Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உடலுக்கு வலிமை தரும் மசாஜ் தெரபி

தசைகளில் இறுக்கத்தை நீக்க, தசை வலியைக் குறைக்க, தசை திசுக்களை மென்மையாக்க உதவும் கலையே மசாஜ் ஆகும். இந்த மசாஜ் சிகிச்சை என்பது இந்தியாவில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய சிகிக்சையாகும். இன்றைக்கு ஐரோப்பிய நாடுகளில் நோய் தீர்க்கும் கலையாக பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது.
பியூட்டி மசாஜ் எனப்படும் அழகு மசாஜ், தெரபிக்மசாஜ் எனும் நோய் சிகிச்சை மசாஜ் என இரண்டு வகையான மசாஜ்கள் உள்ளன. மசாஜ் செய்வதினால் ரத்த ஓட்டம் சீராகிறது. ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை கூடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. லேக்டிக் அமிலம் ஒரே இடத்தில் குவிவது தடுத்து நிறுத்தப்படுவதால் உடலில் ஏற்படும் சோர்வு அல்லது களைப்பு நீக்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளின் இந்த இருவகையான மசாஜ்களுமே பிரபலமடைந்து வருகின்றன. அங்குள்ள ஆஸ்பத்திரிகளில், ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளும் ஒன்றாக மசாஜ் சிகிச்சை முறையும் உள்ளது. கைகளைக் கொண்டு செய்யும் மசாஜ் கை மசாஜ், கருவிகளைப் பயன்படுத்தி செய்யும் அதிர்வு மசாஜ் ஆகிய இருவகை மசாஜ்களுமே ஐரோப்பிய நாடுகளில் வழக்கத்தில் உள்ளன.
மசாஜ் அவை பின்பற்றப்படும் நாடுகளைப் பொறுத்து, அக்குபிரஷர் மசாஜ், கியாட்கு மசாஜ், ரிப்லெக்ஸ் லோஜி மசாஜ், ரால்பின் மசாஜ், சுவீடிஸ் மசாஜ் என பலவகைகளில் உள்ளன. ஐரோப்பிய நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும் மசாஜ் என்பது, மென்மையாக தட்டுவது, விரைந்து தட்டுவது, தேய்த்துவிடுவது, அழுத்திவிடுவது, கைகளைத் தட்டுவது, உருட்டிவிடுவது போன்ற திறன்களுக்குள் அடங்குகிறது. மூன்று வாரங்களுக்கு தினசரி 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்வதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் குணமடையும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மசாஜ் செய்வதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. ஆனால் தோல் நோய்கள், இதய நோய்கள், குடல் நோய்கள், ஈரல் வீக்க நோய், ஒவ்வாமை நோய் கொண்டோர் ஆகியோருக்கு ஐரோப்பிய நாடுகளில் மசாஜ் பரிந்துரை செய்யப்படுவதில்லை. மேலும் ஆபரேஷனுக்கு 6 மாதங்களுக்குப் பின்னரும் மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.



Click it and Unblock the Notifications