Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்கள் உங்களுக்கு எதிரியானால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம் - ஜாக்கிரதை -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..! -
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
100 ஆண்டுகள் கழித்து நிகழும் அபூர்வ கிரக பெயர்ச்சி: ஜூன் 11-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்! -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. ஒருவாட்டி இந்த சட்னியை செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள சமசப்தக் யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்! -
கொத்தமல்லி மாங்காய் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாருங்க.. -
உஷார்.. இந்த 5 உணவுகள் ஒருவரது ஆயுளை பாதியாக குறைக்குமாம்.. எச்சரிக்கும் டாக்டர். பிள்ளை!
உங்க முடி சாஃப்டா இருக்கணுமா? இதோ இந்த மாஸ்கை ட்ரை பண்ணுங்கள்..!
கோடை காலத்தில் உங்க முடி கட்டுகடங்காமல் வறண்டு இருந்தால் நீங்கள் வாழைப்பழ பேக்கை தேர்வு செய்யலாம். இவை கூந்தலுக்கு உடனடியாக போஷாக்கும் ஊட்டச்சத்தும் கொடுக்கும். ஒரு முறை பயன்படுத்தினாலே பலன் உடனடியாக கிடைக்கும். இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்குகள் உண்மையில் உலர்ந்த, சேதமடைந்த முடியைப் புதுப்பிக்க சிறந்தவை. ஒரு பழுத்த வாழைப்பழத்தில் அதிக ஈரப்பதம் உள்ளது மற்றும் வைட்டமின்கள் ஏ, பி6, சி மற்றும் டி, கால்சியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இந்த ஊட்டச்சத்துக்கள் முடியை வலுப்படுத்த உதவுகின்றன. அதே நேரத்தில் மென்மையாகவும், பளபளப்பாகவும், மேலும் சமாளிக்கக்கூடியதாகவும் மடியை மாற்றுகின்றன. இது உங்கள் தலைமுடிக்கு மட்டுமல்ல, உங்கள் சருமத்திற்கும் நன்மை பயக்கும் ஈரப்பதமூட்டும் விளைவுகள் ஆகும். அதாவது, உங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட வாழைப்பழ ஹேர் மாஸ்க் உங்கள் உச்சந்தலையை சீரமைத்து, பொடுகைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

வாழைபழம் பேக் தயாரிக்க தேவையானவை
1. பழுத்த வாழைப்பழம் - 1
2. தயிர் - 1 கரண்டி
3. தேங்காய்ப்பால் - 1 கரண்டி
4. சுத்தமான ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
5. கற்றாழை சாறு - தேவைக்கு ஏற்ப
செய்முறை
முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கி நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். உங்கள் கைகளால் மசித்தாலும் போதும். பிறகு இதில் கெட்டித்தயிர், தேங்காய்ப்பால் ( முதல் முறை பிழிந்து எடுக்கப்பட்ட பால்) ஆலிவ் எண்ணெய், கற்றாழை சாறு அனைத்தையும் சேர்த்து அகலமான பாத்திரத்தில் போட்டு மத்து கொண்டு நன்றாக கடையவும். அல்லது மிக்ஸியில் சேர்த்து அடிக்கவும் செய்யலாம். இவை அனைத்தும் சேர்ந்து க்ரீம் பதத்துக்கு வரும். இவை அதிகளவு நீர்த்து போகாமல் இருக்கும்படி பார்த்துகொள்வது அவசியம்.
இந்த பேக்கை முடிக்கு பயன்படுத்தும் போது உங்க முடி அழுக்கில்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். அப்படி அழுக்கு இருந்தால் பேக் சரியாக கூந்தலில் பிடிக்காது. சுத்தமாக இருந்தால் மட்டுமே பேக் போடலாம். பிறகு முடியை பாகங்களாக பிரித்து ஸ்கால்ப் பகுதியிலும் தலைபகுதியிலும் ஹேர் பிரஷ் கொண்டு அப்ளை செய்ய வேண்டும்.. இதையே முடியின் வேர்ப்பகுதி வரை அனைத்து இடங்களிலும் நன்றாக தடவ வேண்டும். இவை குளுமையை உண்டாக்காது என்பதால் 40 நிமிடங்கள் வரை தலையில் ஊறவிடலாம்.
பிறகு தலையில் நீர் தெளித்து அந்த க்ரீம் போக கசக்கி அதன் பிறகு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தி கூந்தலை அலசி எடுங்கள். ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் இப்படி செய்துவந்தால் கூந்தல் மென்மையாகும். கட்டுக்குள் வரும் பளபளப்பும் கூடும். முடி உயிரூட்டம் பெறுவதால் உதிர்வு நிற்கும். அடர்த்தி அதிகரிக்கும். முடி வலுவாகவும் இருக்கும். கூடுதலாக இதில் தயிர் சேர்ப்பதால் கூந்தலில் பொடுகு பிரச்சனைகள் இருந்தாலும் நீங்கிவிடும்.
வாழைப்பழத் தோல்கள் பழத்தை விட வைட்டமின்கள் நிறைந்ததாக இருக்கலாம், அதாவது அவை இயற்கையான முடி தயாரிப்பாக குறைந்தது சமமாக நன்மை பயக்கும். பலர் தோலை நேரடியாக தலைமுடியில் தேய்த்து அல்லது வாழைப்பழத்தோல் எண்ணெயைப் பயன்படுத்துவார்கள். தோலை சிறிய துண்டுகளாக நறுக்கி, ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெயுடன் அடுப்பில் சில நிமிடங்கள் சூடாக்கி, எண்ணெய் நன்றாக காய்ந்த பின்னர் அதில் சேர்க்கவும்.



Click it and Unblock the Notifications