Latest Updates
-
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்!
உங்க அக்குள் ரொம்ப நாற்றம் அடிக்குதா? அப்ப இந்த பொருட்களை அக்குள்-ல தடவுங்க..
Body Care Tips In Tamil: உங்களுக்கு அதிகமாக வியர்க்குமா? இப்படி அதிகம் வியர்ப்பதால் உங்கள் மீது எப்போதும் ஒரு துர்நாற்றம் வீசிக் கொண்டே இருக்குமா? உங்கள் அருகில் வரவே உங்கள் துணை யோசிப்பாரா? இப்படியான சூழ்நிலையை நிச்சயம் ஒவ்வொருவருமே தங்கள் வாழ்நாளில் அனுபவித்திருப்போம். இது மிகவும் தர்மசங்கடமான நிலை.
ஒருவரது உடலில் வீசும் துர்நாற்றமானது அந்நபருக்கு மிகுந்த சங்கடத்தை உண்டாக்குவதோடு, அந்நபரின் தன்னம்பிக்கையையும் குறைக்கும். நீங்கள் தன்னம்பிக்கையான நபராக இருக்க வேண்டுமானால், முதலில் உங்களை புத்துணர்ச்சியாகவும், நல்ல மணத்துடனும் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு கடைகளில் விற்கப்படும் விலை அதிகமான பெர்ஃப்யூம்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்பதில்லை.

வீட்டில் உள்ள ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டே அக்குளில் வீசும் துர்நாற்றத்தைப் போக்கலாம். இந்த நேச்சுரல் ட்ரிக்ஸை தெரிந்து கொண்டு பின்பற்றினால், உங்கள் மீது வீசும் துர்நாற்றத்தைத் தடுக்கலாம். இப்போது அந்த இயற்கை வழிகள் என்னவென்பதைக் காண்போம்.
1. பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா அக்குளில் வீசும் துர்நாற்றாத்தைப் போக்க பெரிதும் உதவுகிறது. அதற்கு பேக்கிங் சோடாவை பவுடர் போன்று அக்குளில் தெளிக்கலாம். அல்லது பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பேக்கிங் சோடா அக்குளில் உள்ள அமிலத்தன்மையை நடுநிலையாக்கி, துர்நாற்றத்தைக் குறைக்கும்.
2. எலுமிச்சை
அக்குள் நாற்றம் அதிகமாக இருந்தால், எலுமிச்சை சாற்றுடன் சிறிது நீரை சேர்த்து கலந்து, அதை அக்குளில் தடவுங்கள். இப்படி செய்யும் போது, எலுமிச்சையில் உள்ள அமிலத்தன்மை, அக்குளில் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடும்.
3. ஆப்பிள் சீடர் வினிகர்
அக்குள் துர்நாற்றம் வீசும் போது, அந்த துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த ஆப்பிள் சீடர் வினிகர் உதவி புரியும். அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை நீருடன் கலந்து, அதை அக்குளில் தடவிக் கொள்ள வேண்டும். இப்படி தினமும் ஆடைகளை அணியும் முன் ஆப்பிள் சீடர் வினிகரை அக்குளில் தெளித்துக் கொண்டால், துர்நாற்றத்தைத் தடுக்கலாம். ஏனெனில் ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அமிலம் பாக்டீரியாக்களை அழிக்க உதவும்.
4. தக்காளி
எலுமிச்சையைப் போன்றே தக்காளியும் உடல் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராட உதவும். ஏனெனில் தக்காளியில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அன்டி-செப்டிக் பண்புகள் உள்ளன. இவை பாக்டீரியாக்களின் உருவாக்கத்தையும், வளர்ச்சியையும் தடுக்கும். அதற்கு தக்காளி சாற்றினை தினமும் அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவுங்கள். இப்படி செய்து வந்தால் அக்குள் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.
5. வேப்பிலை நீர்
வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இந்த வேப்பிலையை நீரில் கொதிக்க வைத்து, அந்நீரை அக்குளில் தடவி வந்தால், அக்குள் துர்நாற்றத்தைத் தடுக்கலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிகள் அனைத்தும் அக்குள் துர்நாற்றத்தைத் தடுக்க உதவும் இயற்கை வழிகளாகும். இவற்றில் உங்களுக்கு எது பொருத்தமாக இருக்குமோ, அவற்றைப் பயன்படுத்தி பயன்பெறுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Image Courtesy: Freepik



Click it and Unblock the Notifications