Latest Updates
-
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
உங்க சருமத்துல வால்நாட் ஆயிலை யூஸ் பண்ணா... என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா?
நம் உடல் நலத்தை பராமரிப்பது போல் நம் சருமத்தையும் எப்பொழுதும் ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும். அந்த வகையில் பார்க்கும் போது சரும பராமரிப்புக்கு என்று ஏகப்பட்ட எண்ணெய்கள் இருந்தாலும் வால்நட்ஸ் எண்ணெய் சிறந்த குணநலன்களை கொண்டுள்ளது.
வால்நட் எண்ணெய் சூரிய ஒளிக் கதிர்களில் இருந்து நம் சருமத்தை காக்கிறது. வால்நட் எண்ணெயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற பல பொருட்கள் உள்ளன. வால்நட் எண்ணெய் நம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சரும பிரச்சனைகளை எதிர்த்து போராடவும் உதவுகிறது.

சரி வாங்க இந்த வால்நட் எண்ணெயைக் கொண்டு நம் சருமத்தை எப்படி பராமரிக்கலாம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
சருமத்திற்கு ஈரப்பதம் மற்றும் ஊட்டமளிக்கிறது
வால்நட் எண்ணெய் ஒரு சிறந்த இயற்கை மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை வழங்குகிறது. இந்த வால்நட் எண்ணெயில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் வைட்டமின் பி மற்றும் ஈ போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இது சருமத்தை ஆழமாக பராமரிக்க உதவுகிறது. வால்நட் எண்ணெயை நீங்கள் தவறாமல் பயன்படுத்தி வந்தால் சருமம் மிருதுவாகவும், மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
வயதான அறிகுறிகளை எதிர்த்து போராட உதவுகிறது
சருமத்திற்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடன்கள் வால்நட் எண்ணெயில் உள்ளது. இது சருமத்தில் உள்ள நேர்த்தியான கோடுகள், சரும சுருக்கங்களை போக்க உதவுகிறது. வால்நட் எண்ணெயில் ப்ரீ ரேடிக்கலை எதிர்த்து போராடும் பண்புகள் உள்ளன. எனவே உங்கள் சருமங்களில் வால்நட் எண்ணெயை சேர்ப்பதன் மூலம் சரும சுருக்கங்கள் மற்றும் சரும கோடுகளை போக்க முடியும்.
அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது
வால் நட் எண்ணெய் எரிச்சலூட்டும் சருமம் உள்ளவர்களுக்கு அழற்சியை குறைக்க உதவுகிறது. எனவே அரிப்பு மற்றும் எரிச்சல் இருப்பவர்கள் வால்நட் எண்ணெயை மேற்பூச்சாக பயன்படுத்தி வரலாம். இது அரிக்கும் தோலழற்சி மற்றும் சொரியாஸிஸ் போன்ற பிரச்சினைகளை போக்க உதவுகிறது.
சிவத்தல், அரிப்பு மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மென்மையான சருமம் மற்றும் உணர்திறன் உள்ளவர்கள் கூட இந்த வால்நட் எண்ணெயை பயன்படுத்தி வரலாம். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்ற ஒன்றாக உள்ளது.
முகப்பருக்களை தடுக்கிறது
வால்நட் எண்ணெயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் முகப்பருக்களை போக்க பயன்படுகிறது. இது சரும துளைகளை சுத்தம் செய்து அழுக்குகளை அகற்றுகிறது. முகப்பருக்களை போக்கி ஆரோக்கியமான சருமத்தை தருகிறது. எனவே வால்நட் எண்ணெயை முகப்பருவிற்கு தாராளமாக பயன்படுத்தி வரலாம்.
தோலின் தன்மையை மேம்படுத்துகிறது
வால்நட் எண்ணெய் ஒரு இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட்டாக செயல்படுகிறது. இது சருமத்தில் உள்ள மென்மையான செல்களை அகற்றி தோலின் தன்மையை மேம்படுத்துகிறது. இந்த வால்நட் எண்ணெயில் உள்ள ஊட்டமளிக்கும் பொருட்கள் தோலில் ஊடுருவி புதிய தோல் செல்களை மீளுருவாக்கம் செய்கிறது. இதனால் உங்கள் சருமம் இளமையாகவும், சீரான நிறம் கொண்டதாகவும் இருக்கும்.
வால்நட் எண்ணெய் வயதான அறிகுறிகளை போக்க உதவுகிறது. வீக்கத்தைக் குறைக்கும் திறன்கள் இதில் காணப்படுகிறது. வறண்ட சருமத்தை போக்கி சருமத்திற்கு உள்ளிருந்து ஊட்டமளிக்கிறது.
சரும நோய்களை விரட்டுகிறது
வால்நட் எண்ணெய் சரும நோய்களை விரட்டும் தன்மை கொண்டது. இது எக்ஸிமா மற்றும் அரிக்கும் தோலழற்சி போன்ற சரும நோய்களை விரட்ட உதவுகிறது. இது காயங்களை விரைவாக குணப்படுத்த உதவுகிறது. சருமத்தை சீர் செய்யும் முகவராகவும் செயல்படுகிறது.
சரும ஈரப்பதத்தை தக்க வைக்கிறது
வால்நட் எண்ணெய் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. இது சருமத்தை மென்மையாக்குகிறது. வால்நட் எண்ணெய் ஒரு மசகு பொருள் மாதிரி செயல்பட்டு நீர் இழப்பை தடுக்க உதவுகிறது. சருமம் என்றும் ஈரப்பதத்துடன் மென்மையாக வைக்க உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் ஈ சுற்றுப்புற காரணிகளான சூரிய ஒளி, சுற்றுப் புற மாசுக்கள் இவற்றில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.



Click it and Unblock the Notifications

