பதற்கான அறிகுறிதான், நகத்தின் இந்த திடீர் மாற்றம். இரத்தத்தில் உள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்.
மேலும், இரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்கவேண்டிய பிங்க்" நிறம் மறைந்து, வெளுத்துவிடும்.
இரும்புச்சத்து இரத்தத்தில் உள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்யும் என்பதால், அந்த சத்து அதிகம் உள்ள ஈரல், கீரைவகைகள் மற்றும் இறைச்சியை இந்த பாதிப்பு உள்ளவர்கள் உணவுடன் சேர்த்துக்கொள்வது அவசியம். அல்லது, தகுந்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு, விட்டமின் பி-12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளவேண்டும்.



Click it and Unblock the Notifications