Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
கரு கருணு முடி அடர்த்தியாக வளரணுமா? இதோ இந்த ஆம்லா ஹேர் மாஸ்கை ட்ரை பண்ணுங்க..!
benefits of Amla hair Mask : இந்திய கூஸ் பெர்ரி என்று அழைக்கப்படும் ஆம்லா நெல்லிகாய் என்றும் அழைக்கப்படுகிறது.. இந்த ஆம்லா முடி பிரச்சனைகளை தடுக்க மிகவும் உதவியாக உள்ளது. முடி உதிர்வை குறைக்கிறது. கூந்தலுக்கு பிரகாசம், மென்மை, நல்ல கருமையான நிறம் ஆகிவற்றை சேர்க்கிறது.
ஆம்லாவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்களுடன் ஒப்பிடும்போது, நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளது. வைட்டமின் சி முடிக்கு தேவையான கொலாஜனை உற்பத்தி செய்கிறது. முடி உடையாமல் முடி நெகிழ்ச்சியை மேம்படுத்துகிறது.

அதுமட்டுமின்றி, நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உச்சந்தலையை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல், பொடுகுடன் தொடர்புடைய செதில் பொருளை நீக்குகிறது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது புதிய மயிர்க்கால்களை உருவாக்க உதவுகிறது. முடிக்கு நெல்லிகாயை பயன்படுத்துவது நிச்சயமாக மாற்றங்களைக் ஏற்படுத்தும்.. அது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதுமட்டுமல்லாமல், வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட நெல்லிக்காய் ஹர் மாஸ்க் கூந்தல் பராமரிப்புக்கு சிறந்தவை. அந்த ஹர் மாஸ்கை எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
ஆம்லா எண்ணெய்
நெல்லிகாயை சிறு துண்டுகளாக நறுக்கி, அதில் 5-6 செம்பருத்தி இலைகள், ஒரு கப் தேங்காய் எண்ணெய் சேர்த்து சிறு தீயில் சூடாக்கவும். 20 நிமிடங்கள் சூடாக்கி, பின்னர் தீயை குறைத்து எண்ணெயை ஆற விடவும். பின்னர் அதை காற்று புகாத கொள்கலனில் சேமித்து, தேவைப்படும் போது தொடர்ந்து பயன்படுத்தவும்.
முடிக்கு ஊட்டமளிக்கும் ஹேர் மாஸ்க்
முதலில் ஹர் மாஸ்க் செய்ய ஒரு மேசைக்கரண்டி வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் அந்த வெந்தயத்தை மிக்ஸியில் நன்றாக அரைக்க வேண்டும்.. இப்போது மென்மையான பேஸ்ட் கிடைக்கும்.. இதில் ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் தூள் மற்றும் தயிர் சேர்த்து மென்மையான பேஸ்ட் செய்யவும். இந்த ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் ஆம்லா மாஸ்க்கை சமமாகப் பயன்படுத்த வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளிக்கவும்.
பொடுகு எதிர்ப்பு ஹர் மாஸ்க்
ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் தூள், ஒரு டீஸ்பூன் மஞ்சள் பவுடர் மற்றும் 1 துளி ரோஸ்மேரி எண்ணெய் ஆகியவற்றை கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் கலந்து பேஸ்ட் செய்யவும். பின்னர் இந்த பேஸ்டை உச்சந்தலையில் தடவவும். ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் கழித்து ஷாம்பு வைத்து குளிக்கவும்.
கூந்தல் பளபளக்க
ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் 10 சொட்டு நெல்லிக்காயை கலக்கவும். ஒரு கப் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேனை கலக்கவும். பின்னர் முடியை முதல் நாளே நன்கு ஷாம்பு செய்து வைத்திருக்க வேண்டும்.. அடுத்த நாள் மேலே சொன்னவற்றை இதலையில் அப்ளை செய்து 5 நிமிடம் மசாஜ் செய்து, கொள்ளவும்.. பின்னர் குளிர்ந்த நீரில் குளித்து முடியை நன்கு அலசி விட வேண்டும்..



Click it and Unblock the Notifications