Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
இன்ஸ்டாகிராமில் அழகாக ஜொலிக்கணுமா? அப்ப இந்த மேக்கப் டிப்ஸ்களை பின்பற்றுங்க...
Instagram Makeup Trends: தற்போது இன்ஸ்டாகிராம் என்பது மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக திகழ்ந்து வருகிறது. அதனால் தான் மக்களும் நிறைய லைக்குகளை அள்ள நிறைய போட்டோக்களை இங்கே போடுவது உண்டு.
இருப்பினும் இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் ட்ரெண்ட் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த லேட்டஸ்ட் ட்ரெண்ட்டுக்கு தகுந்த மாதிரி உங்கள் மேக்கப் இருப்பது மிகவும் அவசியம். உங்கள் புகைப்படங்களில் உங்கள் மேக்கப் ஒரு மிகப்பெரிய பங்கை வகிக்கிறது.

எனவே உங்கள் இன்ஸ்டாகிராம் போட்டோ அழகாக தெரிய நீங்கள் எந்த மாதிரியான மேக்கப் டிப்ஸ்களை பின்பற்ற வேண்டும் என்பது பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம். நீங்கள் அதிகமான லைக்குகளை இன்ஸ்டாவில் அள்ள நினைத்தால் இந்த மேக்கப் டிப்ஸ்கள் உங்களுக்கு கை கொடுக்கும்.
ஹலோ ஐஸ்
ஒரு புகைப்படத்தை எடுத்தால் அதில் மிக முக்கிய அம்சமாக இருப்பது உங்கள் கண்கள் தான். எனவே கண்களை அழகாக காட்டும் மேக்கப்பில் ஈடுபடுவது மிகவும் அவசியம். உங்கள் கண்களில் மேல் இமைகளுக்கு மேல் இடும் ஐ ஷேடோவை நடுப்பகுதியில் சரியாக அப்ளை செய்ய வேண்டும். அதன் விளிம்புகளில் சரியாக ப்ளண்ட் செய்ய வேண்டும். ஹலோ ஐஸ் மேக்கப் லுக் உங்கள் இன்ஸ்டாகிராம் போட்டோவிற்கு மிகச் சிறந்த அழகை கொடுக்கும்.
Cruellade vil கருப்பு மற்றும் வெள்ளை நிற இமைகள் மேக்கப்
பொதுவாக இமைகள் என்றாலே நாம் கருப்பு நிறத்தை தான் பயன்படுத்துவோம். ஆனால் கருப்பு மற்றும் வெள்ளை நிற இமைகள் உங்கள் கண்களுக்கு கூடுதல் அழகு சேர்க்க உதவுகிறது. இந்த லுக் உங்களுக்கு ஒரு புது வித அனுபவத்தை கொடுக்கும். உங்கள் கண் இமைகள் கவர்ச்சிகரமாக தெரிய இது போன்ற Cruellade vil மேக்கப் போடலாம்.
மினரல் மேக்கப்
மினரல் மேக்கப் உங்களுக்கு ஒரு ஆழமான கோட்டிங்கை தருகிறது. இதன் மூலம் உங்கள் முகத்தில் உள்ள காயங்கள் மற்றும் தீக்காயங்களை கூட மறைக்க முடியும். இது முழு கவரேஜ் மற்றும் குறைபாடற்ற சருமத்தை தர உதவுகிறது. இந்த மினரல் மேக்கப் அனைத்து வகையான சரும பிரச்சனைகளையும் போக்க உதவுகிறது. தற்போது மினரல் மேக்கப் பவுடர் ஆன்லைனில் கிடைக்கிறது. ஏகப்பட்ட பிராண்டுகளில் இந்த மினரல் மேக்கப் பவுடர் கிடைக்கிறது. இதை வாங்கி பயன்படுத்தலாம். இது உங்கள் முகத்தில் உள்ள தழும்புகளை மறைத்து இன்ஸ்டாகிராம் போட்டோவில் உங்களை அழகாக காட்டும்.
Guide tape பயன்பாடு
தற்போது இன்ஸ்டாகிராமில் கண்களில் ஐ லைனரை அப்ளை செய்ய டேப்பை பயன்படுத்துகின்றனர். கண்களின் ஓரப் பகுதியில் டேப்பை வைத்து ஐ ஷேடோ மற்றும் ஐ லைனரை அப்ளை செய்கின்றனர். இதன் மூலம் நீங்கள் ஒரு துல்லியமான ஐ மேக்கப்பை பெற முடியும். இதன் மூலம் பூனைக்கண் மற்றும் உயர்த்தப்பட்ட கண் தோற்றத்தை பெற இந்த டேப் பயன்பாடு உதவுகிறது. முதன் முதலில் ஐ லைனர் மற்றும் ஐ ஷேடோ பயன்படுத்துபவர்களுக்கு இந்த டேப் ட்ரிக்ஸ் கை கொடுக்கும்.
