Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
கலர் கலராய் சாப்பிடுங்க! அழகோடு ஆரோக்கியம் கிடைக்கும்!

சிவப்பு காய்கறிகள்
காலையில் சாப்பிடப்படும் ஆரஞ்சு, மஞ்சள் நிறமுள்ள பழங்கள், முன் தினம் இரவில் உண்ட உணவு செரிமானம் ஆகாமல் இருந்தால் அதை நீக்கும். மலச்சிக்கல் இருந்தால் சிவப்பு நிறமுள்ள தக்காளிச் சாறு அருந்தவும். ஏனெனில் இது குடலை அபாரமாகச் சுத்தப்படுத்திவிடும். காலையில் ஒரு கப் ஆரஞ்சு அல்லது தக்காளிச்சாறு. இத்துடன் மூன்று ரொட்டித் துண்டுகள் ஒரு கப் தயிர். (அல்லது) வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், பீச், பிளம்ஸ், அன்னாசித் துண்டுகள் இவற்றில் ஏதேனும் ஒன்று, ஒன்றிரண்டு பழங்கள் சாப்பிடலாம். அன்னாசிப் பழம் என்றால் ஒரு கிளாஸ் சாறு, இத்துடன் வறுத்த ரொட்டித் துண்டு ஒன்று சாப்பிடலாம்.
பச்சை நிற உணவுகள்
மதியம் பச்சை உணவுகளை சாப்பிடலாம் ஏனெனில் பச்சை நிறமுள்ள கீரைகள், காய்கறிகள், பச்சை நிறத் திராட்சை முதலியவைகளில் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் போன்ற மினரல்கள் உள்ளன. இதயத்தையும் எலும்புகளையும் இந்த தாது உப்புக்கள் பலப்படுத்துகின்றன. இவை இதயம் சிறப்பாக இயங்கவும் தூண்டிக் கொண்டே இருக்கின்றன. எனவே மதிய உணவில் ஒரு சப்பாத்தியுடன் லெட்டூஸ், வெங்காயம், மிளகாய், சீஸ், வெள்ளரிக்காய், முதலியவற்றை காய்கறி சாலட்டாக ஒரு கிண்ணம் சாப்பிடவும். இத்துடன் ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் சாப்பிடவும். 50 கிராம் ஏதாவது ஒரு கீரையை அவியலாகச் சாப்பிடவும் அல்லது காய்கறி சூப்புடன் ஒரு ஸ்லைஸ் ரொட்டித் துண்டு மற்றும் பச்சை நிற திராட்சை சாப்பிடலாம்.
அமைதியான நீல நிறம்
இரவு உணவில் நீலம், ஊதா, தங்க நிறம், வெள்ளை ஆகியவற்றில் உள்ள பழங்கள், காய்கறிகளைச் சேருங்கள். நீலம், கருஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் உள்ள பழங்கள் காய்கறிகளில் உள்ள தாவரச் சத்துக்கள் உணர்ச்சிகளை மெல்ல அமைதிப்படுத்தி தூங்க வைக்கும். இரவில் ஒரு கிண்ணம் சாதம், ஒரு கிண்ணம் தயிர், பீட்ரூட், கத்தரிக்காய் லேசாக அவிய வைத்து ஒரு கிண்ணம், ஒரு ஸ்லைஸ் ரொட்டி என்று சாப்பிடலாம். (அல்லது) பீட்ரூட் சாறு ஒரு கிளாஸ், ஒரு கிண்ணம் தயிர் சாதம், ஒரு ஸ்லைஸ் ரொட்டி, கத்தரிக்காய் அவியல் அரை கிண்ணம் என்று சாப்பிடலாம்.
மாதத்திற்கு ஐந்து நாட்கள் மட்டும் இந்த உணவுத் திட்டத்தைப் பின்பற்றினால் 5 பவுண்டு வீதம் குறைந்து அழகாக மாறிவிடுவீர்கள். முதல் ஒரு மாதத்திலேயே இளமையான தோற்றம் கிடைக்கும். உடல் எடையைக் குறைக்கவும், ஆரோக்கியமாகவும், இளமையாகவும் சக்தியுடன் வாழவும் உணவுத் திட்டம் அவசியம் இதன் மூலம் 1000 முதல் 1200 கலோரி உணவையே நாம் சாப்பிடுவதால் இளமைத் துடிப்புடன் வாழலாம்.
குண்டான ஆண், பெண்கள் இந்த உணவு முறையை இன்றே தொடங்குங்கள், ஒரே மாதத்தில் கண்டிப்பாக பத்து கிலோ எடை குறைவது உறுதி. இதனால் ஆரோக்கியமும் உறுதிப்படுத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications