For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பனிக்காலத்திற்கு ஏற்ற வினிகர் பேஸ்மாஸ்க்!

By Mayura Akilan
|

Vinegar For Beauty
சரும அழகை பாதுகாப்பதில் வினிகர் முக்கிய பங்கு வகிக்கிறது. சமையலில் மட்டுமல்ல அழகு சாதனப்பொருளாகவும் பல ஆண்டுகளாக வினிகர் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பனிக்காலத்தில் வினிகர் பயன்படுத்தினால் சரும வறட்சி நீங்கும், சருமம் புத்துணர்ச்சியடையும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இதனை பின்பற்றிப்பாருங்களேன்.

சருமத்தின் பி.ஹெச் தக்கவைக்கும்

ஒரு டேபிள்ஸ்பூன் வெள்ளை வினிகர், 3 டீஸ்பூன் பன்னீர் ஆகியவற்றை ஒரு கப் தண்ணீரில் கலக்கவும். மிகச் சிறந்த சமச்சீரான பிஹெச் சரும டோனர் தயார். முகத்தில் இதைத் முகத்தில் தெளித்துக் கொண்டால், புத்துணர்வைப் பெறலாம். வேக வைத்த உருளைக்கிழங்கு, ஒரு துளி உப்பு, துளி கிளிசரின், 2 துளி வினிகர் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசினால் மாசு மருவற்ற சருமத்தைப் பெறலாம்.

வினிகர் பேஸ்மாஸ்க்

வினிகர் சிறந்த பேஸ்மாஸ்க் ஆக செயல்படுகிறது. ஆப்பிளை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிதளவு தேன், முட்டையின் வெள்ளைக்கரு, யோகர்ட், வினிகர், வைட்டமின் இ ஆயில் போன்றவைகளை கலந்து நன்கு அரைத்து பேஸ்ட் போல செய்யவும். இதனை பேஸ்மாஸ்க் ஆக உபயோகிக்கலாம். இது பனிக்காலத்திற்கு ஏற்ற சிறந்த பேஸ்மாஸ்க். முகத்தின் வறட்சியைப் போக்கும். சருமம் உலர்ந்த சருமமாக இருந்தாலோ, அல்லது வெடிப்புள்ள சருமமாக இருந்தாலோ வினிகரை தடவினால் குணமாகும்.

வினிகர் க்ளன்சர்

ஆப்பிள் சிடர் வினிகர் அல்லது வெள்ளை வைன் வினிகர் சிறந்த க்ளன்சராக செயல்படுகிறது. ஆரஞ்சு பழத்தின் சாறு எடுத்து அதனுடன் சம அளவு வினிகரை சேர்த்து கலக்கவும். இதனை பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளலாம். எங்காவது வெளியில் போய்விட்டு வந்தாலோ, மேக் அப் போடும் முன்போ இந்த கலவையை உபயோகித்து முகத்தை சுத்தம் செய்யலாம். சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.

வினிகர் டோனர்

பப்பாளி பழத்தின் சதையை எடுத்து நன்கு கூழாக்கி அதனுடன் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்து கலக்கவும். இந்த கலவை பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டு அவ்வப்போது சிறிய காட்டன் துணியில் தொட்டு உபயோகிக்கலாம். இது சிறந்த டோனராக செயல்படும்.

வினிகரானது வியர்வை நாற்றத்தைப் போக்கும். குளிக்கும் நீரில் சில துளிகள் வினிகரை கலந்து குளித்தால் வியர்வை நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை கொல்லும் சருமம் புத்துணர்ச்சியாகும்.

கூந்தல் பட்டுப் போலாகும்

தலையில் பொடுகுத் தொல்லை இருந்தால் ஒரு டேபிள் ஸ்பூன் வினிகரை தலையில் தடவி,சில நிமிடங்கள் கழித்து நன்கு அலசிக் குளித்தால் பொடுகு போய்விடும். ஷாம்பு போட்டு தலைகுளித்தபின் சிறிதளவு வினிகர் கலந்த நீரினால் அலசினால் முடிபட்டுப் போலாகும்.

English summary

Easy Beauty Recipes Using Vinegar | பனிக்காலத்திற்கு ஏற்ற வினிகர் பேஸ்மாஸ்க்!

The liquid is fragrant free, soothing but not water. You may feel that it is some expensive toner but actually it the ever available 'vinegar'. The alcohol has unbelievable benefits on skin, it is free from chemicals and best for winter skin care. The acids in it help in cleaning the face, remove dead cells and bring glow. It can effectively pull out even the highly glued dead skin cells. Take a look for more skin benefits using vinegar.
Story first published: Wednesday, August 22, 2012, 11:27 [IST]
Desktop Bottom Promotion