'7' சிறப்பம்சம்
உங்கள் மேக்கப்பில் நீங்கள் ஹைலைட்டர் பயன்படுத்தும் போது 7 என்ற வடிவத்தை பின்பற்றுவது நல்லது. இதன் மூலம் நீங்கள் எளிதாக மேக்கப் செய்ய முடியும். இந்த மேக்கப் உங்களுக்கு இயற்கையான பளபளப்பை தருகிறது. இந்த 7 என்ற ஹைலைட்டிங் முறையை பயன்படுத்தும் போது புருவ எலும்பில் இருந்து தொடங்கி, உங்கள் கன்னத்து எலும்புகளில் மேக்கப் பவுடரை அப்ளை செய்ய வேண்டும். இதன் மூலம் உங்கள் முகத்தில் ஹைலைட்டரை சரியாக வைக்க முடியும். பிறகு ப்ளஷ் மற்றும் காண்டூர் கொண்டு கூடுதல் அழகுபடுத்திக் கொள்ளுங்கள்.
கவாய் போல மின்னும் கண்கள்
இது ஆசியாவின் ஹாட் மேக்கப் ட்ரெண்ட்டாக உள்ளது. கண்களைச் சுற்றி கண்கள் மின்னுவது போல மேக்கப் போடுவது உங்களை வேடிக்கையாகவும் அதே நேரத்தில் இளமையாகவும் காட்ட உதவுகிறது. இதற்கு திரவ வடிவத்தில் கிடைக்கும் மின்னும் ஐ லைனரை பயன்படுத்துங்கள். உங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஒரு அழகான இளமையான தோற்றத்தை பெற நீங்கள் விரும்பினால் இந்த கவாய் மேக்கப் உங்களுக்கு கை கொடுக்கும்.
இரட்டை கோடுகள் கொண்ட பூனை மேக்கப்
இப்பொழுது எல்லாம் கண்களுக்கு அருகில் பயன்படுத்தும் ஐ லைனரை இரண்டு கோடுகளாக இடுகின்றனர். கண்களில் ஐ லைனரை இரண்டு கோடுகளாக இடுவது உங்களுக்கு பூனைக்கண் லுக்கை கொடுக்கும். இதனால் உங்கள் கண்கள் கவர்ச்சிகரமானதாக தெரியும். இது உங்களுக்கு எப்பொழுதும் ஒருவித தனித்துவமான தோற்றத்தை கொடுக்கும். எனவே கண்களின் ஓரங்களில் இரட்டை கோடுகளை இடலாம்.
ஃபாக்ஸ் ஃப்ரீக்கிள்ஸ்
ஃபாக்ஸ் ஃப்ரீக்கிள்ஸ் மேக்கப் என்பது ட்ரெண்ட்டிங் ஆன ஒன்றாக உள்ளது. மேக்கப் மூலம் முகத்தில் சரும புள்ளிகளை இடுகின்றன. இது உங்களுக்கு இயற்கையான லுக்கை கொடுக்கும். குறிப்பாக இதற்கு முன்னாடி சரும புள்ளிகள் என்பது அழகை கெடுக்கும் விஷயமாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அதையே மேக்கப்பாக மாற்றி உள்ளனர். நிறைய சினிமா பிரபலங்கள் இந்த ஃப்ரீக்கிள்ஸ் மேக்கப்பை விரும்புகின்றனர். உங்கள் மூக்கு மற்றும் கன்னப் பகுதிகளில் இந்த நிறப் புள்ளிகளை பெற வெறும் ஸ்மட்ஜ்-ப்ரூஃப் பிரவுன் ஐலைனர் இருந்தால் போதுமானது. நீங்களே எளிதாக இந்த ஃபாக்ஸ் ஃப்ரீக்கிள்ஸ் மேக்கப்பை போடலாம்.
'ஷை' ப்ளஷ்
கன்னங்களில் ஆரோக்கியமான ப்ளஷ் தோற்றத்தை பெற இந்த 'ஷை' ப்ளஷ் உதவுகிறது. இதன் மூலம் நீங்கள் வெட்கமாகவோ அல்லது மகிழ்ச்சியாகவோ இருக்கும் போது நீங்கள் அழகான சிவந்த கன்னங்களை பெற முடியும். எனவே உங்கள் கன்னங்களை அழகாக காட்ட இந்த 'ஷை' ப்ளஷ்யை பயன்படுத்தி வாருங்கள்.



Click it and Unblock the Notifications