Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்!
தேங்காய் எண்ணெயைத் தவிர வேறு எந்த எண்ணெய்களைக் கொண்டு சருமத்தை அழகாக்கலாம்?
Skin Care Tips In Tamil: பொதுவாக சரும ஆரோக்கியத்திற்கு என்றாலே தேங்காய் எண்ணெய் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் உண்மையில் தேங்காய் எண்ணெய் மட்டுமில்லாமல் பிற எண்ணெய்களும் நம் சரும ஆரோக்கியத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
அந்த வகையில் ஷியா வெண்ணெய், ஆலிவ் எண்ணெய்கள் போன்ற பிற எண்ணெய்களும் நம் சரும ஆரோக்கியத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. நம் சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைப்பதில் இயற்கை எண்ணெய்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

இந்த எண்ணெய்கள் மூலம் நீங்கள் பொலிவான சருமத்தை பெற முடியும். அந்த வகையில் தேங்காய் எண்ணெயைத் தவிர எந்த மாதிரியான எண்ணெய்கள் எல்லாம் உங்கள் சருமத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது என்பதைப் பற்றி நாம் அறிந்து கொள்வோம்.
தோல் மற்றும் கூந்தலுக்கு பிற எண்ணெய்களை பயன்படுத்துவது பாதுகாப்பானதா?
தோல் மற்றும் கூந்தல் பராமரிப்பில் இயற்கை எண்ணெய்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. பண்டைய எகிப்து காலங்களில் கூட ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி உள்ளனர் என்று ஆராய்ச்சி கூறுகிறது. இந்த இயற்கை எண்ணெய்கள் உங்கள் சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து சரும அழகை மேம்படுத்த உதவும்.
சூரிய காந்தி போன்ற எண்ணெய்களில் அழற்சியை எதிர்க்கும் பண்புகள் உள்ளன. இது ஒரு இயற்கை மாய்ஸ்சரைசர் மாதிரி செயல்படுகிறது. இராசயனங்கள் இல்லாதது மற்றும் செலவுகள் குறைந்த ஒன்றாகவும் உள்ளது. தோல் வறட்சி போன்றவற்றை போக்க இயற்கை எண்ணெய்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
முகம் மற்றும் உடலுக்கு இயற்கை எண்ணெயை எப்படி பயன்படுத்த வேண்டும்?
முதலில் உங்கள் சருமத்திற்கு ஏற்ற எண்ணெயை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். சிலருக்கு முகப்பருக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் சருமத்திற்கு போதுமான அளவு எண்ணெயை பயன்படுத்தினால் போதும். உங்கள் தோல் எண்ணெயின் சிறந்த பண்புகளை உறிஞ்சி உங்கள் சருமத்திற்கு நல்ல பளபளப்பை கொடுக்கும்.
பயன்படுத்த வேண்டிய இயற்கை எண்ணெய்கள்:
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் சருமத்தால் எளிதில் உறிஞ்சப்படுகிறது. இதில் வைட்டமின் ஈ, கே, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது. டெர்மடிடிஸ் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கேரியரில் பயன்படுத்தும்போது சருமத்தை ஈரப்பதமாக்குவதில் ஆலிவ் எண்ணெயை விட தேங்காய் எண்ணெய் சிறந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உங்கள் முகம் மற்றும் உடம்பிற்கு சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெயை பயன்படுத்துங்கள்.
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது. ஆலிவ் ஆயிலில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே போன்ற சத்துக்கள் உள்ளன. 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நானோ மெட்டீரியல்ஸ் அண்ட் நானோ டெக்னாலஜி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு போன்ற சில ஆராய்ச்சிகளின் படி, ஆலிவ் ஆயில் சிறந்த மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. உங்கள் சருமத்தை வறண்டு போகாமல் சுத்தம் செய்ய உதவுகிறது.
சூரிய காந்தி எண்ணெய்
சூரிய காந்தி எண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஈ உள்ளது. இது சருமத்தால் எளிதாக உறிஞ்சப்பட்டு சிறந்த மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. பீடியாட்ரிக்ஸ் டெர்மட்டாலஜி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் ஆலிவ் எண்ணெயுடன் ஒப்பிடும்போது, சூரிய காந்தி எண்ணெய் குழந்தைகளின் சருமத்திற்கு ஒரு சிறந்த பாதுகாப்பாக செயல்படுகிறது என்று கூறியுள்ளது. அடோபிக் டெர்மடிடிஸ் (அரிக்கும் தோலழற்சியை போக்க உதவுகிறது.)
ஷியா வெண்ணெய்
ஆப்பிரிக்க ஷியா மரத்தின் கொட்டைகளிலிருந்து பெறப்பட்ட இந்த ஷியா வெண்ணெய் என்பது ஒரு கொழுப்பைப் போன்ற பொருளாகும். இந்த வெண்ணெய் திடமான வடிவில் காணப்படுகிறது. ஆர்கானிக் ஷியா வெண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தி வரலாம். உங்கள் சருமம் நல்ல மென்மையாக இருக்கும்.
ஜோஜோபா எண்ணெய்
ஜோஜோபா மெக்சிகோ மற்றும் அமெரிக்க தென்மேற்குப் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்டது. அங்கு அதன் எண்ணெய்கள் அதன் விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு பூர்வீக அமெரிக்க பழங்குடியினரால் மருத்துவ ரீதியாகப் பயன்படுத்தப்படுகின்றன.இத்தாலிய சொசைட்டி ஆஃப் டெர்மட்டாலஜி மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்களின் ஜர்னலில் வெளியிடப்பட்ட மதிப்பாய்வில், ஜோஜோபா எண்ணெய் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. காயங்களை குணப்படுத்தும் பண்புகளையும் கொண்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பாதாம் எண்ணெய்
பாதாம் பருப்பில் இருந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ, துத்தநாகம், புரதங்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற ஆரோக்கிய நன்மைகள் நிறைய காணப்படுகிறது. இது ஆலிவ் எண்ணெயை விட இலகுவான ஒன்றாக உள்ளது. பாதாம் எண்ணெய் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. உங்களுக்கு சென்ஸ்டிவ் சருமம் இருந்தால் சரும மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனை பேரில் பாதாம் எண்ணெயை பயன்படுத்தி வரலாம்.
திராட்சை விதை எண்ணெய்
திராட்சை விதை எண்ணெயில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ காணப்படுகிறது. மற்ற இயற்கை எண்ணெய்களுடன் ஒப்பிடும் போது இது எடை குறைந்தது. ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்ற நுண்ணறிவு இதழின் படி, செப்டம்பர் 2016 இல் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின்படி, இது ஆக்ஸிஜனேற்ற, நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இந்த எண்ணெயில் பல ஆக்ஸிஜனேற்ற நன்மைகளைக் கொண்ட பல பைட்டோ கெமிக்கல்கள் காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications











