For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

30 வயசுக்கு முன்னாடி இதெல்லாம் செஞ்சுருங்க!

30 வயதிற்குள்ளாக உங்கள் சருமத்தை அழகுபடுத்த என்னென்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

By Kripa Saravanan
|

பெண்கள் 30 வயதை நெருங்கும்போது அவர்களுடைய சருமம் பல்வேறு மாற்றங்களை சந்திக்கிறது. சருமத்தில் கருந்திட்டுகள் தோன்றுவது, கொலோஜென் உற்பத்தி குறைவது, சருமத்தின் எலாஸ்டிக் தன்மை குறைவது, போன்ற பல்வேறு மாற்றங்கள் உண்டாகிறது. சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதால், தோல் சுருக்கம், கருமை போன்ற சரும தொடர்பான தொந்தரவுகள் நீங்கும். வயது அதிகரிக்கும்போது பல்வேறு சரும தொடர்பான பிரச்சனைகள் வருவது இயல்பு. இவை, பெண்களின் அழகை பாதிக்கும் வகையில் உள்ளன.

வயது முதிர்விற்கான காரணங்களை தடுத்து, சருமத்தை இளமையாக வைக்க பல வழிகள் உண்டு. ஆனால் , சரும பாதுகாப்பை செய்ய வேண்டியது, உங்கள் 20 களில், 30 வயதை நெருங்குவதற்கு முன், தொடர்ச்சியாக சரும பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவதால், 30 வயதிற்கு பிறகும், உங்கள் இளமையை தக்க வைக்கலாம்.

உங்கள் சரும அழகை மேம்படுத்தவும், வயது முதிர்வை தடுக்கவும், வயது முதிர்வால் உண்டாகும் சரும பிரச்சனைகளை போக்கவும், எளிய முறைகள் இங்கே வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை படித்து முயற்சித்து பலன் பெறுங்கள். இதனால் உங்கள் அழகும், இளமையும் நிரந்தரமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்ணுக்கு க்ரீம்

கண்ணுக்கு க்ரீம்

கண்ணை சுற்றியுள்ள பகுதி மிகவும் மென்மையாக இருக்கும். ஆகவே எளிதில் சேதமடையும் வாய்ப்புகள் உண்டு. சருமத்தின் மற்ற பகுதிகளை விட, எளிதில் முதிர்வடையும் பகுதியாகவும் இந்த கண் பகுதி இருப்பதால், அதிகமான கவனம் இந்த பகுதிக்கு தரப்பட வேண்டும். கண்ணை சுற்றியுள்ள பகுதி, ஈரப்பதத்தோடும் நீர்ச்சத்தோடும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆகவே அவற்றை தரும் க்ரீம்களை பயன்படுத்தி, கண்களை பாதுகாப்பது நல்லது.

பேசியல் மிஸ்ட் :

பேசியல் மிஸ்ட் :

மற்றொரு முக்கியமான சரும பாதுகாப்பு என்பது முகத்திற்கு பயன்படுத்தும் பேசியல் ஆகும். 30 வயதை நெருங்கும்போது, முகம் தன்னுடைய இயற்கையான அழகை இழக்க நேரிடுகிறது. இத்தகைய நிகழ்வை தடுத்து, முகத்திற்கு புத்துணர்ச்சியை கொடுக்க, பேஷியல் மிஸ்ட்டை பயன்படுத்தவும். இந்த பேஷியல் மிஸ்டை பயன்படுத்துவதால் உங்கள் சருமம் பொலிவை பெறுகிறது. மேலும், உங்கள் அழகை மெருகேற்றி, வயது முதிர்வை தடுக்கிறது.

ஸ்க்ரப் :

ஸ்க்ரப் :

சருமத்தில் உள்ள அழுக்கை வெளியேற்றி சருமத்திற்கு புத்துணர்ச்சி கொடுப்பது என்பது ஒரு பொதுவான முறையாகும். இருந்தாலும்,ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு, சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, சரும துளைகளில் உள்ள அழுக்கை போக்க வேண்டியது அத்தியாவசியமாகும். ஆகவே ஒரு சிறந்த ஸ்க்ரப் பயன்படுத்தி இத்தகைய அழுக்குகளை வெளியேற்றி தூய்மையான சருமத்தை பெறுவதால் உங்கள் அழகு அதிகரிக்கும். வயதும் குறைந்தது போல் தோன்றும். வாரத்திற்கு ஒரு முறை அல்லது 2 முறை இந்த ச்க்ரப்பை பயன்படுத்தலாம்.

வைட்டமின் சி சீரம் :

வைட்டமின் சி சீரம் :

வைட்டமின் சி ஒரு சிறந்த அன்டி ஆக்ஸ்சிடென்ட் ஆகும். இந்த வைட்டமின் , சருமத்தில் கொலோஜென் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை மேம்படுத்துகிறது. வைட்டமின் சி சீரம், வயது முதிர்வை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. இறுக்கமான, திடமான மற்றும் பொலிவான சருமத்தை பெற, உங்களுக்கு 30 வயது நெருங்குவதற்கு முன், இந்த வைட்டமின் சி சீரத்தை பயன்படுத்தவும்.

முகத்திற்கான எண்ணெய் :

முகத்திற்கான எண்ணெய் :

இத்தகைய எண்ணெய்யில், சரும நன்மை தரும், ஊட்டச்சத்துகளும், வைட்டமின்களும் உள்ளன. இத்தகைய தன்மைகள் கொண்ட எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்துவதால், வயது முதிர்வு தடுக்கப்படுகிறது, மற்றும் சருமம் சோர்வாக காட்சியளிப்பதை தடுக்கிறது. ஆகவே 30 வயது நெருங்குவதற்குள், முகத்திற்கான எண்ணெய்யை பயன்படுத்த தவறாமல் இருப்பது, வயது முதிர்வை கட்டுபடுத்துகிறது. ஆகவே உங்கள் சருமம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல், அழகுடன் காணப்படுகிறது.

வயது முதிர்வை தடுக்கும் க்ரீம் :

வயது முதிர்வை தடுக்கும் க்ரீம் :

வயது முதிர்வை தடுக்கும் க்ரீம் என்பது ஒரு அவசியமான செலவாகும். இத்தகைய கிரீம்களில், அதிக அளவிலான சக்திமிக்க அன்டி ஆக்ஸ்சிடென்ட் உள்ளன. இவை, சருமத்தை தீங்கு விளைவிக்கும் கூறுகளில் இருந்து பாதுகாக்கின்றன. ஆனால், இந்த வயது முதிர்வை குறைக்கும் க்ரீம்களை உங்கள் 30 வயதிற்குள் பயன்படுத்துவது நல்ல பலனை கொடுக்கும்.

 முகத்திற்கான மாஸ்க் :

முகத்திற்கான மாஸ்க் :

முகத்திற்கு மாஸ்க் பயன்படுத்துவதால் பல நல்ல விளைவுகள் சருமத்திற்கு உண்டாகிறது. வயது முதிர்வை தடுக்கும் பல்வேறு மாஸ்குகள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. கொலோஜென் உற்பத்தியை அதிகரிக்கும், சுருக்கத்தை குறைக்கும் க்ரீம்களை வாரத்தில் ஒரு முறை பயன்படுத்தலாம். இவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதால் 30 வயதிற்கு பிறகும் உங்கள் அழகை பராமரிக்கலாம்.

சன்ஸ்க்ரீன் :

சன்ஸ்க்ரீன் :

சரும பாதுகாப்பு நிபுணர்கள், பெண்களை வெளியில் செல்வதற்கு முன், சன்ஸ்க்ரீன் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறார்கள். இளம் வயதில், அதிகமாக வெயிலில் அலையும்போது, எந்த ஒரு மாற்றத்தை காட்டாத உங்கள் சருமம், 30 மற்றும் 40 வயதிற்கு மேல், இதற்கான பாதிப்பை உங்கள் சருமம் வெளிபடுத்துகிறது. ஆகவே, தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க, சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது அவசியம். இதனால் உங்கள் அழகு நிலைத்து நிற்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

things you need to work into your skin care routine before you turn 30

things you need to work into your skin care routine before you turn 30
Desktop Bottom Promotion